வியாழன், 26 பிப்ரவரி, 2015

புதினாக்கீரை சூப்
****************
தேவையான பொருள்கள்:
புதினாக்கீரை = 1 கட்டு
பூண்டு= பாதி (சிறியது)
மிளகு = 2 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 4
எலுமிச்சை பழம் = பாதி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
புதினாக்கீரையை சுத்தம் செய்து வெட்டி வைத்து கொள்ளவும். பூண்டு, மிளகு மற்றும் சீரகத்தை சிறிது தட்டி வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெட்டி வைத்த புதினாவை போட்டு நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகத்தை போட்டு மீண்டும் கொதிக்க வைத்து எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான புதினாக்கீரை சூப் தயார். இதை தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் வராமல் தடுக்கலாம்.
மருத்துவ குணங்கள்:
புதினாவில் குறைந்த அளவே கொழுப்பு, சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. மேலும் புதினாவில் பாஸ்பரஸ், இரும்புத்தாது, ஃபைபர், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது. வைட்டமிம் “A”, வைட்டமின் “C” உள்ளது.
புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்று பொருமல், அஜீரணம் ஆகியவை குறையும். பசியை தூண்டும். இரத்தம் சுத்திகரிக்கப்படும். வாய் நாற்றம் குறையும். மலச்சிக்கல், வாதம் வறட்டு இருமல், நரம்பு தளர்ச்சி, தலைவலி, ஆஸ்துமா, விந்து குறைபாடு ஆகியவை அகலும்.
இந்த சூப்பை குடித்து வருவதால் வறண்ட சருமம் பொலிவு பெற்று முகப்பரு குறையும். இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக