புதன், 6 ஆகஸ்ட், 2014

சதுரங்கம் விளையாட்டு தொடர்ச்சி -09

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
           வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

சதுரங்க விளையாட்டு தொடர்ச்சியினை இங்கு காண்போம்.......
   (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
                 கட்டாயம் டிரா ஆகும் நிலைகள்,
          # ஒரு ராஜா + ஒரு பிஷப் VS தனி ராஜா
  # ஒரு ராஜா + ஒரு குதிரை அல்லது இரண்டு குதிரைகள் VS தனி ராஜா
                 என நிலை இருந்தால் செக்  மேட் செய்யவே முடியாது, எனவே விதிப்படி ''டிரா'' ஆகும்.
           இரண்டு குதிரைகள் இருந்தாலும் ''செக் மேட்'' செய்யவே முடியாது. பலகையில் வேறு ஏதேனும் ஆட்டக் காய்கள் இருக்க வேண்டும்,அது எதிர் அணியின் சிப்பாயாவது இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால், குதிரையை பொறுத்த வரையில் அதன் அருகில் உள்ள கட்டத்திற்கு சென்றால் எதுவும் செய்ய இயலாது, மற்ற ஆட்டக் காய்களுக்கு அவ்வாறு செல்ல இயலாத கட்டம் என ஏதேனும் ஒன்றாவது இருக்கும்.

     தனி ராஜா என்ற நிலை இல்லாமல் ,
   #ஒரு யானை எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை
   #இரண்டு பிஷப் எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை
   #ஒரு பிஷப் + குதிரை எதிர்த்து எதிர் நிற பிஷப்

                   என இறுதி ஆட்ட நிலை இருந்தாலும் டிரா ஆகிவிடும்.
கவனக்குறைவாக ஆடினால் மட்டுமே தோற்கடிக்க முடியும் எனும் இறுதி ஆட்ட நிலைகள் இவை.
         "50" நகர்வு விதி(50 moves rule) என இருப்பது போல Draw  ஆக ஆட்டம் முடிவதற்கென இன்னும் சில ''டிரா'' செய்ய வைக்கும் விதிகளும் உள்ளன.
               # தொடர்ந்து மூன்று முறை ஒரே நிலையை (repeated position) ஆடினால் ஆட்டம் டிரா ஆகும்.
              இதனை ''மிர்ரர் இமேஜ் பொசிஷன் டிரா'' என்பார்கள்.

      # செக் மேட் செய்யாமல் வெறுமனே ''செக்'' மட்டுமே தொடர்ந்து கொடுத்தாலும் விதிப்படி ''டிரா'' ஆகிவிடும். இதனை  Perpectual check"(PP) ''டிரா'' என்பார்கள். அதிக பட்சம் தொடர்ந்து 15 ''செக்'' கொடுக்கலாம் ,ஆனால் மூன்றாவது ''செக்'' வைத்து தப்பிவிட்டாலே விதியை சொல்லி "டிரா" கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
              மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிறு விதிகள் உள்ளன,
                # நமது நகர்வு செய்ய வேண்டிய சூழலில் தேவையில்லாமல் நமது ஆட்டக்காயை அல்லது  எதிராளியின் ஆட்டக்காயை " தொடக்கூடாது".
                 அப்படி  தொட்டுவிட்டால் , விதிக்குட்பட்ட நகர்வு செய்ய முடியும் எனில் அதனை நகர்த்தியாக வேண்டும். எதிராளியின் ஆட்டக்காயை தொட்டு இருக்கும்போது  அதனை வெட்ட முடியும் எனில் வெட்டியே ஆக வேண்டும்.
            இதனை "Touch piece"  விதி என்பார்கள்.
                   #  கோட்டை கட்டுதல்(castling) செய்யும் போது கூட முதலில் ராஜாவைத் தான் தொட வேண்டும், அதன் பின்னரே யானையை தொட வேண்டும், மாறி யானையை தொட்டுவிட்டால் அதனை " டச் பீசாக" கருதி நகர்த்த வேண்டும்.
          # நாம் அவசரப்பட்டு ஒரு ஆட்டக்காயை தொட்டுவிட்டோம் ஆனால் அதனை  விதிப்படியான நகர்த்தல் செய்ய வாய்ப்பே இல்லைஎன்றாலும் அடுத்து எப்பொழுது விதிப்படி நகர்த்தும் சூழல் வருகிறதோ அப்பொழுது "கட்டாயம் நகர்த்த "வேண்டும்.. இதனை "enforced move" என்பார்கள்.
                இவ்வாறு தவறுதலாக தொட்டு ஆட வேண்டிய கட்டாயத்தால் ஆடி ,ஆட்ட நிலை பாதகமாக மாறிவிடும் சூழல் உருவாகலாம், எனவே கவனமாக ஆட வேண்டும். சர்வதேச போட்டிகளில் கூட இப்படி ஆகியுள்ளது.
               # ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஆட்டக்காய்களை தொட வேண்டும்,லேசாக கட்டத்தில் இருந்து விலகியுள்ள ஆட்டக்காயினை சரி செய்ய வேண்டுமெனில் , தொடும் முன்"  "I ADJUST'" என அறிவிக்க வேண்டும், சிம்பிளாக "ADJUST" என்று சொல்வது வழக்கம்..

              இன்னும் பல விதிகள் உள்ளன ,அவற்றை எல்லாம் தேவையான இடங்களில் ஆங்காங்கே பார்க்கலாம், ஒரே நேரத்தில் வரிசையாக சொன்னால் மனதில் பதியாது.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
             # COPYCAT TRAP.
               சதுரங்கத்தில்  ஒருவர் என்ன நகர்த்துகிறாரோ! அதேபோல திரும்ப நகர்த்துபவர்களும் உண்டு, ஒருவர் நகர்த்துவதைப் பார்த்து அதேபோல காய்களை நகர்த்துபவர்களும் உண்டு. இதனை "காப்பியடிக்கும்  பூனை" என்பார்கள்.ஆனால்    ஒருவரைப்பார்த்து காப்பி  அடித்து ஆடினால் எளிதில் தோற்றுவிடுவர். 

 அப்படியே காப்பி அடிச்சும் ஆடும் ஆட்டம்,




1)e4- e5


2) Nf3 -Nf6

3)N X e5 - N X e4

வெள்ளை ஆடியதை அப்படியே திருப்பி செய்கிறது கறுப்பு.

4) Qe2 - Nf6??

5) Nc6 +

இப்படி செய்வதை  discoverd chcek என்பார்கள், ராஜாவுக்கு செக் அதே நேரம் ராணியும் தாக்கப்படுகிறது,எனவே வெள்ளைக்கு கறுப்பு ராணி "பலியாவது" நிச்சயம்.




         இவ்வாறு விளையாடி  பிடிபடுவதை COPY CAT TRAP என்பார்கள், இப்படி துவக்க ஆட்டத்தில் ,நாம ஏன் யோசிச்சு ஆடணும்? , வெள்ளை ஆட்டக்காரர் செய்வதை அப்படியே செய்வோம் என்று ஆடியவர் பிடிபடுவதை  "GIF" அனிமேஷனில் பாருங்கள்!

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
           COPY CAT TRAP அனிமேஷன்.




           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக