சனி, 26 ஜூலை, 2014

அளபெடை -இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

  அளபெடை

ஓர் செய்யுளில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை

1.உயிரளபெடை
**************
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது உயிரளபெடை யாகும்.

செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)

என இது 3 வகைப்படும்.

செய்யுளிசையளபெடை (அ)
------------------------------------------
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறுபெயர் இசை நிறையளபெடை.

(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்லபடாஅ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்

சொல்லிசையளபெடை (இ)
-------------------------------------
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச் சொல்லை வினையெச்சசொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை என்பதாகும்.

(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ

இன்னிசையளபெடை (உ)
-----------------------------------
செய்யுளில் ஓசை குறையாத போதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்

(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்

2.ஒற்றளபெடை
**************
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும். இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.

(எ.கா) கண்ண்கருவினை
கலங்ங்குநெஞ்சமில்லை
இலஃஃகுமுத்தின்
மடங்ங்கலந்த.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக