திங்கள், 30 மார்ச், 2015

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!
அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை.
மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!
உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம்.
அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...
பொறுமை... பணம்!
குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள்.
அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி, இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பும் வராது.
அத்தியாவசியமா, ஆடம்பரமா..?
அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி, ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும்.
பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!
வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள். செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக் காட்டுங் கள்.
அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது, ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான புரிதலை உண்டு பண்ணும்.
குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்! தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக் கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர் இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும். இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும்.
பாக்கெட் மணி கொடுங்கள்!
குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். 30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம், அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது.
சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!
குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.
மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.
சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்!
வாட்ஸப் ல் வந்தது.
நல்லாதானே இருக்கு??

கல்வி வியாபாரிகள்!?!?!?........



கைதான ஆசிரியர்கள் போலீசில் கதறல்
வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம்: பள்ளி நிர்வாகம் நெருக்கடியால் விடைகள் தயார் செய்தோம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிளஸ்-2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட சம்பவத்தில் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பிய கேள்வித்தாளுக்கு விடைகளை தயாரித்ததாக அதே பள்ளியின் பிளஸ்-2 கணக்கு ஆசிரியர்கள் சஞ்சீவ்குமார், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். விடிய, விடிய விசாரணை நடத்தியதில் அவர்கள், பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதால், வாட்ஸ் அப்பில் வந்த கேள்வித்தாளுக்கு விடைகளை எழுதி கொடுத்தோம். இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தே ஆக வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எது வந்தாலும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்ததால்தான் இதை செய்தோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டாவதாக கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன் வாட்ஸ் அப்பில் இருந்து விடைகள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் சென்றிருக்க வாய்ப்புள்ளது. எனவே ஓசூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் செயல்படும் விஜய் வித்யாலயா பள்ளியில் கணக்கு தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து விசாரணை நடத்தவேண்டியுள்ளது என்றார். கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தபின், யாருக்கு பதில்களை அனுப்பியுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். இதில் அரசு பள்ளி ஆசிரியர்களும் சிக்க வாய்ப்புள்ளதால் அவர்களும் கலக்கமடைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் 4 ஆசிரியர்களும் நேற்று ஓசூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 பேரையும் வரும் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
ஆசிரியை கவிதா கிருஷ்ணகிரி பெண்கள் சிறையிலும், மற்ற 3 பேரும் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். உறவினர்கள் குமுறல்: கைது செய்யப்பட்ட விமல்ராஜ், சஞ்சீவ்குமார் உறவினர்கள் கூறுகையில், மாநில அளவில் ரேங்க் வாங்கும் பள்ளியில் வேலை கிடைத்ததால் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தனர். பள்ளியில் நல்ல வசதி எல்லாம் செய்து கொடுத்தனர். ஆனால் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் கூறியபடி செய்து, தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டனர். மொத்தத்தில் பள்ளி நிர்வாகத்தின் மிரட்டலால் தான் தற்போது இவர்கள் சிக்கிக்கொண்டனர். தற்போது இவர்களது எதிர்காலம் தான் கேள்விக்குறியாகியுள்ளது என குமுறலுடன் தெரிவித்தனர்.

வியாழன், 19 மார்ச், 2015

அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா -2015

சாலையில் பாதுகாப்பாக பயணிப்போம்,வாழ்நாள் இன்பம் பெறுவோம்.....
மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா நம்ம சத்தியமங்கலத்திற்கு அனைவரும் வருக,அம்மன் அருள் பெற்று செல்க...



ஹலோ போலீஸ் alert360 / hallo police அலெர்ட் 360

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் வசதி தமிழமெங்கும் பரவ வேண்டும்.

           நாட்டிலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில், புகார் தெரிவிப்பவரின் இருப்பிடத்தை அறியும் "அலெர்ட் 360' தொழில்நுட்ப வசதி புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து இங்கு வருவோருக்கும், ராமசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் தெரிவித்தார்.
இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
     இந்த மாவட்டத்தில் "ஹலோ போலீஸ்' சேவை கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவைத் திட்டத்தில் கூடுதல் வசதியாக புகார் தெரிவிப்பவரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிந்து, போலீஸார் அந்த இடத்துக்கு உடனே விரைந்து செல்லும் வகையில் "அலெர்ட் 360' என்ற புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது அமெரிக்காவில் ஓக்லேண்ட், ரோஸ்வில் பகுதிகளில்தான் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு கோவையில் செயல்பட்டு வரும் "எப்ரான்டெக்' என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள "அலர்ட் 360' என்ற ஆண்டிராய்டு தொழில்நுட்ப பயன்பாட்டு வசதியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் "ஹலோ போலீஸ்' சேவையை எளிதில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும்.
அவ்வாறு புகார் தெரிவிப்பவரின் இருப்பிடத்தை பற்றிய விளக்கம் எதுவும் அளிக்க வேண்டியதில்லை. சாதாரணமாக அழைத்தாலே அவரது பெயர், முகவரி, இருக்கும் இடம் குறித்த வரைபடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விடும். மேலும், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸாருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடனடியாக அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விடுவார்கள்.
போலீஸார் செல்லும் திசையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் தெரிவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்த தகவலையும் தெரிவிக்க முடியும். இதற்காக இந்த மாவட்ட வரைபடமும், அதன் கடலோரப் பகுதிகள் முழுவதும் இந்த சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றையும் புகார்களாக அனுப்பலாம்.
          வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் மாவட்ட எல்லைக்குள் வந்தவுடனேயே "ஹலோ போலீஸ்' தொலைபேசி எண் 83000 31100 தானாக சேர்ந்து விடும். பின்னர், கூகுள் தேடு பொறிக்குள் சென்று இந்த "அலெர்ட் 360' (alert360) வசதியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.
தினமணி நாளிதழ் செய்தி - 19.03.2015 பதிவிட்ட நண்பர் திரு. செல்வம் பழனிசாமி அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றிங்க.

வியாழன், 12 மார்ச், 2015

கூட்டுப்பொடி,சீரகப்பொடி,சாம்பார்ப்பொடி,-02

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.கூட்டுப் பொடி< இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான பொருட்கள்கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்), மிளகு - 3 மேசைக்கரண்டி, சீரகம் - 3 மேசைக்கரண்டி, தனியா - 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 15. செய்முறை ;எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும். தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் ஒரு கப் தனியா - 3 கப் துவரம் பருப்பு1/2கப் மிளகு அரை கப் சீரகம் ஒன்றரை கப், கட்டிவிரளி மஞ்சள் - 4 செய்முறை விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வறுக்க வேண்டாம் வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும். வேர்க்கடலை பொடி தேவையானவை; வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப் பொட்டுக்கடலை - 1 கப் வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) - 1/2 கப் பெருங்காயம் - 1 துண்டு வறுத்த கசகசா - 1 டேபிள்ஸ்பூன்  மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 டீஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும். சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். ---------------------------------------------------------------------------- சீரகப் பொடி தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். -------------------------------------------------------------------------- சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு ) தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் -- 10 கிராம் கொத்தமல்லி -- 20 கிராம் வெந்தயம் -- 1 டீஸ்பூன் ;கடலை பருப்பு -- 1 டீஸ்பூன் பெருங்காயம் -- 1 துண்டு கறிவேப்பிலை -- 2 இணுக்கு தேங்காய் எண்ணைய் -- தேவையான அளவு. செய்முறை எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும். கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும். இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி.  -----------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள்
 இளசான கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
 புளி - சுண்டைக்காய் அளவு.
 உப்பு - தேவையான அளவு
 உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
 செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் ------------------------------------------------------------------
எள்ளு பொடி - 2
தேவையான பொருட்கள்
 கருப்பு எள்ளு - 100கிராம்
காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15
 பூண்டு - 10
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
 செய்முறை
முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம். --------------------------------------------------------------------------
இட்லி / தோசை பொடி --முறை - 2
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு -- 1 கப்
 வத்தல் -- 1 கப்
பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை -- 2 இனுக்கு
 உப்பு -- தே.அ
வெள்ளை எள் -- 2 ஸ்பூன் (வறுத்தது)
செய்முறை
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி. ------------------------------------------------------------------
இட்லி பொடி( குழந்தை களுக்கு)
தேவையான பொருட்கள்
 உளுந்து பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
 மிளகு - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது)
 வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது)
கருவேப்பிலை - கால் கப்
உப்பு - அரை தேக்கரண்டி (அ) தேவையான அளவு
 பூண்டு - ஒன்று
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுத்து  பிறகு ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.பிறகு காற்று புகாத டப்பா அல்லது பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தவும். மொரமொரப்பாக அரைக்கவும்.
 ---------------------------------------------------------------------
கறிப் பொடி
தேவையான பொருட்கள்
 தனியா - 1 கப்
உளுந்து - 2 கப்
கடலை பருப்பு - 2 கப்
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் - சிறிது
 செய்முறை
 வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும்.
------------------------------------------------------------------
வேர்க்கடலைப் பொடி
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம்
கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு
உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு
சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு
உப்பு,
வறுக்க எண்ணெய்
செய்முறை
வேர்க்கடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம்.
குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும். --------------------------------------------------------------------------
கொள்ளு பொடி -1
இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்
 கொள்ளு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்)
பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும். சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும். இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி. இதனை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ----------------------------------------------------------------
கொள்ளு பொடி -2
தேவையான பொருட்கள்
கொள்ளு - கால் கப்
காய்ந்த மிளகாய் - நான்கு
பெருங்காயம் - தேவையான அளவு,
 உப்பு - தேவையான அளவு.
 செய்முறை
எல்லா பொருட்களையும் எண்ணையில்லாமல் வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து கரகரப்பாக பொடிக்கவும்.
-------------------------------------------------------------------
பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள்
 பொடி தயாரிக்க கொப்பரை தேங்காய் துருவல் - இரண்டு கப்
பொட்டு கடலை - முக்கால் கப்
கடலை பருப்பு - முக்கால் கப்
தனியா - முக்கால் கப்
பெருங்காயம் - இரண்டு துண்டு
காய்ந்த மிளகாய் - இருபது
கிராம்பு - பத்து
பட்டை - நான்கு இரண்டு அங்குல துண்டு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - பத்து
செய்முறை
அனைத்தையும் வறுத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது.
---------------------------------------------------------------
 இட்லி பொடி
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - ஒரு டம்ளர்
உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர்
வற மிளகாய் - கால் கப்
எள் - இரண்டு மேசை கரண்டி
வறுத்த வேர்கடலை - கால் கப்
கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி
 உப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு
செய்முறை
முதலில் கடலை பருப்பு ,உளுந்தம் பருப்பு சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறமிளகாயை போட்டு வற்றுத்துக்கொள்ளுங்க. பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணீர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வறுத்துக்கொள்ளுங்க. காலையில் செய்தால் அப்படியே ஆறவிடனும். ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நன்றாக தூள் செய்யுங்க. பாதியை நன்றாகவும் மீதியை மொரமொரப்பாகவும் தூளாக்கிக்கொள்ளுங்க.பிறகு இரண்டையும் கலந்து பத்திரப்படுத்திக்கொள்ளுங்க.எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்துங்க.ஈரம் மட்டும் படாமல் பார்த்துக்கொள்ளுங்க.
 --------------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள்
காய்ந்தமிளகாய் -- 5 கிராம்
 கொத்தமல்லி -- 10 கிராம்
 மிளகு -- 8 கிராம்
சீரகம் -- 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு -- 5 கிராம்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
எண்ணைய் -- தேவையான அளவு
 பெருங்காயம் -- சிறிதளவு
செய்முறை
 எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி.
 ---------------------------------------------------------------------------
கரம் மசாலா பொடி
தேவையான பொருட்கள்
பட்டை - ஐம்பது கிராம்
லவங்கம் - இருபத்தைந்து கிராம்
 ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி
 செய்முறை
எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும். ----------------------------------------------------------------------
சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)
  தேவையான பொருட்கள்
கேழ்வரகு - அரை கிலோ
சம்பா கோதுமை - ஐம்பது கிராம்
புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம்
 பாதாம் பருப்பு - ஐம்பது கிராம்
ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம்
 உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம்
 செய்முறை
கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாவற்றையும் தனித்தனியாக லேசாக வறுத்து ஆற வையுங்க. ஆறியதும் மிஷினில் கொடுத்து தூளாக்குங்க. மறுபடியும் ஆறவைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்க.தினமும் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து பால் குடியுங்க..குழ்ந்தைகளுக்கு கொடுங்க.
----------------------------------------------------------------------
ரசப்பொடி (மிளகாய் இல்லாமல்)
தேவையான பொருட்கள்
1. மிளகு - 100 கிராம்
2. சீரகம் - 100 கிராம்
3. தனியா - 6 தேக்கரண்டி
 4. உளுந்து - 3 தேக்கரண்டி
 5. கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
 செய்முறை
அனைத்தையும் வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். கடாயில் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து எடுக்கவும். ஆர வைத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாடியில் போட்டு திரித்து வைக்கவும் ------------------------------------------------------------------------
புளியோதிரை கலவை
  தேவையான பொருட்கள்
கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
 கடலைப்பருப்பு - 50 கிராம்
வேர்கடலை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
 புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு[பழைய புளி உபயோகபடுத்தினால் நல்லது]
கடுகு - 1டீ ஸ்பூன்
வெந்தயம் - 1டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
நல்லமிளகு - 1 டீ ஸ்பூன் (முழு மிளகு)
 பெருங்காயத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
 கறிவேப்பிலை - 3 கீற்று
நல்லெண்ணெய் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும். வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிளறி, எள், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு பொடியினை போட்டு கிளறிவிடவும் அடுத்து வேர்கடலை, பெருங்காயத்தூள் மற்றும் புளிக்கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசனை போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும். கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும். --------------------------------------------------------------------------------
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தேவையான பொருட்கள்
இஞ்சி - ஒரு கிலோ
 பூண்டு - அரை கிலோ
எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி
 செய்முறை
 முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தியல் அல்லது சிறிய குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு லேசாக புடைத்து சுத்தம் செய்யுங்க. இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவிபொடியாக வெட்டுங்க.
பூண்டையும் நறுக்கி கழுவி கொள்ளுங்கள். இப்போது இரண்டையும் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்துக்கொள்ளுங்க. அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம்.  ---------------------------------------------------------------
ரசப்பொடி
  ஸ்பெஷல் ரசப்பொடி.
 தேவையான பொருட்கள்
 தனியா - மூன்று மேசை கரண்டி
துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி
மிளகு - ஒரு மேசை கரண்டி
 சீரகம் - இரண்டு மேசை கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருக்காயம் - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு
 கருவேப்பிலை - கால் கைபிடி
காய்ந்த மிளகாய் - நாலு
 செய்முறை
 மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்றாக காய வையுங்க.வாணலியில் வறுத்து எடுத்துவைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.தேவைப்பட்டபோது கடுகு தாளித்து இதைச்சேர்த்து புளிக்கரைசல் சேர்த்தால் போதும்.. -----------------------------------------------------------------
இட்லிக்கு உடனடி பூண்டுப் பொடி
தேவையான பொருட்கள்
 பூண்டு - 10 பல் தோலுடன்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - 1 தே.கரண்டி
செய்முறை
பூண்டு , காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது பூண்டு பொடி ரெடி .இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ------------------------------------------------------------

சாட் மாசாலா மிக்ஸ்
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
 சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1 டீ ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
கரம் மசாலா - 2 டீ ஸ்பூன்
நல்லமிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
உலர்ந்த மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன்
கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1/2 டீ ஸ்பூன்
 செய்முறை
கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும் கரம் மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும் ---------------------------------------------------------------------
மசாலா டீ பொடி
குளிர் காலத்துக்கு ஏற்ற டீ.
தேவையான பொருட்கள்
 1. மிளகு - 16
2. பட்டை - 1 இன்ச்
 3. லவங்கம் - 4
4. ஏலக்காய் - 4
 5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி
 செய்முறை
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும். இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். ------------------------------------------------------------
திடீர் இட்லி மிளகாய் பொடி
  தேவையான பொருட்கள்
 1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
 3. பூண்டு - 3 பல்
 4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி
 5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
 6. கறிவேப்பிலை - கொஞ்சம்
 7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி
 8. உப்பு
செய்முறை
எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும். இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார். குறிப்பு: இது இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும். ---------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி
  தேவையான பொருட்கள்
 இளம் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
 உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயம் - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - அரை தேக்கரண்டி.
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும். ஆறியதும், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். குறிப்பு: இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இந்த அளவில் பொடித்தால் ஒருவாரம் வரை வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது புதிதாக பொடித்துக் கொண்டால் தான் வாசனையாக இருக்கும்.
 --------------------------------------------------------------
குழம்புப் பொடி
. தேவையான பொருட்கள்
தனியா- ஒன்றரை கிலோ
வற்றல் மிளகாய்- அரை கிலோ
 துவரம்பருப்பு- கால் கிலோ
 கடலைப் பருப்பு- 100 கிராம்
 மிளகு-50 கிராம்
 சீரகம்- 50 கிராம்
 வெந்தயம்- 1 மேசைக்கரண்டி
அரிசி- 1 மேசைக்கரண்டி
சோம்பு- 1 மேசைக்கரண்டி
 செய்முறை
அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் -------------------------------------------------------------------------
ரசம் பொடி
தேவையான பொருட்கள்
 தனியா - 1 கப்
துவரம் பருப்பு - ½ கப்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 15
சீரகம் - 1/4 கப்
கருவேப்பில்லை - 10 இலை
பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
 வெந்தயம் - ½ தே.கரண்டி
செய்முறை
முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
 -------------------------------------------------------------------
ரசப் பொடி
தேவையான பொருட்கள்
 காய்ந்தமிளகாய் -- 5 கிராம்
 கொத்தமல்லி -- 10 கிராம்
மிளகு -- 8 கிராம்
சீரகம் -- 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு -- 5 கிராம்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
எண்ணைய் -- தேவையான அளவு
பெருங்காயம் -- சிறிதளவு
 செய்முறை
எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி.
 ------------------------------------------------------------------------

கரம் மசாலா
தேவையான பொருட்கள்
 மிளகாய் - 200 கிராம்
தனியா - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
கிராம்பு - 25 கிராம்
 பட்டை - 5 கிராம்
கசகசா - 200 கிராம்
 செய்முறை
எல்லா சாமான்களையும் தனியாக வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புலவு வகைகள், மசாலா கறிவகைகள் செய்யும் போது இதில் கொஞ்சம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். -------------------------------------------------------------------------------- கரம் மசாலாப் பொடி தேவையான பொருட்கள் சோம்பு - 250 மில்லி மிளகு - 150 மில்லி பட்டை - 2 இஞ்ச் அளவுள்ள 7துண்டுகள் கிராம்பு - 8துண்டு ஏலக்காய் - 8துண்டு செய்முறை இவை அனைத்தையும் வெயிலில் சுமார் 1 மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத ஒரு பாட்டிலில்போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம். குறிப்பு: ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.ஆனால், நன்றாக மாவு போன்று பொடிசெய்யுங்க.. ----------------------------------------------------------------------- கறிக்குழம்பு கரம்மசாலா தேவையான பொருட்கள் கசகசா - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு மேஜைக்கரண்டி தனியா - இரண்டு மேஜைக்கரண்டி சோம்பு - இரண்டு தேக்கரண்டி கிராம்பு - 4 பட்டை -செய்முறை இவையனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடித்துவைத்துகொள்ளவும். கறிக்குழம்பு செய்யும் போது கடைசியில் ஆறு பல் பூண்டை நசுக்கி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி இந்த கரம் மசாலா பொடியை சேர்த்து செய்தால் குழம்பின் வாசம் மற்றும் ருசி நன்றாக இருக்கும். ------------------------------------------------------------------------------- சாம்பார் பொட தேவையான பொருட்கள் வற்றல் - 200கிராம் கொத்தமல்லி - 50 கிராம் சீரகம் - 25 கிராம் உளுந்தம்பருப்பு - 10 கிராம் கடலை பருப்பு - 25 கிராம் துவரம் பருப்பு - 10 கிராம் புழுங்கல் அரிசி - 10 கிராம் மிளகு - 10 கிராம் ;வெந்தயம் - 1 தேக்கரண்டி பெருங்காயம் - நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து மஞ்சள் - 2ஸ்பூன் உப்பு - 1 மேஜை கரண்டி செய்முறை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்னிரமாக வறுத்துமிசினில் அல்லது மிக்சியில் அரைத்து கொள்ளவும். குறிப்பு: சாம்பார் பொடியை குறைந்தது 5 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் ---------------------------------------------------------------------------- >கரம் மசாலாப் பொட தேவையான பொருட்கள் கிராம்பு - 20 கிராம் ;பட்டை - 20 கிராம் ஏலம் - 20 கிராம் ஜாதிக்காய் - ஒன்று சீரகம் - 20 கிராம் மிளகு - 20 கிராம் தனியா - 40 கிராம் சுக்கு - 40 கிராம் செய்முறை இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும்

சமையலறையில் பயன்படுத்தும் அளவுகள் விவரம்..

மரியாதைக்குரியவர்களே, வணக்கம். கொங்கு தமிழ் மன்றத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். நாள்தோறும் சமையல் இல்லாமல் இருப்பது துன்பம். அந்த சமையலறையில் பயன்படுத்தும் அளவுகள் விவரங்களை இங்கு காண்போம்.கிடைக்கும் அத்தனை அளவுகளையும் இங்கு சேர்த்துக்கொள்வோம்.. ஒரு லிட்டர் - 1000மில்லி லிட்டர்/கிராம், ஒரு மேஜை கரண்டி அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் - 20மில்லி, ஒரு தேக்கரண்டி அதாவது ஒரு டீ ஸ்பூன் - 5மில்லி, ஒரு அவுன்ஸ் - 40மில்லி, ஒரு பிடி- சுமாராக கால் ஆழாக்கு, ஒரு தோலா - 11 கிராம், ஒரு பலம் - 35கிராம், ஒரு வீசை(ஒரு படி) - 1400கிராம் (40பலம்), ஒரு உழக்கு - கால் படி, ஒரு ஆழாக்கு-அரைக்கால் படி.

உப்புக் கண்டம் போடலாம் வாங்க...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். ஆட்டு இறைச்சி உட்பட மாமிசங்களை உப்புக்கண்டம் போடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்;
 ஆட்டு இறைச்சி - அரை கிலோ,
இஞ்சி எலுமிச்சை அளவு,
பூண்டு 10பல்,
காய்ந்த மிளகாய் - 10,
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ற அளவு,
 செய்முறை;
 இஞ்சி,பூண்டு,மிளகாய்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
ஆட்டு இறைச்சியை சுமாரான துண்டுகளாக நறுக்கி கழுவிக்கொள்ளவும். பிறகு அரைத்த விழுதினை மட்டனில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
அதனை கெட்டியான நூலில் கோர்த்து வெயிலில் நன்றாக காய வைக்கவும்.
 காய்ந்த பிறகு எடுத்து காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். 
தேவைப்படும்போது உப்புக்கண்டத்தை எடுத்து லேசாக தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்து சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்..