சனி, 26 ஜூலை, 2014

வேர்ச்சொல்லைக்கண்டறிவது

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
             வேர்ச்சொல்லைக்கண்டறிவதுஎப்படி?

பகுபதஉறுப்பிலக்கணம்படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும். அப்படி மறந்திருந்தாலும் கவலைஇல்லை. வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

வேர்ச்சொல்:

ஒருசொல்லின்மூலச்சொல்எதுவோஅதுவே. அச்சொல்லின்வேர்ச்சொல்ஆகும்.

(எ.கா) பார்

'பார்' என்பது ஒரு வேர்ச்சொல். இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.

அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?

'வந்தான்' என்பதன்வேர்ச்சொல் 'வா'.

அவ்வளவுதான். வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.

இதைப்போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என கேள்விகள் கேட்கப்படும்.

மாதிரிவினாக்கள்:

1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

அ)சென்றஆ)சென்றுஇ) செல்ஈ)சென்றனன்

2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

அ)பேசிஆ)பேசுஇ)பேசியஈ)பேசுதல்

மேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டுபிடிக்க முடிகிறதா. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..

முதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள். பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள். அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும் படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பாருங்கள். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எது வென்றுதெரிகிறதா?

ஆமாம். முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல் தான் கட்டளைச் சொல்.

இரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல் தான் கட்டளைச் சொல்.

வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக