வியாழன், 26 பிப்ரவரி, 2015

எலும்பு சால்னா செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
  எலும்பு சால்னா ---
 அசைவ குழம்புகளில் சால்னா ருசியானது. ரசம் மற்றும் `சூப்` போல உறிஞ்சி சுவைத்துக் கொண்டே சாப்பிட வைத்துவிடும். எலும்புகளை மட்டும் சேர்த்து செய்யப்படும் சால்னா இன்னும் சுவையாக இருக்கும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 1/4 மூடி அரைக்கவும்
வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் - தாளிக்க
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை

* ஆட்டெலும்பைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

* எண்ணையைக் காய வைத்து சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* அடுத்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கவும், இதனுடன் எலும்பையும் சேர்த்து வதக்கவும்.

* மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.

* கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு வேக விடவும். உப்பை சரி பார்க்கவும்.

* எலும்பிற்குப் பதிலாக குருமா காய்கறிகளைப் பொடியாக `கட்' செய்து வைத்து இதே முறைப்படி சால்னா தயாரிக்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
  1. கடுகு – 2 டேபிள்ஸ்பூன்
  2. புளி – தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் – 2
  4. தேங்காய் துண்டு – 2
  5. எண்ணெய் – தேவையான அளவு
  6. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  1. கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
  2. தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#sthash.GZIxdxXu.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக