வியாழன், 26 பிப்ரவரி, 2015

வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட வாங்க...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1 (தோலுரித்து, நீளமாக வெட்டியது) கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் ஓமம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் - 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெயானது சூடானதும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை மாவில் பிரட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக