சனி, 18 ஏப்ரல், 2015

சிறு தானியங்களும், சத்துக்களும்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சிறுதானியங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கீழ்கண்ட தானியங்களுக்குரிய அதாவது சிறுதானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள் ஆகும்.
  • கம்பு (Pearl Millet)
  • தினை (Italian Millet or Foxtail Millet)
- செந்தினை
- கருந்தினை
- பைந்தினை
- பெருந்தினை
- சிறுதினை
  • கேழ்வரகு/ராகி (Finger Millet)
  • வரகு (Kodo Millet)
  • பனிவரகு (Proso Millet)
  • குதிரைவாலி (Barnyard Millet)
  • சாமை (Little Millet)
- பெருஞ்சாமை
- செஞ்சாமை
  • சோளம் (Great Millet or Sorghum)
- செஞ்சோளம்
- கருஞ்சோளம் ( இருங்கு சோளம் )
- வெள்ளைச்சோளம்
  • காடைக்கண்ணி (ஓட்ஸ்/புல்லரிசி)
               சிறுதானியங்கள்  பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்குக் காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின் றன. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 2ம் வகை (இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை. சிறுதானியங்களை அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது.

சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதிக நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது, உடல் எடை சீராக குறைகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும், சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

----------------------------------------------------------------------
(1)சோளம்
              இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 10.4கி ,
கொழுப்பு சத்து : 1.9கி,
தாது உப்புகள்:1.6கி ,
நார்ச்சத்து : 1.6கி ,
மாவுச்சத்து:72.6கி ,
கால்சியம் :25மிகி ,
பாஸ்பரஸ் :222 மிகி ,
இரும்புச்சத்து: 4.1 மிகி

மருத்துவ பயன்கள்:
1.நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
2.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
3.கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது.
4.ரத்த சோகை நோயை குணபடுத்தும்
5.சோளம் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை ஆகும்.

சமைக்கப்படும் உணவுகள் :
சோள சோறு , சோள தோசை, சோள அல்வா , சோள வடை , சோள பாயசம் , சோள அடை .

-------------------------------------------------------------------------------------------------------------

(2)கம்பு
           இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி யில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 11.6கி ,
கொழுப்பு சத்து : 5.0கி,
தாது உப்புகள்:2.3கி ,
நார்ச்சத்து : 1.2கி ,
மாவுச்சத்து:67.5கி ,
கால்சியம் :42மிகி ,
பாஸ்பரஸ் :296 மிகி ,
இரும்புச்சத்து: 8 மிகி

மருத்துவ பயன்கள்:
1. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
2. உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்
3. வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும்.
4. தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும்.
5. உடல் வலிமையை அதிகமாக்கும்.
6. வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

சமைக்கப்படும் உணவுகள் :
கம்பு களி , கம்பு சோறு , கம்பு தோசை, கம்பங்கூள் ,கம்பு ரொட்டி ,கம்பு புட்டு , கம்பு பிஸ்கட்.

----------------------------------------------------------------------------------------------------------
(3)ராகி
        ராகி  ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தியாவில் விளையும் உணவு தானியத்தில் 25 சதவீதம் ராகி விளைகிறது. அரிசி மற்றும் கோதுமையைவிட ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 7.3கி ,
கொழுப்பு சத்து : 1.3கி,
தாது உப்புகள்:2.7கி ,
நார்ச்சத்து : 3.6கி ,
மாவுச்சத்து:72கி ,
கால்சியம் :344மிகி ,
பாஸ்பரஸ் :283 மிகி ,
இரும்புச்சத்து: 3.9 மிகி

மருத்துவ பயன்கள்:
ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
• கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
• தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
• லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
• இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
• உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
• குடலுக்கு வலிமை அளிக்கும்.
• உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

சமைக்கப்படும் உணவுகள் :
ராகி களி , ராகி மால்ட் , ராகி தோசை , ராகி ரொட்டி

----------------------------------------------------------------------------------------------
(4)குதிரைவாலி
        சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர். இந்தியாவில்  மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரை, கடலூர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 6.2கி ,
கொழுப்பு சத்து : 2.2கி,
தாது உப்புகள்:4.4கி ,
நார்ச்சத்து : 9.8கி ,
மாவுச்சத்து:65.5கி ,
கால்சியம் :11மிகி ,
பாஸ்பரஸ் :280 மிகி

மருத்துவ பயன்கள்:
1.உடலை சீராக வைக்க உதவுகிறது.
2.சர்க்கரை அளவினை குறைக்க வல்லது
3.ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
4.இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,
5.நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சமைக்கப்படும் உணவுகள் :
குதிரை வாலி முறுக்கு , குதிரை வாலி சோறு , குதிரை வாலி தோசை , குதிரை வாலி உப்புமா , குதிரை வாலி கிச்சடி
----------------------------------------------------------------------------------------------------

(5)சாமை
        புன்செய்த்  தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. சாமையில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. சாமை உணவு விரைவில் பசிக்காது. பொதுவாக கொழுப்பு சத்து குறைந்த உணவாகும். ட்ரைகிளசைரஸ் குறைவான அளவில் உள்ளது. விட்டமின் பி3 அதிகம் கொண்ட உணவாகும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 7.7கி ,
கொழுப்பு சத்து : 4.7கி,
தாது உப்புகள்:1.5கி ,
நார்ச்சத்து : 7.6கி ,
மாவுச்சத்து:67கி ,
கால்சியம் :17மிகி ,
பாஸ்பரஸ் :220 மிகி ,
இரும்புச்சத்து: 9.3 மிகி

மருத்துவக் குணங்கள்
1. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
2. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
3. வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
4. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்

சமைக்கப்படும் உணவுகள் :
சாமை முறுக்கு , சாமை சோறு , சாமை இடியாப்பம் ,சாமை புட்டு , சாமை கிச்சடி 
-----------------------------------------------------------------------------------------------------

(6)தினை
           தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் 2வது தானிய வகையாகும் . பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 12.3கி ,
கொழுப்பு சத்து : 4.3கி,
தாது உப்புகள்:3.3கி ,
நார்ச்சத்து : 8கி ,
மாவுச்சத்து:60.9கி ,
கால்சியம் :31மிகி ,
பாஸ்பரஸ் :290 மிகி ,
இரும்புச்சத்து: 2.8 மிகி

மருத்துவ பயன்கள்:
1. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

சமைக்கப்படும் உணவுகள் :
1. தினை மாவு 2. தினை முறுக்கு 3. தினை அல்வா 4. தினை புட்டு 5.தினை பொங்கல் 6. தினை லட்டு 
-----------------------------------------------------------------------------------------------------------


(7)வரகு
            வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.வரகு தானியத்தை கும்பாபிஷேகத்தின்போது கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் உள்ளது.வீடுகளில் கூரை மேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 8.3கி ,
கொழுப்பு சத்து : 1.4கி,
தாது உப்புகள்:2.6கி ,
நார்ச்சத்து : 9.0கி ,
மாவுச்சத்து:65.9கி ,
கால்சியம் :27மிகி ,
பாஸ்பரஸ் :188 மிகி ,
இரும்புச்சத்து: 0.5 மிகி

மருத்துவ பயன்கள்:
1.சர்க்கரை அளவை குறைக்கிறது.
2. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
3. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
4. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
5. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.


சமைக்கப்படும் உணவுகள் :
வரகு முறுக்கு , வரகு சோறு , வரகு பிரியாணி ,வரகு தோசை , வரகு பணியாரம் 
-----------------------------------------------------------------------------------------------------

(8)பனிவரகு
               பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.பனி வரகு மாவிற்குப் பதிலாக அடுமனைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 12.5கி ,
கொழுப்பு சத்து : 1.1கி,
தாது உப்புகள்:1.9கி ,
நார்ச்சத்து : 2.2கி ,
மாவுச்சத்து:70.4கி ,
கால்சியம் :14மிகி ,
பாஸ்பரஸ் :206 மிகி ,
இரும்புச்சத்து: 0.8 மிகி

மருத்துவக் குணங்கள்
1. சர்க்கரை அளவினை குறைக்கிறது .

சமைக்கப்படும் உணவுகள் :
பனிவரகு பாயசம் ,பனிவரகு பால் பணியாரம் , பனிவரகு கூட்டா சோறு
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக