புதன், 6 ஆகஸ்ட், 2014

சதுரங்கம் விளையாட்டு தொடர்ச்சி -07

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.  
வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
           


            (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
 சதுரங்க விளையாட்டு மென்பொருட்கள் பற்றி  இங்கு காண்போம்.
     கணினி மூலமும்  விளையாடி பயிற்சி எடுக்கலாம், எனவே ஒரு நல்ல வேகமான கணினியும் அவசியம் தேவை. பெரும்பாலும் கணினி விளையாட்டுகள் விளையாடப்பயன்படுத்தப்படும், மல்டி கோர், கிராபிக்ஸ் பிராசசர் உள்ள கணினி பயன்படுத்தினால் சதுரங்க மென்பொருள் அதன் முழுத்  திறனில் செயல்படும்.

சதுரங்க மென் பொருள்கள்(chess softwares):

சந்தையில் பல சதுரங்க மென் பொருட்கள் கிடைக்கின்றன, அதில் முன்னணியில் உள்ள சில ஆட்டமுறை வணிக மென் பொருட்களை மட்டும்  இங்கு காண்போம்.
chess base

Deep fritz-13

மேற்சொன்ன இரண்டும் நீண்ட நாட்களாக முன்னணி மென் பொருளாக விளங்கி வருகின்றன. செஸ் பேஸ் என்ற மென் பொருளைத் தான் பல உலக சாம்பியன்கள் பயன் படுத்தி வருகிறார்கள்.

இதில் செஸ் பேஸ் என்பது அடிப்படையில் ஒரு செஸ் எஞ்சின் ஆகும், அதனுடன் எந்த ஒரு இடை ஊடகத்தினையும் இணைத்து விளையாடலாம்.

டீப் ஃபிரிட்ஸ் என்பது செஸ் பேஸ் உடன் இணைந்த இடைமுகப்பு  கொண்ட ஒரு மென்பொருள் ஆகும்..

Deep fritz-13 என்ற மென் பொருளையும் கிராண்ட் மாஸ்டர்கள் பயன் படுத்தி வருகிறார்கள், காரி கேஸ்பரொவ் உடன் நடந்த கணினியுடன் ஆடிய சதுரங்கப்போட்டியில் அவரை வெல்லப்பயன் படுத்தியது  அல்காரிதம் கொண்டது, போட்டிக்கு பின்னர் காஸ்பரோவின் ஆலோசனைகள் அடிப்படையில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டது என்கிறார்கள்.

இதில் Deep fritz-13 என்பது மல்டி கோர் பிராசர் உள்ள கணினிகளுக்கானது, மற்ற வகை கணினிகளுக்கு என  fritz-13 என்ற பெயரில் உள்ளது.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
        இந்த மென் பொருட்களை லைசன்ஸுடன் வாங்குவதாக இருந்தால் சுமார் 70-100 டாலர் விலை வரும், அப்படியே இந்திய ரூபாய்க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.(சுமார் 5000ரூபாய் மதிப்பு) , நம்ம ஊரிலும் கிட்டத்தட்ட அதே விலைக்கு கிடைக்கிறது.

இவற்றின் டெமொ வெர்ஷன்கள் இலவசமாக பயன் படுத்திப்பார்க்க கிடைக்கிறது, சம்பந்தப்பட்ட இணைய தளங்களுக்கு சென்று தரவிறக்கிப் பயன் படுத்தி பார்க்கலாம். அளவு சுமார் 200 எம்பி வரும்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
            மேலும்  இந்த ஆண்டு ,   கணினிகளுக்கிடையே நடக்கும் சதுரங்கப்போட்டியில் கீழ்கண்ட மூன்று  மென் பொருட்களும் பல மென் பொருட்களை வீழ்த்திக் காட்டியுள்ளன. இதில் கொமோடோ-6.0 சாம்பியனாகியுள்ளது.

komodo 6.0

Stockfish

Rybka

எனவே வரும் ஆண்டுகளில் சந்தையில் இவை முன்னணி சதுரங்க மென் பொருளாக வர வாய்ப்புள்ளது, தற்பொழுதே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன ,மேலும் விலை மலிவாகவும் உள்ளவை.

குறிப்பு:

ஒரு சதுரங்க மென் பொருள் என்பது , ஒரு இடைமுகப்பு (interface),சதுரங்க எந்திரம்,(chess engine), ஆட்டத்தொகுப்பு (data base) ஆகிய மூன்றினைக்கொண்டிருக்கும். சதுரங்க எந்திரம் தான் ஒரு மென் பொருளின் திறனை நிர்ணயிக்கக் கூடியது, இவற்றை தனியாக வைத்துக்கொண்டு ,விருப்பட்ட இடைமுகப்பு, டேட்டா பேசுடன் இணைத்து பயன் படுத்திக் கொள்ளலாம். எனவே பெரும்பாலான மென் பொருட்களில் சில குறிப்பிட்ட சதுரங்க எந்திரங்களே இருக்கும், ஆனால் இடைமுகப்பு, மற்றும் டேட்டா பேஸ் மற்றும் மாற்றிவிட்டு , புதிய பெயரில் புதிய மென்பொருளாக அறிமுகம் செய்து விற்பார்கள்.

இந்த மூன்றும் நன்கு ஒருங்கிணைந்து செயல்படும் மென்பொருளே திறன் வாய்ந்தது எனலாம், அதன் அடிப்படையிலேயே ,ஒரே சதுரங்க எந்திரம் கொண்ட இரண்டு  மென்பொருளில் கூட செயல்திறனில்  வித்தியாசம் காட்டும்.

Stockfish

Rybka

இவை இரண்டும் ஒப்பன் சோர்ஸ் சதுரங்க எந்திரங்கள்,இவற்றை அடிப்படையாக வைத்து ,இடைமுகப்பு, டேட்டா பேஸ் ஆகியவற்றை இணைத்து வணிக மென் பொருட்களும் விற்பனையில் உள்ளன, ஆனால் விலை மலிவானவை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக