திங்கள், 24 பிப்ரவரி, 2014

தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா

மரியாதைக்குரியவர்களே,
                                      வணக்கம்.
                              இன்று பிப்ரவரி 14ம் தேதி.
தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886
தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது.

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும்.

பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால் இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. 

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். 

பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். 

இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால் இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

Tamil'99 ''இணைய எழுதி''

அன்புடையீர்,
                         வணக்கம்.அன்னை தமிழ் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  
  கணினியில் விரைவாகத் தட்டச்சு செய்யவும்,தமிழில் சிந்திக்கவும் 
                TAMIL '99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.

       தமிழ்'99 விசைப் பலகையில் எழுத இந்தப் பதிவில் உள்ள, 
          ''இணைய எழுதி'' என்னும் பொத்தானை அழுத்தவும். அதாவது  கீழேஉள்ள ''இணைய எழுதி'' என்னும் சதுர கட்டம் கட்டியுள்ள பெட்டியை  ஒரு கிளிக் மட்டும் செய்யுங்கள்
        












                         பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் உள்ள பட்டன்களில் எழுத்துக்களைக் கிளிக் செய்தால் அதிலுள்ள மானிட்டரில் எழுத்துக்கள் தானாக பதிவாகும். 
            உங்களது விசைப்பலகையிலும் தட்டச்சு செய்தால் மேலே கண்ட பெட்டியில் தமிழ் எழுத்துக்கள் பதிவாகும்.
பிறகு அதனை காப்பி எடுத்து அல்லது வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.
          இந்த முறை உலக அளவில் கணினியில் ஒருமித்த கீ போர்டை பயன்படுத்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
         தமிழறிஞர்கள் ஆலோசனைக்கேற்ப 1999-ல் தமிழக அரசு- TAMIL'99 போர்டு முறையை அனைவரும் பயன்படுத்த அரசாணையும் பிறப்பித்தது.
        தட்டச்சு செய்யும் போது இந்த தமிழ்'99 முறை விசைப் பலகையின் நன்மைகள் பின்வருமாறு;-------

       1) உயிர்க் குறில் எழுத்துக்கள் இடது புறம் நடுவரிசையிலும் (அ,இ,உ,எ-A,S,D,G  )

      2)உயிர் நெடில் எழுத்துக்கள் இடது புறம் மேல் வரிசையிலும்( ஆ,ஈ,ஊ,ஐ,ஏ-Q,W,E,T,R  )

      3) ஒ,ஓ,ஔ இந்த எழுத்துக்கள் அதிகம் பயன் படாத காரணத்தால் இவைகளை இடது புறம் கீழ் வரிசையிலும் (ஔ,ஓ,ஒ-Z,X,C,V,B  )

    4)அதிகம் பயன்படுத்தும் க,ப,ம,த எழுத்துக்கள் வலது புறம் நடு வரிசையிலும் (ய,ந,த,ம,ப,க -' , ; ,;L,K,J,H )
  5)இனவெழுத்து என்னும் அடிக்கடி ஒன்றாக வரும் எழுத்துக்களான ஞ்ச-],[,ண்ட-P,O,ந்த-;,L,ங்க-B,H,ம்ப-K,J,ன்ற-I,U,போன்ற எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவைகளுக்கும், மற்றும் ச்ச,ண்ண,ட்ட,ன்ன,ற்ற,ள்ள,ய்ய,ந்ந,த்த,ம்ம,ப்ப,க்க,ர்ர,ல்ல,ழ்ழ,ங்ங,,வ்வ போன்ற  இரட்டை எழுத்துக்கள் தட்டச்ச
         புள்ளி வைப்பதற்கென கூடுதலாக விசைகள் அழுத்த வேண்டியதில்லை.முயன்று பாருங்கள். பயிற்சி செய்து பாருங்கள். ஒவ்வொரு பட்டனாக,எழுத்தாக அழுத்திப் பாருங்கள்.அதனை ''காப்பி''
எடுத்துப்பாருங்கள். அடுத்த இடத்தில் ''பேஸ்ட்''செய்து பாருங்கள்.  அன்புடன்-
 

     




தமிழ்'99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.

பேரன்புடையீர்,
                வணக்கம்.
        அன்னை தமிழ் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

தமிழ்'99


tamil99
மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை !
இதில் என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் தேவையைக் குறைக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
சொல் romanised தமிழ்99 keystrokes saved
தொழிலாளி thozilaa+SHIFT+li த ஒ ழ இ ல ஆ ள இ 3
வெற்றி ve+SHIFT+r+SHIFT+ri வ எ ற ற இ 2
கணையாழி ka+SHIFT+naiyaazi க ண ஐ ய ஆ ழ இ 4
தந்தம் thantham த ந த ம f 3
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையைப் பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
எழுத்து விசை வரிசை
த் த f
தா த ஆ
தி த இ
தீ த ஈ
து த உ
தூ த ஊ
தெ த எ
தே த ஏ
தை த ஐ
தொ த ஒ
தோ த ஓ
தௌ த ஔ
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
சொல் விசைகள்
புள்ளி பு ள ள இ
கன்று க ன ற உ
தங்கம் த ங க ம f
தந்தம் த ந த ம f
வெற்றி வ எ ற ற இ
3. பழகுவது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்களை நினைவில் கொள்வதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு பக்கமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைந்துள்ளன. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைப்பிலும் நெருக்கமான எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கிறது. அடிக்கடி அடுத்து வரும் எழுத்துக்கள் அருகருகே உள்ளன.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில் இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும் விதமும் அமைந்திருக்கிறது. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமாக தட்டச்சு செய்யலாம். விரல்களை அயர வைக்காது. கடந்த ஒரு ஆண்டாகத் தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துகிறேன். ஆனால், ஏழு ஆண்டுகள் பழக்கமான ஆங்கிலத்தை விட வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. பழகிய பிறகு விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாமல் நீங்களே இதைக் கற்றுக் கொள்வது எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி கலந்து பேசி உருவாக்கி, சோதித்துப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாமல் தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கலாம்.
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு. இதன் எளிமை பிற மொழி விசைப்பலகைகளில் காணக்கிடைக்காதது. இதன் வடிவமைப்பே புத்திசாலித்தனமானது. நாம் உள்ளிடாமலேயே மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப செயல்பட்டு நம் வேலையைக் குறைக்கிறது. இது தொடர்பாக உள்ள 12 புத்திசாலித்தனமான விதிகளைப் பாருங்கள். இதைப் பழகப் பழகத் தான் தமிழ் எவ்வளவு கட்டமைப்பும் ஒழுங்கும் உடைய எளிமையான மொழி என்று வியக்க வேண்டி இருக்கிறது.
8. அனைத்தையும் விட முக்கியமான விசயம், இதைப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனதில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில குறுஞ்செய்தி அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை, தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? அதனால் இன்றே தமிங்கில தட்டச்சை விடவும். இதனை ஒப்பிட பிற தட்டச்சு முறைகளான பாமினி, typewriting layout எவ்வளவோ பரவாயில்லை. அவற்றைப் பழகியவர்களுக்கு அதை விட்டு தமிழ்99க்கு வர கடினமாக இருக்கும். ஆனால், தமிங்கிலக்காரர்கள் இலகுவாக மாறிக் கொள்ளலாம். தமிங்கிலத் தட்டச்சை விட்டொழிப்பதற்கான இன்னும் வலுவான காரணங்களை அறிய ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும் என்ற கட்டுரையைப் பாருங்கள்.
கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கு அறிமுகமாகும்போது ஏறக்குறைய எல்லாரும் தமிங்கிலப் பலகை மூலம் தான் அறிமுகமாகிறோம். ஆனால், விரைவில் அடுத்த கட்டமாக தமிழ்99 கற்றுக் கொள்வது நலம். சொந்தக் கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்99க்கான எ-கலப்பை அல்லது NHM writer பயன்படுத்தலாம். பயர்பாக்சு உலாவி பயன்படுத்துபவர்கள் வைத்திருப்பவர்கள் எ-கலப்பைக்கு ஒத்த தமிழ் விசைநீட்சியைப் பயன்படுத்தலாம்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
இறுதியாக, மேல்விவரங்களுக்கு:
1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிய, பிற வலைப்பதிவர்கள் தமிழ்'99 விசைப்பலகை அருமை பெருமைகள் பற்றி கூறுவதை படிக்க பின் வரும் தளங்களை பாருங்கள்:
1. தமிழ் விக்கிபீடியா கட்டுரை
2. கணினியில் தமிழ் தட்டச்சு எப்படி?
3. அனுராக்
4. Voice on Wings கருவி.
5. Voice on Wings.
6. Shortcuts / Syntax that Tamil99 users should know.
7. தமிழ்99 பயனர் வாக்குமூலங்கள் .
8. தமிழ்99 பயிற்சி நிகழ்படம்
9. தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி ஏடு 1, 2. (pdf)
10. கணிச்சுவடி – எ-கலப்பை நிறுவல், பயன்பாடு, தமிழ்99 பழகுமுறை குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கம் உள்ள .pdf கோப்பு. ஆக்கம் – சிந்தாநதி.
11. கணினித்திரையில் பார்த்தவாறே தட்டச்சு செய்வதற்கான தமிழ்99 விசைப்பலகை Yahoo widget.
12. தமிழ்99 விழிப்புணர்வு இணையத்தளம்

தமிழ்99 குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள்

பேரன்புடையீர்,வணக்கம். 
                  இன்பத் தமிழ் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தமிழ்'99 ஒலிப்பியல்முறை விசைத்தட்டு பற்றிய கேள்விகளும் பதில்களும்.இதனை பதிவிட்ட tamil99.org வலைத்தளத்திற்கும் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் நன்றி.

கேள்விகள்



1. தமிழ்'99 விசைப்பலகை முறையில் எழுதிப் பழக எவ்வளவு நாளாகும்?
                             தமிழ்'99 விசைப்பலகை அமைப்பைப் புரிந்து கொண்டு எழுதத் தொடங்க ஒரு சில நிமிடங்களே போதும். வேகமாக எழுத அதாவது விரைவான பழக்கத்திற்கு வர ஓரிரு வாரங்கள் பயிற்சி போதும். நீங்கள் முதன்முதலில் தமிழில் எழுதத் தொடங்கும்போதே தமிழ்'99 முறையைப் பின்பற்றினால் இதைப் பழகிக் கொள்வது எளிது. 
              ஏற்கனவே தமிங்கில விசைப்பலகை, பாமினி விசைப்பலகை போன்றவற்றைப் பழகி இருந்தால் தமிழ்'99  பழக்கப்படுத்த  சிறிது நாட்கள் ஆகலாம். ஆனால், தமிழ்'99க்கு மாறுவது என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் ஏற்கனவே பழகியிருக்கும் பிற விசைப்பலகை முறைகளை முற்றிலும் தூக்கிப் போட்டு விட்டு இதற்கு மாறினாலே வேகம் கைகூடும். உங்கள் அன்றாட பணிகளுக்கு வேறு விசைப்பலகையை பயன்படுத்திக்கொண்டே ,பழகுவதற்கு என்று நாளுக்கு சில மணித்துளிகள் தமிழ்'99க்கு என்று ஒதுக்கி முயற்சிக்கலாம்.
 
2. எனக்கு QWERTY ஆங்கில விசைப்பலகையில் ஆங்கிலத் தட்டச்சு நன்றாகத் தெரியும். ஆங்கிலத்தில் எழுத ஒரு விசைப்பலகை, தமிழுக்கு ஒரு விசைப்பலகை என்று பழகினால் மூளை குழம்பாதா?
                           குழம்பாது. ஏற்கனவே தமிழ்99 பழகி நன்றாக இருக்கும் நாங்களே சாட்சி.
தமிழ்'99 பழகிய பிறகு ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் வெவ்வெறு விசைப்பலகைகளில் எந்தக் குழப்பமும் இன்றி சீரான வேகத்தில் எழுதத் தொடங்கும்போது தான் நம் மூளையின் திறனை நாமே உணர்ந்து கொள்வோம்.
 
3. இதைக் கற்றுக் கொள்வது எளிதானதாக இருக்குமா? எனக்கு அந்த அளவு திறமை இல்லையே?
                        இதைக் கற்றுக் கொள்வது மிகவும் எளிதானது. தனித்த திறமை ஏதும் தேவை இல்லை. இந்த விசைப்பலகையைக் கற்றுக் கொள்வதற்கும் மொழியறிவுக்கும் தொடர்பு இல்லை.
 
4. யார் எல்லாம் தமிழ்'99க்கு மாறலாம்? மாற வேண்டும்?
                              எல்லா தமிழர்களும் தான்.
வேகமாக, அயர்ச்சியின்றி, குறைந்த நேரத்தில் அதிக எழுத்துக்களை  தட்டச்ச உதவுவது தமிழ்'99ன் சிறப்பு. ஷிப்ட் விசை அழுத்தாமல் மெய் எழுத்துக்கள் 18ம் உயிர் எழுத்துக்கள் 12ம் கொண்டே அனைத்து எழுத்துக்களையும் தட்டச்ச முடியும்.
                     எனவே இணையத்தில், கணினியில் தமிழில் எழுத நிறைய நேரம் செலவிடுபவர்கள், தொழில்முறையில் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் உடனடியாக தமிழ்'99க்கு மாறிக் கொள்வது மிகவும் விரும்பத்தக்கது.
 
5. எனக்கு ஏற்கனவே QWERTY ஆங்கில விசைப்பலகை பயிற்சி உண்டு. ammaa = அம்மா என்று எழுதுவது இலகுவாக இருக்கிறதே? இது போல் எழுத நிறைய மென்பொருள்கள் இருக்கிறதே? ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விசைப்பலகையைக் கற்கவா முடியும்? நான் ஏன் தமிழ்'99க்கு மாற வேண்டும்? வேண்டுமானால் ஆங்கிலம் அறியாதவர்கள் மட்டும் தமிழ்'99 பயன்படுத்தலாமோ?

              
     தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?
தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும்? தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை! அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை ள, ழ, ண, ற போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே?
இந்தத் திறம் குறைந்த qwerty விசைப்பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.
தமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு விசைப்பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,


மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.
உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.
அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.
ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.
தமிங்கில விசைப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்'99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.
தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்'99ல் வருகின்றன.
தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்'99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.
தமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute rate நிச்சயம் தமிழ்'99ல் 40% கூடுதலாக இருக்கும்.
நம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் நாம் அடிக்கடி பயன்படும் எழுத்துக்கள் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.
தவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.
முக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்கில எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா? தமிழ்'99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.
சிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே? நம் மொழியின் எழுத்து இலக்கணத்தை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால், செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வேறுபாடு போல் தான் இது.
தமிழ்'99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கமும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். தமிழ் மட்டும் அறிந்த பெரும்பாலான தமிழர்களை கணினியிடம் இருந்து அன்னியப்படுத்தவே இது வழிவகுக்கும். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்? நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக்காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது?
ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?
விசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localized ஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லோர் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா? இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா?
தமிழ்'99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்'99 சொல்லிக் கொடுக்கலாமே? இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.
ஆகிய இரண்டு கட்டுரைகளைப் படியுங்கள். இவற்றில் ஏன் தமிங்கில விசைப்பலகையில் இருந்து தமிழ்'99க்கு மாற வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்வதென்றால்,
* ammaa = அம்மா என்று எழுதும் தமிங்கில விசைப்பலகையைக் காட்டிலும் இதில் வேகமாகவும், இலகுவாகவும், அயர்ச்சி இன்றியும், நிறைய தமிழில் எழுதலாம். QWERTy விசைப்பலகையில் ஒரு தமிழ்ச்சொல்லை எழுத கூடுதல் விசை அழுத்தங்கள் தேவை. தமிழ்99 முறையில் மிகக் குறைவான விசையழுத்தங்களே தேவை. இதனால், தமிழில் எழுதும் உங்கள் வேகம் கூடும்.
* ammaa = அம்மா என்று எழுதும் போது, உங்கள் மூளையில் தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றி எழுதுவதால் உங்களை அறியாமல் உங்கள் சிந்தனை வேகம் குறைகிறது. தவிர, வருங்காலத் தமிழ்த் தலைமுறை
இப்படி தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்வது சரியா?

6. எனக்கு ஏற்கனவே தட்டச்சுப் பொறியில் தமிழில் எழுதுவதற்கான விசைப்பலகை முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்?
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு கட்டுரையைப் பார்க்கவும்.
7. தமிழ்99 முறையில் எழுத மென்பொருள்கள் எங்கு கிடைக்கும்? காசு கொடுக்க வேண்டுமா?
தமிழ்99 முறையில் எழுத இலவச மென்பொருள்களே போதும். http://tamil99.org/tamil99-software பாருங்கள்.
8. என்னிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகை கொண்டே எழுத முடியுமா? இல்லை, இதற்கு என்று புதிதாக விசைப்பலகை வாங்க வேண்டுமா?
உங்களிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகையே போதும். கணினியில் தமிழில் எழுத உங்கள் விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கத் தேவையில்லை.
9. சில மென்பொருள்களில் தமிழ்99 தட்டச்சு முறை இருக்கிறது. ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள குறுக்கு வழிகள், வசதிகள் இல்லையே?
நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளில் அனைத்து தமிழ்99 குறுக்கு வழிகள், வசதிகளும் செயற்படுத்தப்படாமல் இருக்கலாம். http://tamil99.org/tamil99-software பரிந்துரைக்கப்பட்டுள்ள மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.
10. தமிழ்99 விசைப்பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை நினைவில் கொள்ள என்ன வழி?
உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.
அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.
இப்படி நினைவில் வைத்துக் கொள்வது உதவலாம்.
11. நான் தினமும் தமிழில் நிறைய தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேனே? இதைப் பழகுவதற்காக எப்படி ஓரிரு வாரங்கள் அதைக் குறைத்துக் கொள்வது?
தமிழில் எழுதுவது என்பது உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் செய்யப் போகும் ஒன்று. ஓரிரு வாரங்கள் இதைப் பழகுவதற்காகக் கொஞ்சம் பொறுத்து முயற்சி செய்தால் வாழ்நாள் முழுதும் நீங்கள் தமிழ் எழுதச் செலவிடும் நேரத்தில் 30% முதல் 40% நேரம், அயர்ச்சியைக் குறைக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள்.

இலவச பயிற்சி மையம்-நம்ம சத்தியில்

பேரன்புடையீர்,                                                                          
                         வணக்கம்.''இன்பத்தமிழ்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு சார்பாக,ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் லோகு புகை பரிசோதனை நிலையத்தின் அலுவலகத்தில்- 
                   எளிய தமிழில் சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி ,தன்னம்பிக்கை பயிற்சி,இளைஞர்களுக்கான வேலை வழிகாட்டி,தமிழர் நாகரீக விழிப்புணர்வு பயிற்சி,குடும்ப உறவு நலனுக்கான பயிற்சி,ஒரே மணி நேரத்தில் ENGLISH மற்றும் தமிழில் கணினி தட்டச்சு பயிற்சி,மின்னஞ்சல்,வங்கி பயன்பாடுகள்,இரயில் மற்றும் பேருந்துகளுக்கு பயணசீட்டு முன்பதிவு செய்தல்,புவியிடங்காட்டி என்னும் GPS மூலமாக வழித்தடங்கள் அறிதல்,பயண தூரங்கள் அறிதல்,இருப்பிடங்கள் அறிதல்,சமூக வலைத்தளங்கள்,வலைப்பூக்கள்,வலைத்தளங்கள்,போன்ற இணையதள சேவைகள் மற்றும் Tally,M.S.word,CorelDRAW,Photoshop,Page maker,போன்ற மென்பொருட்கள் பற்றிய விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தல் ,வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், என சூழ்நிலைக்கேற்ப மக்களுக்கான இன்றைய தேவைகள் பற்றிய இலவச பயிற்சி கொடுக்க- விரைவில் இலவச பயிற்சி மையம் துவக்க உள்ளோம்.அது பற்றிய ஆலோசனை நடத்தி வருகிறோம்.தங்களது மேலான ஆதரவை கோருகிறோம்.
                  என சமூக நலன் கருதி,
தேதி;-21-02-2014 .சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.