வியாழன், 26 பிப்ரவரி, 2015

தினை அரிசி உப்புமா செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
 
உடலை உறுதிப்படுத்தும் தினை அரிசி உப்புமா:-
****************************************
தேவையானவை:

தினை - 200 கிராம்,
நீர் - 600 மி.லி,
பெரிய வெங்காயம், தக்காளி, கேரட் - தலா 1,
துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன், பச்சைப் பட்டாணி - 50 கிராம், எண்ணெய் - 50 மி.லி,
கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உமி நீக்கிய தினை அரிசியை வறுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் வறுத்த தினையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி, வெந்ததும் இறக்கவும். கொத்துமல்லித் தழை, தேவையானால் 2 டீஸ்பூன் நெய் சேர்க்க, சுவையான தினை உப்புமா தயார்.
பலன்கள்:
உடல் வலிமையுடன் உறுதியாக இருக்கும். புரதம், இரும்பு, பி-வைட்டமின், தாது உப்புகள், கால்சியம் இதில் நிறைந்து இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஃபைடேட், ஃபைட்டிக் அமிலம், இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி :-

பொது நலம் கருதி வெளியிடுவோர்:-
கடலூர். S. அரங்கநாதன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக