புதன், 6 ஆகஸ்ட், 2014

சதுரங்க விளையாட்டு தொடர்ச்சி-04

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.  வீரமா முனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                   

                   
       இப்பதிவில் , சதுரங்கம் விளையாடத்தேவையான தளவாடங்கள், சதுரங்கப்பலகை, அதில் உள்ள ஆட்டக்காய்கள், அவற்றின் நகர்வுகள், மற்றும் நகர்வுகளை எவ்வாறு குறிப்பெழுதுவது ஆகியவற்றினை காண்போம். முறையாக ஆடுவதற்கு மேற்கண்ட அடிப்படைகளை அறிந்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
                          சுட்டி:    chess-1

       சதுரங்க விளையாட்டு என்பது இரு நபர்கள் விளையாடும் ஓர் உள் அரங்கு  பலகை விளையாட்டு (Indoor board game) ஆகும். ஆட்டத்தின் துவக்கத்தில்  இரு ஆட்டக்காரர்களுக்கும் ,கறுப்பு ,வெள்ளை என இரு நிறங்களில் தலா பதினாறு காய்கள் வீதம் மொத்தம் 32 ஆட்டக்காய்கள் கொடுக்கப்படும். ஒருவர்  16 வெள்ளை நிறக்காய்களுடனும், அடுத்தவர் 16 கறுப்பு நிறக்காய்களுடனும் ஆட்டத்தினை ஆடுவார்கள்.

நிறத்தேர்வு ,  இரு தனிநபர்களுக்கிடையேயான போட்டி எனில் டாஸ் போட்டோ அல்லது நிறைய பேர் பங்கெடுக்கும் போட்டிகளில் என்றால் , ரேண்டமாக நிர்வாகிகளே நிறத்தினை தேர்வு செய்து , போட்டியாளர்களுக்கென பட்டியல் தயாரித்துவிடுவார்கள், இதனை  FIXTURE or PAIRING என்பார்கள். ஒவ்வொரு சுற்றிலும், தானாகவே கறுப்பு,வெள்ளை என நிறம் மாறி ,மாறி வந்துவிடும், எனவே முதல் சுற்றில் கறுப்பு வண்ணக்காய்கள் கிடைத்தால் கடைசி வரையில் அதிலேயே ஆட வேண்டியதாகி விடும் என அஞ்சத்தேவையில்லை.
  (கண்களை பாதுகாப்போம்- கண் தானம் செய்வோம்)
சதுரங்க ஆட்டக்காய்கள்(chess pieces).




chess pieces-pic.

ஒவ்வொரு ஆட்டக்காய்களும்  அவற்றின் ஆங்கிலப்பெயரின் முதல் எழுத்தால் குறியீடாக குறிக்கப்படும்.
 (1)ஒரு ராஜா= KING-K, மதிப்பிட இயலா புள்ளிகள் மதிப்பு கொண்டது.
  (2) ஒரு ராணி =QUEEN-Q, ஒன்பது புள்ளிகள் மதிப்பு
  (3) இரண்டு யானைகள் = elephant= fort=ROOK- R. தலா ஐந்து புள்ளிகள் மதிப்பு.
 (4)இரண்டு குதிரைகள்  = horse= KNIGHT=KN-N. தலா  மூன்று புள்ளிகள் மதிப்பு
 (5) இரண்டு மந்திரிகள்  =minister= BISHOP-B.தலா  மூன்று புள்ளிகள் மதிப்பு.
 (6) எட்டு வீரர்கள்.=soldiers=Pawn- P. தலா ஒரு புள்ளி மதிப்பு.
           என தலா 16 ஆட்டக்காய்கள் இருவருக்கும் கிடைக்கும். மொத்தம் 32 ஆட்டக்காய்கள்.
                 ஆட்டக்காய்களுக்கு என மதிப்பு புள்ளிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுவதில்லை, வெட்டும் போதோ அல்லது வெட்டுக்கொடுக்கும் போதோ எதனை வெட்டுக்கொடுக்கலாம், அல்லது வெட்டலாம் என எளிதாக தீர்மானிக்க மட்டுமே இம்மதிப்பு புள்ளிகள் பயன் படுகிறது.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
             உதாரணமாக , யானையை வைத்து பிஷப் அல்லது குதிரையை வெட்டி விட்டு , பதிலுக்கு யானையை இழக்க கூடாது. யானை என்பது, பிஷப் அல்லது குதிரையை விட அதிக புள்ளிகள் மதிப்பு கொண்டது. ஏன் எனில் அதிக சக்தியுடன் ஆட்டத்தில் தாக்குதல் நடத்த பயன் படுத்தலாம்.
  (கண்களை பாதுகாப்போம்-கண்தனம் செய்வோம்)
சதுரங்கப் பலகை(Chess board):

ஒரு சதுரங்கப் பலகை என்பது ,கறுப்பு, வெள்ளை என அடுத்தடுத்து 64 கட்டங்களைக் கொண்டிருக்கும். கறுப்பு,வெள்ளை என இல்லாமல் ஏதோ இரண்டு , வெளிர் ,மற்றும் அழுத்தமான வண்ணங்களிலும் பலகை மற்றும் காய்கள் பயன்ப்படுத்தலாம். கறுப்பு, வெள்ளை என்பது பொதுவான வண்ணமாகும்.

இந்த 64 கட்டங்களும் , இடமிருந்து வலமாக ,கிடைமட்டமாக எட்டு வரிசையாகவும், மேலிருந்து கீழாக செங்குத்ததாக  எட்டு வரிசையாகவும்,, "eight rows and eight columns" ஆக பிரிக்கப்பட்டிருக்கும்.

numberd board -pic.




கிடை மட்ட வரிசைகள் = row = rank
செங்குத்து வரிசைகள் = column =Line= file
        ஆட்ட நகர்வுகளை குறிப்பெழுத வசதியாக கிடைமட்ட வரிசையில் ஆங்கில சிறிய எழுத்தில் , இடமிருந்து வலமாக "a-to- h"  என பெயரிட்டு இருப்பார்கள்.ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு  column =Line= file ஐ குறிக்கும்.ஒவ்வொரு நெட்டுக்குத்து(column) வரிசையிலும் 1-8  வரையில் எண்ணிட்டு எட்டுக்கட்டங்கள் இருக்கும்.



கீழிருந்து  மேலாக  1 முதல் 8 வரையில் எண்கள் இடப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒரு  row = rank ஐ குறிக்கும். ஒவ்வொன்றிலும் எட்டுக்கட்டங்கள் கிடைமட்டத்தில் "a-to- h"  வரை  இருக்கும்.

இதனைக் கொண்டு 64 கட்டங்களையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி குறிக்க முடியும். ஒரு தெருவில் பல வீடுகள் இருக்கும் போது ஒவ்வொரு வீட்டுக்கும் கதவு இலக்கம் கொடுத்து அடையாளப்படுத்துவது போல தான்.
     (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
இந்த கோ ஆர்டினேட்களை கொண்டு ஒவ்வொரு கட்டத்திற்கும் தனி அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.




மேற்சொன்ன முறையினை பயன்படுத்தி  நகர்வுகளை குறிப்பெழுதும் முறை இறுதியில் சொல்லப்படும்.

இப்பொழுது பலகையினை அமைப்பது, காய்களை அடுக்குவது மற்றும்  ஒவ்வொரு ஆட்டக்காய்களும் எம்முறையில் நகரும் என்பதனைக்காணலாம். பெரும்பாலோருக்கு மேற்சொன்னவைகள் எல்லாம் தெரிந்தும் இருக்கலாம், புதியவர்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதால் பொதுவாக அனைத்தையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

          ஆடும்போது  சதுரங்கப்பலகையினை  வைப்பதற்கான விதி;-           
          சதுரங்கப்பலகையினை  விளையாட அமைக்கும் போது , வெள்ளை நிறம்( வெளிர் நிறம்) கொண்ட கட்டம் , வெள்ளை நிறக்காய்களுடன் ஆடுபவருக்கு வலப்புறத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
               வெள்ளை நிற ஆட்டக்காய்களுக்கு ஒன்றாம் எண் கிடைமட்ட வரிசை( row = rank) ஆரம்பமாக இருக்கும், அதே போல  கறுப்பு நிறத்துக் காய்களுக்கு எட்டாவது கிடைமட்ட வரிசை( row = rank) முதல் வரிசையாக இருக்கும்.

முதல் வரிசையின்(first rank) இடது ஓரத்தில் உள்ள  முதல் கட்டத்தினை a1 என்பார்கள், அதாவது "a column,இல்  first rank இல் முதல் கட்டம் ஆகும்,இப்படியே கிடைமட்டமாக a1 முதல் h1 வரையிலான முதல் வரிசையில்(first rank), முக்கியமான ஆட்டக்காய்களான , ராஜா, ராணி, யானை முதலானவற்றை அடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவது வரிசையில்(second rank) எட்டு வீரர்களும்(pawns) அடுக்க வேண்டும். அதாவது a-2 முதல்  h2 வரையில் அடுக்கப்பட வேண்டும்.

இப்பொழுது முதல் வரிசையில் முக்கியமான காய்கள் அடுக்கும் ஒழுங்குமுறையினை காணலாம்,

இரு ஓர முனைகளில் உள்ள a-1 மற்றும் h-1 இல் இரண்டு யானைகளும் இடம் பிடிக்கும்.

இருபக்கமும் உள்ள யானை களுக்கு அடுத்து உள்ள கட்டத்தில்  b-1,மற்றும் g-1 squares இல் ,இரண்டு குதிரைகள் இடம்பிடிக்கும்.

இரு பக்க குதிரைகளுக்கு அடுத்து உள்ள கட்டத்தில்,c-1 மற்றும் f-1 squares இல் இரு  பிஷப்கள் இடம் பிடிக்கும். ஒரு பிஷப் வெள்ளைக்  கட்டத்திலும்,இன்னொரு பிஷப் கறுப்பு கட்டத்திலும் இருக்கும், அவை அதற்கு உரிய கட்டங்களில் மட்டுமே மூலை விட்டமாக பயணிக்கும்.

முதல் வரிசையின் மையத்தில் உள்ள இரண்டு  கட்டங்களில் ராஜா, ராணி இடம் பிடிக்கும், ராஜா எப்பொழுதும் அதன் நிறத்துக்கு எதிர் நிறம் கொண்ட கட்டத்தில் தான் வைக்கப்பட வேண்டும்.

          ராணி அதன் நிறத்துக்கு ஏற்ற நிறத்தில் உள்ள கட்டத்தில் இடம் பிடிக்கும். ,
அதன் படி வெள்ளை ராஜாவின் ஆரம்பக்கட்டம் ,King -e1 என்ற கறுப்புக்கட்டம் ஆகும்

வெள்ளை ராணியின் ஆரம்பக்கட்டம் -Queen -d1 என்ற வெள்ளைக்கட்டம் ஆகும்.

வெள்ளைக்காய்கள் எப்படி அமைந்து உள்ளதோ அதே போல நேருக்கு  நேராக கறுப்பின் ஆட்டக்காய்களும் அமைக்கப்பட வேண்டும். ராஜாவுக்கு நேராக ராஜா, ராணிக்கு நேராக ராணி, யானைக்கு நேராக யானை என்பதாக.

pic.


(குறியீடாக ஆட்டக்காய்கள் அடுக்கப்பட்டிருக்கும் முறை)



அனைத்து ஆட்டக்காய்களும் அடுக்கப்பட்டு ஆட்டம் துவங்க தயாராக உள்ள சதுரங்கப்பலகை ,கீழ்கண்ட படத்தில் உள்ளது போலக் காணப்படும்.



full board-pic


  (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
சாதாரணமாக வீட்டில் பொழுது போக்கிற்கு விளையாட , ஒரு சதுரங்கப்பலகையும், காய்களும் போதும். இது 50 ரூபாய் முதல் கிடைக்கிறது.
                     இப்பொழுது ஆட்டப்பலகை தயார்.......

 தொடரும்...................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக