வியாழன், 26 பிப்ரவரி, 2015

வற்றல் வகைகள் செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
 வற்றல் வகைகள் செய்யலாம் வாங்க..
(1)சுண்டை வற்றல்;
    ஒரு படி அளவுள்ள விளைந்த சுண்டைக்காய்களைப் பொறுக்கி எடுத்து க்கழுவி,வடிகட்டி அம்மியில் வைத்து லேசாக தட்டி நசுக்கிப்பிளந்து அரை லிட்டர் புளிப்பான மோரில்  ஒரு பிடி அளவு உப்பு,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கரைத்து இத்துடன் பிளந்த சுண்டைக்காயைப்போட்டு மூடி வைக்கவும்இரண்டு நாட்களுக்கு கிளறி சுண்டைக்காய்களை நன்கு ஊறவைக்கவும்.பின்னர் மோரைவிட்டு எடுத்து வெயிலில் காயவைக்கவும்.சுமாராகக் காய்ந்த பிறகு அதே மோரில் மீண்டும் ஊறவைக்கவும்.இவ்வாறாக மோர் முழுவதும் காலியாகும்வரை கிளறி கிளறி ஊறவைத்து ஊறவைத்து காயப்போட்டு எடுத்து டின்களில் போட்டு பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
இவ்வாறாக,
 மோர் மிளகாய் வற்றல்,பாகற்காய் வற்றல்,கத்திரிக்காய் வற்றல்,மணத்தக்காளி வற்றல்,வெண்டைக்காய் வற்றல்,அவரைக்காய் வற்றல்,கொத்தவரைக்காய் வற்றல் போன்ற வற்றல்வகைகளையும் செய்யலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக