சனி, 26 ஜூலை, 2014

வேர்ச் சொல் - தமிழ் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று, வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல் எப்படி ?

வேர்ச் சொல்லைக் காண் என வினாக்களைக் கேட்பது போல வேர்ச் சொல்லைக் கொடுத்து இதன் வினைமுற்றை கண்டுபிடி அல்லது வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி என்பதைப் போல வினாக்கள் அமையும்.

(எ.கா)

'படி' என்ற சொல்லின் தொழிற் பெயரைக் கண்டுபிடி

அ) படித்த ஆ) படித்து இ) படித்தவன் ஈ) படித்தல்

விடை: ஈ. படித்தல்

'தல்' எனும் விகுதி வந்தால் தொழிற்பெயர்.

படித்த என்ற சொல்லின் விகுதி 'அ' என்பதால் அதுபெயரெச்சம்.

படித்து என்ற சொல்லின் விகுதி 'உ' என்பதால் அது வினையெச்சம்.

படித்தவன் என்றசொல் வினையாலணையும் பெயர்.

கீழே அட்டவணை பாருங்கள். அதைப்போல நீங்களும் அட்டவணை தயாரித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்ச்சொல் - பெயரெச்சம் - வினையெச்சம் - வினையாலணையும் பெயர் - வினைமுற்று - தொழிற்பெயர்

தா - தந்த - தந்து - தந்தவன் - தந்தான் - தருதல்

செல் - சென்ற - சென்று - சென்றவன் - சென்றான் - செல்தல்

உண் - உண்ட - உண்டு - உண்டவன் - உண்டான் - உண்ணல்

காண் - கண்ட - கண்டு - கண்டவன் - கண்டான் - காணுதல்

கூறு- கூறிய - கூறி - கூறியவன் - கூறினான் - கூறுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக