புதன், 6 ஆகஸ்ட், 2014

சதுரங்க விளையாட்டு தொடர்ச்சி -05

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம் .வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
            


     சதுரங்க விளையாட்டு பற்றிய தொடர்ச்சி இது........
போட்டிகளில் விளையாட அடுத்து என்ன தேவைப்படும்  போட்டிகளில் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் என குறிப்பிட்ட நேரமே வழங்கப்படும், யார் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு நகர்த்தல்கள் செய்தார்கள் என கண்டுப்பிடிக்க /அளவிட என " சதுரங்க கடிகாரம்"(chess clock) என ஒன்று பயன் படுத்தப்படுகிறது.
chess clock-pic.


(குவார்ட்ஸ் அனலாக் சதுரங்க கடிகாரம்)


இதில் இரு கடிகார முகப்புகள் இருக்கும், ஒரு கடிகாரம் ஓடும் போது இன்னொன்று ஓடாது.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
              சதுரங்க கடிகாரத்தினை , வெள்ளைநிற ஆட்டக்காய்களுடன் ஆடுபவரின் இடது புறத்தில் தான் எப்பொழுதும் வைக்க வேண்டும், இது வெள்ளை நிறம் தேர்ந்தெடுத்தவருக்கு ஒரு கூடுதல் அனுகூலம் ஆகும், வலது கையால் காய்களை நகர்த்திக் கொண்டு, ஸ்கோர் எழுதிக் கொள்ளவும் செய்யலாம், இடது கையால் கடிகாரத்தினை இயக்கிக் கொள்ளலாம்.
ஆனால் கறுப்பு எடுத்தவருக்கு , கடிகாரம் வலப் புறமாக அமைந்து விடுவதால், நகர்த்தல்,ஸ்கோர் எழுதுதல் , கடிகாரம் இயக்குதல் என அனைத்தும் ஒரே கையால் செய்ய வேண்டியதாக இருக்கும், எனவே நேரம் குறைவாக இருக்கும். நெருக்கடியான நேரத்தில் ,வேகமாக அனைத்து வேலைகளையும் செய்ய இயலாது.

வெள்ளை நிறம் எடுத்தவர் ஒரு நகர்த்தல் செய்து முடித்ததும் அவர் பக்கம் உள்ள கடிகாரத்தின் மேல் உள்ள பொத்தானை அழுத்தி "stopping the clock"  செய்ய வேண்டும், இப்பொழுது கறுப்பு நிறம் எடுத்தவர் பக்கம் உள்ள கடிகாரம் ஓடத் துவங்கும், அதாவது ,அவரின் காய் நகர்த்தல் குறித்து யோசிக்க ஆகும் நேரம் மட்டும் இப்பொழுது  குறையும். அதாவது ஒவ்வொருவரின் காய் நகர்த்தல் மற்றும் அது  குறித்து யோசிப்பதெல்லாம் அவரவருக்கான நேரத்தில் செய்யப்பட வேண்டும்.

கறுப்பு நிறம் எடுத்து ஆடுபவர் ,தனது நகர்வினை செய்தவுடன்,அவர்  பக்கம் உள்ள கடிகாரத்தினை நிறுத்திவிட்டால், வெள்ளை நிறம் எடுத்து ஆடுபவருக்கான கடிகாரம் ஓடத் துவங்கும்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
      சதுரங்க கடிகாரத்தில் ,அனலாக் ,டிஜிட்டல் என இரு வகையுண்டு.
 

                  அனலாக் வகையில் சாவி கொடுத்து இயங்கும் எந்திர வகை(மெக்கானிக்கல் கீ வைண்டிங்)மற்றும் மின் கலத்தில் இயங்கும் குவார்ட்ஸ் வகை  என இரண்டு வகை உண்டு.
கீ கொடுத்து இயங்கும் மெக்கானிக்கல் வகை கடிகாரங்கள் விலை குறைவானவை. ஆனால் தற்சமயம் அவ்வகையான கடிகாரங்கள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.

இதற்கு அடுத்த விலையில் மின்கலத்தினால் இயங்கும் குவார்ட்ஸ் வகை அனலாக் கடிகாரங்கள், மற்றும்
டிஜிட்டல் வகை கடிகாரங்கள்  கிடைக்கிறது.




இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட குறைவாகவும்,அல்லது கூடிய விலையிலும் சதுரங்க கடிகாரங்கள் உள்ளன, பிராண்ட் மற்றும் சில சிறப்பு அம்சங்கள் பொறுத்து விலை மாறும். மேலும் ஃபிடே(FIDE) வரையறை செய்துள்ள தகுதிகள்,தரத்தில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
ஃபிடே(FIDE) தரத்தில் கிடைக்கும் பொதுவான அம்சங்களை கொண்ட கடிகாரங்களை வாங்கி பயன்படுத்துவது சிறப்பானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக