சனி, 26 ஜூலை, 2014

உவமையால் விளக்கப்பெறும் பொருள்கள்-

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை

நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல - நிலையாமை

காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை

நிலத்தறைந்தான் கை பிழையாதற்று - துன்பம்

விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது

புதையல் காத்த பூதம் போல - பயனின்மை

தாமரை இலை தண்ணீர் போல - பற்றற்றது

பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி

கடல் மடை திறந்த வெள்ளம் போல - விரைவாக வெளியேறுதல்

உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு

இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி

புலி சேர்ந்து போகிய கல்லனை போல - வயிறு

சிப்பிக்குள் முத்து போல - மேன்மை

உமிகுற்றி கை வருந்தல் போல - பயனற்ற சொல்

நீரும் நெருப்பும் போல - விலகுதல்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் - முயற்சிக்கேற்ற பலன்

எட்டாப்பழம் புளித்தது போல - விலகுதல்

கடன்பட்டவர் நெஞ்சம் போல - வேதனை

நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளரின் தொகுப்பு

உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு

அன்றளர்ந்த தாமரை போல - சிரித்த முகம்

பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல்

குன்றேறி யானை போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு

கனியிருப்ப காய்கவர்ந்தற்று - இன்னா சொல்

உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு

பகலவனை கண்ட பனிபோல - துன்பம் நீங்கிற்று

சிறுதுளி பெரு வெள்ளம் - சேமிப்பு

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம், பந்தம்

நகமும் சதையும் போல - ஒற்றுமை

நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை

கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு

அடியற்ற மரம் போல - வீழ்ச்சி

செல்லரித்த நூலை போல - பயனின்மை

வேலியே பயிரை மேய்ந்தது போல - நம்பிக்கை துரோகம்

கிணற்றுத் தவளை போல - அறியாமை

செவிடன் காதில் ஊதிய சங்கு போல - பயனற்றது

அச்சில் வார்த்தாற் போல - உண்மைத் தன்மை

ஊமை கண்ட கனவு போல - இயலாமை

மதில் மேல் பூனை போல - முடிவெடுக்காத நிலை

பசுத்தோல் போர்த்திய புலி - வஞ்சகம்

குரங்கு கையில் பூமாலை போல - பயனற்றது

நீறு பூத்த நெருப்பு போல - பொய்த்தோற்றம்

இலைமறை காளிணி போல - மறைபொருள்

அத்தி பூத்தாற்போல - எப்பொழுதாவது

பசுமரத்தாணி போல - ஆழமாக பதித்தல்

நாய் பெற்ற தெங்கப்பழம் - அனுபவிக்க தெரியாமை

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்தை

மழை காணா பயிர் போல - வாட்டம் அதிகப்படுத்துதல்

திருடனுக்கு தேள் கொட்டியது போல - தவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக