சனி, 26 ஜூலை, 2014

பெயர்ச்சொல்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
                    பெயர்ச்சொல் என்றால்என்ன?

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச் சொல் ஆகும்.அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்..

இடுகுறி பெயர்:

ஒருபொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல்இட்டுவழங்கியபெயரே இடுகுறிப்பெயர்..

எ.கா: மரம்,மலை,மண்

காரணப் பெயர்:

ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப் பெயர்.

எ.கா:முக்காலி,நாற்காலி,கருப்பன்

பெயர்ச்சொல்லின்வகைகள்:

பெயர்ச்சொல்ஆறுவகைப்படும்.
பொருட்பெயர்

(எ.கா)பணம்,மனிதன்,விலங்கு,மரம்
இடப்பெயர்

பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர்
காலப்பெயர்

மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை
சினைப்பெயர்

கை,கால்,இலை,காம்பு,காய்,பூ
பண்புப்பெயர்

வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை
தொழிற்பெயர்

எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்

ஒரு பொருளைக் குறித்து வந்தால்அது பொருட்பெயர்.

ஒரு இடத்தைக் குறித்து வந்தால் அது இடப்பெயர்.

ஒரு காலத்தைக் குறித்து வந்தால் அது காலப் பெயர்.

ஒரு உறுப்பை குறித்துவந்தால்அது சினைப்பெயர்.

ஒரு பொருளின் பண்பை குறித்து வந்தால் அது பண்புப் பெயர்.

(தொல்லை,மாண்பு,மாட்சி,நன்றி,நன்று,நலம்,நன்னர்போன்றவார்த்தைகளும் பண்பு பெயர்கள்தான் குழப்பம் வேண்டாம்)

ஒருதொழிலைக்குறித்துவந்தால்அது தொழிற்பெயர்.
(ஆட்டம்,கொலை,அழுகை,பார்வை,கடவுள்,கோட்பாடு,சாக்காடுபோன்றவையும்.தொழிற்பெர்கள்தான்குழம்பி விடவேண்டாம்.மனதில்நிறுத்திக்கொள்ளுங்கள்)

தொழிற்பெயர்இரண்டுவகைப்படும்

அ. முதற்நிலைத்தொழிற்பெயர்
ஆ. முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயர்

அ. முதல்நிலைதொழிற்பெயர்

பெரும்பாலும்வேர்ச்சொல்லாகவேவரும்முதலெழுத்துகுறிலாகஇருக்கும்.

(எ.கா) சுடு, கெடு

ஆ. முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயர்

முதற்நிலைத்தொழிற்பெயரின்முதலெழுத்துநீண்டுவருமாயின்அது
முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயராகும்.

(எ.கா)
சுடுதல் - தொழிற்பெயர்
சுடு - முதற்நிலைத்தொழிற்பெயர்
சூடு - முதற்நிலைதிரிந்ததொழிற்பெயர்
சுடுதல் - சுடு - சூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக