வியாழன், 19 மார்ச், 2015

அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா -2015

சாலையில் பாதுகாப்பாக பயணிப்போம்,வாழ்நாள் இன்பம் பெறுவோம்.....
மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா நம்ம சத்தியமங்கலத்திற்கு அனைவரும் வருக,அம்மன் அருள் பெற்று செல்க...



ஹலோ போலீஸ் alert360 / hallo police அலெர்ட் 360

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் வசதி தமிழமெங்கும் பரவ வேண்டும்.

           நாட்டிலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில், புகார் தெரிவிப்பவரின் இருப்பிடத்தை அறியும் "அலெர்ட் 360' தொழில்நுட்ப வசதி புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து இங்கு வருவோருக்கும், ராமசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் தெரிவித்தார்.
இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
     இந்த மாவட்டத்தில் "ஹலோ போலீஸ்' சேவை கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவைத் திட்டத்தில் கூடுதல் வசதியாக புகார் தெரிவிப்பவரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிந்து, போலீஸார் அந்த இடத்துக்கு உடனே விரைந்து செல்லும் வகையில் "அலெர்ட் 360' என்ற புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது அமெரிக்காவில் ஓக்லேண்ட், ரோஸ்வில் பகுதிகளில்தான் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு கோவையில் செயல்பட்டு வரும் "எப்ரான்டெக்' என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள "அலர்ட் 360' என்ற ஆண்டிராய்டு தொழில்நுட்ப பயன்பாட்டு வசதியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் "ஹலோ போலீஸ்' சேவையை எளிதில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும்.
அவ்வாறு புகார் தெரிவிப்பவரின் இருப்பிடத்தை பற்றிய விளக்கம் எதுவும் அளிக்க வேண்டியதில்லை. சாதாரணமாக அழைத்தாலே அவரது பெயர், முகவரி, இருக்கும் இடம் குறித்த வரைபடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விடும். மேலும், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸாருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடனடியாக அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விடுவார்கள்.
போலீஸார் செல்லும் திசையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் தெரிவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்த தகவலையும் தெரிவிக்க முடியும். இதற்காக இந்த மாவட்ட வரைபடமும், அதன் கடலோரப் பகுதிகள் முழுவதும் இந்த சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றையும் புகார்களாக அனுப்பலாம்.
          வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் மாவட்ட எல்லைக்குள் வந்தவுடனேயே "ஹலோ போலீஸ்' தொலைபேசி எண் 83000 31100 தானாக சேர்ந்து விடும். பின்னர், கூகுள் தேடு பொறிக்குள் சென்று இந்த "அலெர்ட் 360' (alert360) வசதியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.
தினமணி நாளிதழ் செய்தி - 19.03.2015 பதிவிட்ட நண்பர் திரு. செல்வம் பழனிசாமி அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றிங்க.