வியாழன், 26 பிப்ரவரி, 2015

காரமான சிக்கன் மசாலா:
சிக்கன் மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான அளவு
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பேஸ்ட் செய்வதற்கு...
முந்திரி - 6-7
பால் - 4-5 டேபிள் ஸ்பூன்
பவுடர் செய்வதற்கு...
பட்டை - 1
கறிவேப்பிலை - 10
கிராம்பு - 3
மசாலாவிற்கு...
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 3/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரியை பாலுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, குளிரை வைத்து, பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பிறகு மல்லித் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும். இவை அனைத்து ஒன்றாக சேர்ந்து, எண்ணெய் தனியாக வரும் போது, அதனை இறக்கி, குளிர வைத்து, பின் பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு, தீயை அதிகரித்து, 4-5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா, முந்திரி பேஸ்ட் மற்றும் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும்.
இப்போது காரசாரமான சிக்கன் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக