ஞாயிறு, 8 மார்ச், 2015

தன்னொழுக்கத்தின் சக்கரவர்த்தி திருமிகு. சிவக்குமார் அவர்கள் கதை-01



மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.தனிமனித ஒழுக்கத்தின் சக்கரவர்த்தி அவர்களின் கடந்துவந்த பாதை இனியொரு நாள் கிடைக்காமல் போனால்?அதாங்க அவரது பக்கத்திலிருந்து திருடி இங்கு பதிவிட்டிருக்கிறேன்.
Actor Sivakumar
28 மே 2014 ·
1987-ஆம் ஆண்டு 'ஜூனியர் விகடனில்' தொடராக வெளிவந்து, 2005 -ஆம் ஆண்டு முழு நூலாக
வெளிவந்த 'இது ராஜபாட்டை அல்ல '- என்ற எனது நூல்
இதுவரை 12 பதிப்புக்களைக்
கண்டிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில சுவையான
வரிகளை இம்முக நூலில் உங்களோடு
பகிர்ந்து கொள்வதைப்
பெருமையாக நினைக்கிறேன்
- சிவகுமார்

உருப்பட்டே ஆக வேண்டும் என்ற வெறியில் 15 வயதில் ஊரை விட்டுக் கிளம்பின என்னை - 'மது, மாது, சூது' தொடமாட்டேன் என்று, காந்தி செய்து கொடுத்த சத்தியத்தைச் செய்யச் சொன்னவர் என் நண்பர் - எங்கள் ஊரின் முதல் ஓராசிரியராக வந்த குமாரசாமி அவர்கள்.


பள்ளிப் படிப்பு முடிந்தது. பருவ உணர்வு தலை தூக்கியது. அது காதலோ காமமோ அல்ல. அதற்கு முந்தைய நிலை. பெண்களைப் பார்த்தாலே ஒரு குறுகுறுப்பு. சிலிர்ப்பு. கிறுக்கு பிடித்த மாதிரி, என் வயதொத்த ஒரு பெண் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.
அவள் அழகியில்லை, படித்தவள் இல்லை ஏழை. தினம் கூலி வேலைக்கு சென்று வயிறு வளர்க்கும் சாதாரனப் பெண். கவர்ச்சியான தோற்றமில்லை.
ஆனால் அவள் குரல் காந்தம் போல் என்னைக் கவர்ந்தது.
பல முறை ஆசைப்பட்டு, துணிந்து ஒரு முறை சந்தித்தேன். என்ன வேண்டும் என்றாள். சொல்லத் தெரியவில்லை. ஏன் என்னிடம் வந்தாய்? பதில் சொல்ல முடியவில்லை.
சொல்லாமல் புரிந்து கொண்டாள்.
"இதோ பார், வயசில எல்லோருக்கும் வர்ற ஆசை இது. ஈ எறும்புக்கும் வரும். நீ நல்லாபடிச்சி பெரிய ஆளா ஆனேன்னா 60 வயசுல கூட 20 வயசு
அழகான பொண்ணு கெடைக்கும். போய் உருப்படற வழியப்பாரு"

சிலையாக நின்றேன். அவள் சொடுக்கிய சாட்டை வலி உடம்பெல்லாம் பரவியது. நெடுநேரம் அந்தச் சுடுகாட்டுப் பக்கம் இரவில் நின்றேன்.
மனதில் ஒரு வைராக்கியம்!! புலன்களிலே ஒன்று உபாதை செய்தால் அதை
இழுத்துவைத்து அறுத்து விடுவது என்ற வெறியோடு சென்னை வந்தேன்
இன்று 88 கதாநாயகிகளோடு கட்டி அணைத்துக்காதல் வசனம் பேசி நடித்தும் சலனங்கள், சபலங்கள் பட்டும் கிழே விழுந்து மூக்குடைபடாமல் காப்பாற்றியது, அந்த போதிமரம் தந்த ஞானம்.
ஆனால், நான் சென்னை வந்த 4 ஆண்டுகளில் வயதான ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, வறுமையில் வாழ்ந்து, மூன்றாவுது பிரசவத்தில் அந்த போதிமரம் உலகை விட்டு மறைந்துவிட்டதுதான் சோகம்.
-சிவகுமார்

"ஐயா! அம்மா!! கோயிலுக்குள்ள மாட்டிக்கிட்டோம். தயவுசெஞ்சு வந்து கதவைத் திறந்து எங்களைக் காப்பாத்துங்க"
காலை 9 மணிக்கு பாழடைந்த பிள்ளையார் கோயிலுக்கு சாமி கும்பிடப் போய், காற்றில் கதவு இறுக்கமாய் மூடிக்கொள்ள, உள் பக்கமிருந்து இழுத்துத் திறக்க வளையமோ, பிடிப்போ இல்லாமல் மாலை 5 மணி வரை கத்திக் கத்தி, தொண்டை வறண்டுவிட்டது.
பத்து வயதுச் சிறுவர்கள் இருவரின் கூச்சல், 15 அடி உயரமுள்ள கோயிலின் ஓடு வேய்ந்த கூரையைத் தாண்டி யார் காதிலும் விழவில்லை.
இருட்ட ஆரம்பித்தது. விளக்கு வைக்க யாரும் வரமாட்டார்கள். சோறு தண்ணியில்லாமல் சாகப்போகிறோம் என்பது உறுதியாகி விட்டது.
உடைந்த குரலில் கடைசியாக 'அம்மா காப்பாத்துங்க' என்று கத்திவிட்டு மயக்கமானோம். கூலிவேலைக்குப் போய் ஊர் திரும்பிக்கொண்டிருந்த மக்கள் காதில் விழ, ஒருவழியாக கதவு திறக்கப்பட்டது.
அது மறுபிறவி!
பத்து வயதில் மனதில் ஏற்பட்ட பயம், 50 வயது தாண்டியும் விமானத்தில் ஏறி கதவுகளைச் சாத்தியதும் வந்து விடும்.
'ஓ! கதவுகளைச் சாத்தியாகிவிட்டது. நீ வெளியே போகமுடியாது. கெஞ்சினாலும் திறக்கமாட்டார்கள் '- ஆழ்மனம் மிரட்டும். உடனே மெடிடேட் செய்து, பயப்படாதே ஒன்றுமில்லை! நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று 1000 தடவை சொல்லி அமைதிப்படுத்த ஆரம்பித்து விடுவேன்.
இன்று அந்த' போபியா'விலிருந்து மீண்டு விட்டேன்.
 பெண்கள் பலவீனமானவர்கள் என்று
யார் சொன்னது?
'மாப்ளே !பொடக்காளில நானே
வளத்த செடியில புடலங்காய் காச்சிருக்கு. மெட்ராஸ் எடுத்திட்டு
போறீங்களா ?'
நூறு வயது கடந்த பாட்டி- என் சகோதரி மாமியார் பேச்சியம்மாள்
கேட்டார் .
60 வயது தாண்டினாலே ஆட்டம்
கண்டுவிடுகிறது வாழ்க்கை. மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் பார்க்காத - கைத்தடி, கண்ணாடி தேவைப்படாத பாட்டி வளர்த்த செடியிலிருந்து பறித்த புடலங்காயை விமானத்தில் சென்னை எடுத்து வந்தேன்.
'ஒரு சந்தேகம் கேக்கட்டுங்களா' என்றார். 'ஊருக்குள்ளெ அப்பப்ப சேதி வருது. கிணத்தில குதிச்சு செத்துப் போயிட்டாளாம். விட்டத்தில் கயிறு மாட்டி ஒருத்தி தூக்கில தொங்கிட்டாளாம்'-னு சொல்றாங்க. நானும் ஒரு வேளை அப்படி ஏதாச்சும் பண்ணி செத்திடுவனா ?'- ' சத்தியமா அப்படியெல்லாம் உங்களுக்குச் சாவு வராது. குடிக்கத் தண்ணி இல்லாம, குடத்தை எடுத்துகிட்டு சனங்க அலைஞ்சப்ப ,2 மைல் தூரத்தில ஏரோட்ரோம் காட்டுக்குள்ளே
இருக்கற உங்க கிணத்தில,
ஆயில் எஞ்ஜின் வச்சுத் தண்ணி எடுத்து 30 வருஷம் 250 குடும்பத்துக்கு நல்ல தண்ணி குடுத்த மகராசி நீங்க. அப்படியெல்லாம் கேவலமான சாவு உங்களுக்கு வராது'- என்றேன்.
கணவனை இழந்த கவலை மறந்து, அவர் மறைந்த பிறகும்
40 ஆண்டுகள் வாழ்ந்து 2006-ல்
சூர்யா - ஜோதிகா தம்பதியை வாழ்த்தி விட்டு 109 வயதில் விடைபெற்றார் அந்த
மூதாட்டி .
தியாகம், பொறுமை, சகிப்புத்தன்மை
வலி தாங்கும் வல்லமை,இவற்றின்
பிரதிபிம்பம் பெண்கள் என்பதை ஆண்கள் என்றும் மறந்து விடக்கூடாது.



1957 - பிப்ரவரிமாதம் கடைசி வாரம். பிற்பகல் 3 மணிக்கு பள்ளியில் பெல் அடித்தார்கள்.11-ம் வகுப்பு 3 பிரிவு மாணவர்களும் வெளியேறி, நடுவே புல்வெளியில் பெஞ்ச் நாற்காலிகளை வரிசையாய்ப் போட்டார்கள். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர், 6-ம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்பு வரை பாடம் கற்பித்த அத்தனை ஆசிரியர்களுடன் 'குரூப் போட்டோ' எடுக்கும் நிகழ்வு அது.
என்னையும்சேர்த்து என் வகுப்பிலிருந்து 4பேர், வலைப்பை, தூக்குப் போசியை எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினோம் !.
கிளாஸ் லீடர் பொன்னுசாமி ஓடி வந்தான்.'எங்கப்பா போறீங்க ! இன்னிக்குத்தானே போட்டோ எடுக்கப்
போறோம்'-என்றான்.
'அது காசு கொடுத்தவங்களுக்கு.
எங்களுக்கு இல்லை'-என்றோம். அதிர்ந்து போனவன்,'பரவாயில்லே, போட்டோலயாவது நின்னுட்டுப் போங்க. நல்லாப் படிக்கற நாலு பேரும் போயிட்டீங்கன்னா போட்டோவே வேஸ்ட்'- என்றான்.

"ஒரு வாரம் முன்பு மாதக்கட்டணம்
ரூ.5.25 அம்மாவிடம் வாங்கிப் பள்ளியில்
கட்டினேன்.அடுத்த நாள் பொதுத் தேர்வுக்கு என்று 11.50 பைசா கேட்ட
போதே கோபப் பட்டார் அம்மா.
மறுநாள் , ஸ்வீட் காரத்தோடு, குரூப் போட்டோ எடுக்க 5 ரூ கேட்ட போது
'சோளத்தட்டு அறுவடைக்குக் கூலி குடுக்கோணும்.இப்ப அந்த போட்டோ
இல்லன்னா குடி முழுகிடாது'- என்றார்.
அவர் வாதத்தில் நியாயம் இருந்தது"
' காசு கொடுக்காமல் போட்டோல நிக்க தன்மானம் எடங்கொடுக்கல'-
என்று கூறிவிட்டு கிளம்பி விட்டோம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
40 ஆண்டுகளில் 175 படங்களில் ஹீரோவாக, மொத்தம் 192 படங்களில்
நடித்திருக்கிறேன். குறைந்த பட்சம் 4 கோடி பிரேம்களில் என் முகம் பதிவாகி இருக்கிறது. ஆனால், ஒரு கோடி கொடுத்தாலும் அந்த குரூப் போட்டோ கிடைக்குமா?
காலம் கருணை காட்டியது !!
50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2007 -ல்
விஜய் டி.வி. நிகழ்ச்சிக்காக அதே
பள்ளிக்குச் செல்ல நேர்ந்த போது
உயிரோடு இருந்த 5,6 ஆசிரியர்கள்
10,15 மாணவ மாணவியர்களுக்கு (தாத்தா, பாட்டிகளுக்கு) தகவல் கொடுத்து அதே புல் தரையில், அதே ஓடு வேய்ந்த பின்னணியில் புகைப் படம் எடுத்துக் கொண்டேன்.

"ஏங்கண்ணு நேத்து நீ வரல்ல. மூணாம்பெறை பாத்துட்டு உன் மொகத்தில முழிச்சா மாசம்பூரா மனசுக்கு சந்தோசமா இருக்கும்னு தேடினேன். எங்கடா போயிட்ட ?"
"......"
"சரி,இரு. பொள்ளாச்சியில இருந்து கார்த்தால புது ஓவல்டின் வந்திருக்கு. பால்கறந்து, காய்ச்சி,கலக்கித்தர்றேன். தந்தார். குடித்தேன். தேவாம்ருதம் இதுதானோ!?!.. 10 வயதில் அப்படி உணர்ந்தேன்.வீடு வந்து அம்மச்சியிடம் சண்டை போட்டேன்.
" மிளகாய்க்கார பெரியம்மா துளிர் வெள்ளெல பொடவ கட்டறாங்க. ராணி மாதிரி கம்பீரமா இருக்காங்க! அஸ்கா சக்கர போட்டு ஓவல்டின் தர்றாங்க!
இங்க எப்ப பாத்தாலும் கருப்பட்டிக் காப்பி, கொத்தமல்லிக் காப்பிதானா ?-
வாதிட்டேன்.
பெரியம்மா கதை பெருஞ்சோகக்
கதைப்பா.
7 வயசில பெரியம்மாவுக்கு கண்ணாலம் பண்ணி வச்சிட்டாங்க. மாப்பிள்ளை 9 வயசு முத்துச்சாமி -அத்தை பையன். நீளமா முடி வளத்து குடுமி போட்டிருப்பான்
ஒரு ஐப்பசி மாச அடை மழையில ஊரையே அடிச்சிட்டுப்போறமாதிரி வெள்ளம். 40அடி ஆழத்தில இந்த கிணத்துத் தண்ணி மள மளன்னு மேல 10-க்கு வந்திடுச்சு.
ஊர்ப்பசங்க விலாங்கு மீன் மாதிரி 'சளேர் சளேர்'னு குதிச்சு நீந்தி விளையாடினாங்க. கிணத்து மேட்ல முத்துச்சாமி .
என்னடா சும்மா வேடிக்கை பாத்திட்டு, குதிடான்னு தள்ளி உட்டுட்டானுக. முத்துச்சாமிக்கு நீச்சல் தெரியாது .
2 தடவை மேல வந்து 'காப்பாத்துங்க' -ன்னான். பசங்க சிரிச்சாங்க. போனவன் திரும்பல.
பெரிசுக வந்து மூலைக்கு மூல பாதாள சங்கிலிய விட்டு தேடினாங்க.ஒரு மணி நேரம் தேடினதுக்கப்புறம் சங்கிலில குடுமி சிக்க வெளிய தூக்கிப் போட்டாங்க
7 வயசுப்பொண்ணுக்கு கழுத்திலிருந்த மஞ்சக்கயிற அறுத்துட்டு, வெள்ளச்சீலய ஒடம்பில சுத்திவுட்டுட்டாங்க.
புருஷங்கறவன் யாரு, அவன் செத்தா நம்ம நெலமை என்னன்னு தெரியாம சிரிச்சுக்கிட்டே இருந்திச்சு அது.
6 வருஷம் கழிச்சு வயசுக்கு வந்திச்சு.
தாய்மைன்னா என்ன, மகப்பேறுன்னா என்னன்னு தெரியாமலே 90 வயசு வரைக்கும் வாழ்ந்திச்சு.
அறியாத வயசில அக்கா இப்படி ஆயிட்டாளேன்னு பொள்ளாச்சில இருந்து மாமா அரிசி, பருப்பு, ஓவல்டின், செலவுக்குப் பணம் மாசாமாசம் அனுப்பிக்கிட்டே இருக்காரு-"ன்னாங்க அம்மச்சி.

கேட்டதும் தெகச்சுப் போயிட்டேன்.
எனக்கு ஒரே ஆறுதல் 1974 - ஜூலைல, அவங்கள என் கல்யாண வரவேற்புக்கு, மெட்ராஸ் கூட்டியாந்து, ஒரு வாரம் தங்க வச்சு ஊரெல்லாம் சுத்திக்காட்டி அனுப்பினேன்.
பெரியம்மாவுக்கு அளவில்லாத சந்தோஷம் !!
" கோரிக்கையத்துக் கிடக்குதண்ணே
இங்கு வேரில் பழுத்த பலா - மிகக்
கொடியதென்றெண்ணிடப் பட்டதண்ணே - குளிர் வடிக்கின்ற வட்ட நிலா "-
பாரதி தாசன்


1946-ல் கலங்கல் பள்ளியில் 1-ம் வகுப்பிலிருந்து 4-ம் வகுப்பு வரைக்கும்
பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்
கல்யாணசாமி நாயுடு. காந்தியவாதி, கதர் சட்டை, கட்டுக்குடுமி, சைவ உணவுக்காரர்.
'கால் அரைக்கால் காசுக்கு, நால் அரைக்கால் கத்திரிக்கா. ஒரு காசுக்கு எத்தனை !? வைடா சிலேட்டை!!'- ன்னு கத்துவாரு. அதுக்குள்ளெ விடை எழுதி
தரையில சிலேட்டை வச்சிறணும். இல்லை, கொண்ட பிரம்பு மண்டைய பதம் பாத்துரும்!
"வாத்தியார்ரு! நாலு எழுத்த கத்துக்குடு.
கண்ணு, மூக்கைத் தவிர,பாக்கியெல்லா
உறிச்சு எடுத்திடு" - பெற்றோர் வேண்டு கோள்.... அந்த குருவே எங்க தெய்வம் !!
சூலூர் உயர்நிலைப்பள்ளி முடித்து, சென்னையில் 6ஆண்டு ஓவியக்கலை, பின்பு 15ஆண்டு சினிமா நடிப்பு, - இந்தக்
கட்டத்தில் அவரைச் சந்தித்தேன் .
' தண்டபாணி ! (இதுதான் என் சொந்தப் பெயர்) மழை மாரி ஏமாத்திடுச்சு. கெணறெல்லாம் வறண்டு போச்சு. மாடு
கண்ணுகளுக்கு தீவனத்துக்கு கூட ஒண்ணும் வெளயமாட்டேங்குது.
நீ என்ன பண்றே, அந்த பூமிக்குள்ள ஒரு எட்டு நடந்திட்டு வா. உன் பாதம் பட்டாலாச்சும் அதுக்கு ஒரு கதிமோட்சம் கெடைக்குதான்னு பாப்போம்'..
"ஐயா, என்ன சொல்றீங்க ?"
"சும்மா காட்டக்குள்ளெ ஒரு நடை போயிட்டு வான்னேன்" புரிந்துவிட்டது எனக்கு....
"ஐயா, அந்த பூமி அகலிகையுமில்லெ,
நான் ராமனுமில்லே. என் பாதம் பட்டு
விமோசனம் அடைய "--
"டேய், ராமாயணம் நாந்தானே உனக்குச் சொல்லிக்கொடுத்தேன். நம்பிக்கைதாம்பா வாழ்க்கை. நீ சும்மா ஒரு எட்டு போயிட்டு வா"
கண்களில் நீர் முட்ட அவர் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு புறப்பட்டேன்.....
***** ******** ******** ******
மூன்றாண்டு கழித்து மீண்டும் அவரைச்
சந்திக்க நேர்ந்தது.
"தண்டபாணி, உன் பாதம் பட்ட யோகம் போன வருஷம் பிளாட்போட்டு பாதி நெலத்தை வித்திட்டேன். மகனுக்கு 2 லட்சம், மகளுக்கு 2 லட்சம் குடுத்திட்டு நான் பேங்கில 2 லட்சம் போட்டு வச்சிருக்கேன்"...
இது, காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான் என்றாலும்,...காலம் அவருக்கு கருணை காட்டியிருக்கு என்பதே உண்மை.
ஆனாலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது, அன்று எப்படி கண்டிப்புக் காட்டினார்கள் -பின்னாளில் எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதற்கு இது உதாரணம்...!


இரவு நரி ஊளையிட்டது. ஊருக்குள் யாராவது சாவார்கள் என்றார் அம்மச்சி.
பொள்ளாச்சியில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து, கல்லூரி சேருமுன் பிறந்த கிராமத்தில் இரண்டு நாள்கள் தங்கிப்போக வந்தான் அண்ணன் ஷண்முகம். என்னைவிட பத்து வயது மூத்தவன்.
சாமி வீட்டில் பெருச்சாளி செத்து விழுந்தது.வீட்டைக் காலிசெய்து பக்கத்து வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம்.
காலையில் கலகலப்பாக விளையாடிய அண்ணன்-எம்.ஜி.ஆர் கலரில் மின்னியவன் - பகலில் காய்ச்சல் அடிக்க படுக்கையில் வீழ்ந்தான்.
தொடை இடுக்கில் இருபக்கமும் கட்டி.. வேப்பிலைக்கொளுந்து அரைத்து
பத்துப்போட்டாள்அம்மா! பயனில்லை நடுநிசி கடந்த நேரம்.

'அம்மா, போயிட்டு வர்றேன்'-
குரல் கொடுத்தவன் போய்விட்டான் .
நாலு வயதுப் பிள்ளைக்கு மரணத் பற்றி என்ன தெரியும்? எல்லோரும்அழுவதைப் பார்த்து நானும் அழுதேன்.
மறுநாள் ஊரில் காக்கை குருவி இல்லை. நாங்களும் பக்கத்து ஊர் குடி பெயர்ந்தோம்.
சுடுகாட்டுப் பகுதியைக் கடக்கையில் 6 அடி நீள மண்மேடு, அம்மா அதை அழுகையோடு பார்த்துக்கொண்டே வர 'என்னம்மா இது' - என்று கேட்டேன்.
'உன் அண்ணன் தூங்குகிறான்' -என்றாள்..''அண்ணன் வரமாட்டானா ?'' 'மாட்டான்'-என்றாள்.
மின்னலைப்போல் நேற்று மின்னி இன்று மறைந்து விட்ட அண்ணனை
நினைத்து முதன்முதலாய் அழுதேன்.
ஊருக்குள் நுழைந்தாலே உயிருக்கு ஆபத்து என்று மக்கள் சிதறி ஓடிய போது போனால் உயிர் போகட்டும் என்று , ஒருஆத்மா, தானே சுடுகாடு சென்று,குழி வெட்டி, விறைத்துப் போன உடம்பை, தனி ஆளாகத் தூக்கி வந்து அடக்கம் செய்த விபரம் பின்னாளில் அறிந்தேன்.
அவர்தான் இந்த மாமனிதர்
சுப்பையா கவுண்டர். என் அத்தை மகன்!!
முதல் புகைப்படத்தில் நிற்பவர் அண்ணன் சன்முகம்.

"ஏம்மா, சினிமா பாத்திருக்கியா? "
"ம்..கல்யாணமான புதிசுல உங்கப்பன் ஒரே ஒரு ஊமைப்படத்துக்கு கூட்டீட்டு போனாரு".
"அதுக்கப்புறம்?"
"எவன் கூட்டிட்டுப் போனான்"
"ஓஹோ... சரி, கற்பகம்னு ஒரு படம். கோபால கிருஷ்ணன் எடுத்தது. சூலூர் ஷண்முகதேவில ஓடுது. போலாமா ?"
"போனாப் போச்சு"- ரெடியாகி விட்டார்.
1964-மே 27-ந்தேதி -பிற்பகல் 2 மணி. சூலூர் ஷண்முகதேவி தியேட்டர் வாசல்.
"ஏம்ப்பா நின்னுட்டே ! போய் டிக்கட் வாங்கிட்டு வா".
"எங்கெ போறது ,தியேட்டரு பூட்டீருக்கு"
சினிமாவுக்குப் போகும் பரபரப்பில் காலையில், ரேடியோ, நேரு இறந்த செய்தி சொன்னது மறந்து விட்டது. மீண்டும் சைக்கிளில் டபுள்ஸ். சூலூரிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள எங்க ஊருக்கு திரும்ப பயணம்.

மறுநாள் டிக்கட் வாங்கி தியேட்டருக்குள் உட்கார வைத்துவிட்டு ஊர்திரும்புகையில், மூச்சு விட முடியாமல், அடைமழையில் சைக்கிள் மிதித்தேன். அடுத்த நாள் காலையில், சூலூரில் சகோதரி வீட்டில் தங்கியிருந்த அம்மாவிடம் 'படம் எப்படி' என்றேன்.
"நா அப்பவே சொன்னெ, எனக்கெல்லா சினிமா ஆகாதுன்னு நீ கேட்டியா!? "
"என்ன ஆச்சு" -இடைவேளைக்கப்பறம் கே.ஆர். விசயாளை மாடு முட்டுனதுக்கப்பறம் போன கரண்ட்டு இதா வருது அதா வருதுன்னு சொல்லி, விடிஞ்சு போச்சு. வாசல்ல சாணி தெளிச்சுட்டாங்க..." என்றார்.
நொந்து போய் விட்டேன்.
இருந்தும், மூணாவது நாள், சண்டை போட்டு தகறாராறுபண்ணி, முழுப்படத்தையும் பாக்க வச்சேன்.
"நல்லாத்தானே இருக்கு சினிமா. அப்பறம் ஏன் சனங்க, சினிமா பாத்தா கெட்டுப்போயிடுவாங்கன்னு சொல்றாங்க"- என்றார் வெகுளியாக.
இப்போது புரிந்து கொண்டீர்களா, சினிமாவில் நான் நடித்த போது அம்மா எதிர்ப்பு சொல்லாத காரணத்தை !!!!

சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன்.
சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொடுத்தால் அதிகம் என்று தெரிந்து அதிர்ந்து போனேன்.
கொதிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுக்குள், முண்டா பனியன்,அழுக்கு லுங்கியுமாக 'கோடா' மீது ஏறி நின்று தோள்பட்டை வலிக்கும் அளவுக்கு 10 நெ. பிரஷ்ஷை வைத்து, அவர்கள் ஓவியம் தீட்டும் அவலத்தைப் பார்த்த போது - 40 அடி ஆழக் கிணற்றில் குழி அடித்து வேட்டு வைப்பவருக்கும், இந்த ஓவியரின் வலிக்கும் பேதமில்லை என்று தெரிந்தது.
மிகப்பெரிய ஓவியம் வரைபவருக்கு, மிக குறைந்த சம்பளம் என்றறிந்த போது என் கற்பனைக் கோட்டை சிதறியது.
இங்கிருந்து பெரிய ஓவியனாக வர முடியாது - எங்கள் செல்வது என்று தவித்து, தடுமாறிய போது தன்னம்பிக்கை ஊட்டியவர் ஓவியர் சுந்தரம். ஓவியக்கல்லூரியில் சேர வழி வகை செய்தவர் ஓவியர் நடராஜன்.

16 வயதில் மோகன் ஆர்ட்ஸில்
வரைந்த Ten Commandments
ஓவியம்.
வழி காட்டிய ஓவியர்கள்
சுந்தர மூர்த்தி - நடராஜன்

1960 அக்டோபர் தசரா விடுமுறையில், சென்னையிலிருந்து மகாபலிபுரத்துக்கு 56 கி.மீ. சைக்கிளில் சென்று, தெருவில் படுத்து, கைப்பம்பில் குளித்து, 2 நாள் ஓவியம்தீட்டி முடித்து, அங்கிருந்து 30 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் சென்று, கோயில் பின்னால் கழுகு பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு
கோயில்களை ஸ்கெச் செய்த பின் அங்கிருந்து செங்கல்பட்டு 28 கி.மீ., அங்கிருந்து சென்னை 46 கி.மீ., வழியில் லேலண்ட் கம்பெனி ஆயுத பூஜை. பொரி கடலை வாங்கி கொரித்துக் கொண்டே சென்னை வந்தோம்.
மோகன் ஆர்ட்ஸில் ஓராண்டு,
ஓவியக் கல்லூரி காலத்தில் 6 ஆண்டு என இந்தியாமுழுக்கச் சுற்றி ஓவியம் வரைய ஆன செலவு 7596 ரூ.
இன்று 5 நட்சத்திர ஓட்டலில் ஒரு
குடும்பம் ஒரு வேளை உணவுக்கு
ஆகும் செலவு 10,000/- ரூ.

என்ன வித்தியாசமான அனுபவம் !!
குறைந்த தேவைகளும் உயர்ந்த லட்சியமுமாய் வாழ்ந்த நாட்கள் இனி கிடைக்குமா ?
அப்பொழுது வரைந்த ஓவியம் இங்கே!



1961-அக்டோபர் -தசரா விடுமுறையில் பாண்டிச்சேரி சென்றேன்.
என் ஓவியக்கலை கல்லூரி நண்பர் ஆர்.டி.தயாளன்- 107,கொசக் கடைத் தெருவில் குடியிருந்தார். அவர் வீட்டிலிருந்து, ஒரு பக்கம் பெடல் கட்டை இல்லாத சைக்கிளை எடுத்துக்கொண்டு அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு சென்று லைட் ஹவுஸ் ஒட்டிய காம்பவுண்ட் அருகே அமர்ந்து, தெற்கு நோக்கி ஓடிய ட்யூப்ளே தெருவையும், அதன் நடுவே கம்பீரமாய் நிற்கும் ட்யூப்ளே சிலையையும் -அதைத் தாங்கி நிற்கும்அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்க மேடையையும் -உதய சூரியனின் தங்கக் கரங்கள் படும்போது 2மணி, 30 நிமிடங்களில் வரைந்து முடித்தேன்.

 ஏவிஎம் நிறுவனத்தில் என் முதல் படம்"காக்கும் கரங்கள்" 19-6-1965 -ல் வெளிவந்தது......
ஏழு ஆண்டுகள் பிரஷ்ஷும் பெயிண்ட்டுமாய் இந்தியா முழுக்க சுத்தியவனை திடீரென்று காமிரா முன்னால் நிற்க வைத்தால்?!...
'ராதா , உன் முகத்தை கண்ணாடில நீ பாத்ததில்லையா ?
நீ அழகானவள்னு உங்கண்ணனும் அம்மாவும் உங்கிட்ட ஒரு தடவை கூட
சொன்னதே இல்லையா? '-இந்த 2 வரி வசனத்தை ஒழுங்காகச் சொல்ல முடியாமல்
திணறினேன். காரணம் இந்த 2 வரி வசனத்துக்கு 3 நாள் ஒத்திகை. ஓவர் ஒத்திகை உளறுவதற்குக் காரணமாயிடுச்சு.
போலியோவினால் பாதிக்கப்பட்ட பெண்ணை நான் காதலிக்கக் காரணம் என் தாய்க்கும் அந்த குறைபாடு உண்டு என்று, அவளுக்கு விளக்கும் , 5 நிமிட நீளம் வரும் நீண்ட வசனக் காட்சியை , அதிகாலை 4.30 மணிக்கு கடற்கரை சென்று கடல்
ஓசையை மிஞ்சும் அளவு கத்தி மனப்பாடம் செய்து நடித்தேன்.
கடைசியில் அந்த உருப்படியான ஒரு காட்சியும் வெட்டப்பட்டுவட்டது. தாரை தாரையாக கண்களில் நீர் !
படத்தில் நான் வரும் 3 காட்சிகளையும் சேர்த்தால் 6 நிமிடம் கூடத் தேறாது.
புகழ்பெற்ற நிறுவனத்தின் மூலம் அறிமுகமானேன் என்ற ஆறுதல் மட்டுமே மிஞ்சியது. சூடுகண்ட பூனையாகி எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டேன்.

திருமிகு.சிவக்குமார் அவர்களுக்கு நன்றிங்க.. என அன்பன்  பரமேஸ் டிரைவர் -  சத்தியமங்கலம். ஈரோடு மாவட்டம்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

விகடனின் மீன்கள் உசாரு! என்ற பார்வை...



மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.
         கொங்குத்தமிழ் மன்றத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். மீன்கள் பற்றிய விகடன் பார்வையை நாமும் காண்போம்..
 
 மீன்கள் ஜாக்கிரதை!  
  உரம் போட்டு, ஊசி போட்டு, கழிவுகள் கொட்டி... காசி. வேம்பையன், படங்கள்: கே.குணசீலன்

              'மீன் குழம்பு’ என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு! ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா? இன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை? அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன? ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு பக்கத்தை இங்கே அலசலாம்.
மீன் உணவை, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உள்நாட்டு மீன்கள். இன்னொன்று, கடல் மீன்கள். உள்நாட்டு மீன்களைப் பொறுத்தவரை ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் தானாக வளர்பவை ஒரு வகை. குளம் வெட்டி பண்ணை அமைத்து, தொழில் முறையில் வளர்க்கப்படும் மீன்கள் இன்னொரு வகை. அதிகரித்துவரும் மீன் தேவையின் கணிசமான அளவை உள்நாட்டு மீன்கள் பூர்த்தி செய்துவரும் நிலையில், இவற்றின் நேர்-எதிர் அம்சங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் குளத்து மீன் என்றால், அது ஊர்ப் பொதுக் குளத்தில் வளர்வதுதான். ஆண்டுக்கு ஒருமுறை குளம் ஏலம் விடப்படும். மீன் பிடிக்கும் நாள் அன்று தண்டோரா போடப்பட்டு ஊரே மீன் வாங்கும்.
       2000-ம் ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியது. ஊர்ப் பொதுக் குளத்தை ஏலம் எடுத்தவர்கள், அதில் கெமிக்கல் உரங்களையும், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகளையும் அள்ளிக்கொட்டி அதிவேகமாக மீன்களை வளர்த்து 'இருபோக’ வருமானம் பார்த்தார்கள். வரும்படி வருவது தெரிந்ததும் குளம் ஏலத்தில் போட்டி உருவானது. 5,000 ரூபாய்க்கு ஏலம் போன குளம், 20 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. கிராமத்துக் குளத்தின் ஏலம் இப்போது லட்சத்தைத் தொட்டுவிட்டது என்பதுடன், அது அரசியல் அதிகாரத்துடனும் இணைந்துவிட்டது.
ஒரு கிராமத்தில், அதிகபட்சம் நான்கைந்து குளங்கள்தான் இருக்கும். அதை நான்கு பேர்தான் ஏலம் எடுக்க முடியும். ஏலம் எடுத்து மீன் வளர்த்து, அந்த நான்கு பேர் மட்டுமே லாபம் பார்க்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? 'அப்படியான லாபத்தைக் குவிக்க என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவர்கள், தங்களின் சொந்த விவசாய நிலங்களை மீன் குளங்களாக மாற்றினார்கள்.
'போட்ட காசு கைக்கு வருமா?’ என்ற நிச்சயம் இல் லாத விவசாய நிலங்களைக் கட்டிகொண்டு அழுவதைவிட, உத்தரவாத லாபம் தரும் மீன் குளமே மேல் என்று எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாக... கிராமப்புறங்களில் எக்கச்சக்கக் குளங்கள் பெருகின. அரசும், உள்நாட்டு மீன் வளர்ப்பு என இதற்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. மானியத்தை வாங்கி முறைப்படி மீன் வளர்த்து, விற்பனை செய்து லாபம் பார்த்தால் பிரச்னை எதுவும் இல்லை. மாறாக, கெமிக்கல் உரங்களை அள்ளிக்கொட்டி விவசாயம் செய்வதுபோலவே மீன்களையும் வளர்க்கத் தொடங்கிவிட்டனர். இயற்கையான முறையில் குளங்களில் வளரும் நாட்டு மீன்களைவிட, அதிவேகமாக வளரும் இந்த வளர்ப்பு மீன்கள் இவர்களின் லாபத்தை அதிகப்படுத்தின. இந்த பயங்கரத்தின் உண்மையை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் நேரடியாக உணர்வார்கள்.
''ஊர்ப் பொதுக் குளங்களில் இயற்கையாகவே நாட்டு மீன் இனங்கள் இருக்கும். குளம் வற்றினாலும் அவற்றின் முட்டைகள் குளத்திலேயே படிந்திருக்கும். தண்ணீர் வந்ததும் மறுபடியும் குஞ்சுகள் உற்பத்தியாகும். இது, இதுவரை நடந்த இயற்கையான நடைமுறை.
இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், குளம் காய்ந்து இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து இந்த நாட்டு மீன்களின் முட்டைகளை அழித்துவிடுகின்றனர். அவற்றை விட்டுவைத்தால், வளர்ப்பு மீன்களுக்குப் போடும் தீவனத்தைத் தின்றுவிடும்; அதனால் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். மேலும், வளர்ப்பு மீன்களை ஒப்பிடும்போது, நாட்டு ரக மீன்கள் அளவில் சிறியவை. மெதுவாக வளரக்கூடியவை. இதனால் அவற்றை கருவிலேயே கொன்றுவிட்டு வளர்ப்பு மீன்களை உற்பத்தி செய்கிறார்கள்'' என்று அதிரவைக்கிறார் நக்கீரன். இவர் நன்னிலம் பகுதியில் வசிக்கும் சூழலியல் நிபுணர்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ''மீன்கள் வேகமாக வளர்வதற்கு செயற்கைத் தீவனங்களை குளங்களில் கொட்டுகிறார்கள். அதில் வழக்கமான மீன் தீவனங்களும் உண்டு. அத்துடன் பூச்சிக் கொல்லிகள், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்கள், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகள் போன்றவற்றையும் கொட்டுகின்றனர். இது பொய் இல்லை. கிராமங்களுக்குச் சென்றால், இந்தக் காட்சியை நேரில் காணலாம். இந்த நச்சுகள் கரைந்து, அமில நிலையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் சுவாசித்தும்தான் அந்த மீன்கள் வளர்கின்றன. இப்படி உரம் போட்டு வளர்க்கப்படும் மீன்கள், கொஞ்சம்கூட அழுக்கு இல்லாமல், இயந்திரத்தில் வார்த்து எடுக்கப்பட்ட செதில்களைப் போல நேர்த்தியாக இருக்கும். பளபளப்புடன் மின்னும். இன்று உள்நாட்டுக்குள் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலானவை இத்தகையவையே!
முன்பெல்லாம் தஞ்சாவூர் மாவட்டக் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீன்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். குளத்து மீனுக்கே உரிய மண்வாசனையை அதில் உணர முடியும். ஆனால், இந்த வளர்ப்புக் கெண்டைகளை சாப்பிட்டால் யூரியா வாசனைதான் வருகிறது. எந்தச் சுவையும் இல்லாமல் சக்கையாக இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து மீன் சாப்பிடுபவர்கள் இந்தச் சுவை வேறுபாட்டைத் துல்லியமாக உணர்வர். மீன் உணவின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் சத்துகளும் இந்த மீன்களில் கிடைக்காது. இவற்றால் உடல் ஆரோக்கியம் சீர்குலையும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே, வளர்ப்பு மீன்கள் குறித்து உடனடியாக நாம் விழிப்பு உணர்வு அடைய வேண்டும். உள்நாட்டு மீன் வளர்ப்பை முறைப்படுத்த வேண்டும்!'' என்கிறார் நக்கீரன்.
இத்தகைய மீன் குளங்கள், பெரும்பாலும் வயல்வெளிகளுக்கு இடையிலேயே அமைந்துள்ளன. சுற்றிலும் நெல் விவசாயம். நடுவே மீன் விவசாயம். இதனால் நெற்பயிர்களுக்கு அடிக்கப்படும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் குளத்து நீரில் கலப்பது கண்கூடு. இத்தகைய மீன் பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படுவது கெண்டை மீன்களே. அதிகம் எடை நிற்கும் என்பதாலும், விறுவிறுவென வளரும் என்பதாலும், மக்கள் அதிகம் இந்த மீனை விரும்புவதாலும் இந்த மீனைத் தேர்வு செய்கின்றனர்.
வேறு சில இடங்களில் விறால் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடல் மீனில் வஞ்சிரத்துக்கு உள்ள மதிப்பு, நாட்டு மீனில் விறாலுக்கு உண்டு. ஒரு கிலோ 400 ரூபாயைத் தாண்டி விலைபோகக்கூடிய மீன் இது. இவை வளர்க்கப்படும் குளங்களில் இவற்றுக்கு உணவாக 'ஜிலேப்பி’ மீனும் வளர்க்கப்படுவது வாடிக்கை. இப்போது விறால் மீனின் துரிதமான வளர்ச்சிக்காக, அழுகிய முட்டைகள், கோழி இறைச்சியின் கழிவுகள் ஆகியவையும் கொட்டுகின்றனர்.
இப்படி கண்டதையும் கொட்டி மீன்களை வளர்ப்பதால் அவை நச்சுத்தன்மையுடன் வளர்வது ஒரு பக்கம் இருக்க... நமது நாட்டு ரக மீன்கள் அடியோடு ஒழித்துக்கட்டப்படுகின்றன. சாணிக்கெண்டை, உழுவை, குறவை, அயிரை, கெளுத்தி, பனையேறிக் கெண்டை போன்ற நாட்டு மீன் வகைகள் இப்போது அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன. தவளைகள், நத்தைகள், வயல் நண்டுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு அரணாக இருந்த பல உயிரினங்களை, இந்த கெமிக்கல் கழிவுகள் வேகமாக அழித்துவருகின்றன. தவளையின் அழிவு, பல்லுயிர்ச் சூழலில் பெரும் விளைவுகளை உருவாக்கக்கூடியது என்று சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், வளர்ப்பு மீன்களுக்கு வைக்கப்படும் நச்சு உணவின் விளைவாக குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது. அதில் குளித்தால் உடம்பில் கடும் அரிப்பு ஏற்பட்டு, தோல் நோய்கள் வருகின்றன.
கோயம்புத்தூரில் உள்ள 'சலீம் அலி சென்டர் ஃபார் ஆர்னித்தியாலஜி’ சார்பில் கேராளாவில் 150 இடங்களில் மீன் குளங்களில் சோதனை செய்யப்பட்டது. அனைத்துச் சோதனை முடிவுகளும், குளங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தின.
மதுரை மருத்துவர் சௌந்தரபாண்டியன் சொல்லும் இன்னொரு தகவல் அதிரவைக்கிறது. ''பிராய்லர் கோழிகளை குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடையவைப்பது போல, மீன்களையும் வளரவைக்க 'குரோத் ஹார்மோன்’ உள்ள தீவனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மீன்கள் அதிவேகமாக வளர்கின்றன. மேலும், பிராய்லர் கோழிக் கழிவுகளைத் தீவனமாக கொடுத்து வளர்க்கும்போது, அந்தக் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹார்மோன்களின் எச்சமும் மீன்களில் கலக்கிறது. இத்தகைய 'குரோத் ஹார்மோன்’ உள்ள மீன்களை தொடர்ந்து சாப்பிடும்போது பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக மாற வாய்ப்பு உள்ளது. 15 வயது பெண்ணுக்கு இருக்க வேண்டிய உடல் வளர்ச்சி, 10 வயதுப் பெண்ணுக்கு வந்துவிடும். பெண் குழந்தைகள் குறைந்த வயதிலேயே பூப்பெய்துகின்றனர்'' என்கிறார் இவர்.
பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதைப் போல சில இடங்களில் சினையுற்ற மீன்களுக்கும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். வயிற்றில் இருக்கும் மீன் குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், கொழுகொழுவென வளரவும் தூண்டும், அந்த ஹார்மோன் ஊசி.
'நாட்டு மீன்களில்தானே இவ்வளவு பிரச்னை... கடல் மீன்களாவது பரவாயில்லையா?’ என்று கேட்டால், ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்று சொல்லலாம். எனினும் கடல் மீன்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்ட பிறகுதான் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக, நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில், கடலோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அணுமின் நிலையம் தொடங்கி, கெமிக்கல் தொழிற்சாலைகள் வரை பல உள்ளன. இவற்றின் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
''கடலோரப் பகுதிகளில் வளரும் கானாங்கெளுத்தி, சுழுவை, வேலா போன்ற மீன் இனங்களில் 'டி.டி.டி, எண்டோசல்பான்’ போன்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. 2007-2008ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகளில் ஆய்வுசெய்யப்பட்டது. அதில் அலையாத்திக் காடுகளின் இலைகள், பவளப் பூண்டுகள், கடல் பாசிகள் போன்றவற்றில் மெர்க்குரி, காட்மியம் ஆகியவற்றின் நஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது'' என்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.
நமது மீன்வளத்தின் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கிவிட்டது!

கரன்சி கடல்!
தமிழகம் முழுக்க 608 கடலோரக் கிராமங்களில், 8.11 லட்சம் மீனவர்கள் (2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், 3.75 லட்சம் ஹெக்டேரில் உள்நாட்டு மீன் இனங்களும், உவர்நீர் மீன் இனங்களும் வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு மீனவர்களின் மக்கள்தொகை 2.25 லட்சம். 2012-2013ம் ஆண்டுகளில் 1.85 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
 2010-2011ம் ஆண்டுக்கு மீன்வளத் துறைக்கு 193.32 கோடி ரூபாயும், 2013-2014ம் ஆண்டுக்கு 467.44 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
ஆதாரம்: தமிழக அரசின் மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-2014.

இயற்கை முறையிலும் மீன் வளர்க்கலாம்!
சாயன உரங்களையும், உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும் தீவனங்களையும் தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் மீன்களை வளர்க்க முடியுமா? ''நிச்சயம் முடியும்'' என்கிறார் மயிலாடுதுறை, ஆனந்த குடியைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை.
''நோய் தொற்றுக்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு பதிலாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்தினாலே நோய்கள் மீன்களை அண்டாது. மீன்களின் உணவான நுண்ணுயிர்கள் மற்றும் சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்குப் பசுஞ்சாணமே போதுமானது. மேலும், கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, வாழை இலைகள், வேலிகளில் மண்டிக்கிடக்கும் கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்களும், அசோலா பாசியும் கொடுத்தாலே... மீன்கள் ஜம்மென்று வளர்வதுடன், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்'' என்கிறார். இவரைப் போலவே இயற்கை முறையில் மீன் வளர்க்கும் ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

நாட்டு மீன்.. கடல் மீன்.. எது நல்லது?
பொதுவாக, 'நாட்டுவகை மீன்களைவிட கடல் மீன்களே சத்து நிறைந்தவை’ என்கிறார்கள் நிபுணர்கள். ''ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் 'ஒமேகா-3’ என்ற புரதச் சத்து அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்றுக் குறைவு. ஆற்று மீன்களிலும் வளர்ப்பு மீன்களிலும் இது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆழ்கடல் மீன்களைத் தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவது இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன. வெளிநாட்டினர், கடல் மீன்களை மட்டும் இறக்குமதி செய்வதும் இதனால்தான். ஒரு மனிதன் தனக்குத் தேவையான புரதச் சத்துகளைப் பெறுவதற்கு ஆண்டுக்கு 15 கிலோ மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குக் கிடைப்பதோ ஆண்டுக்கு 7.5 கிலோ மட்டும்தான். நீண்ட கடற்பகுதியைக் கொண்ட இந்தியாவில் தாராளமான ஆழ்கடல் மீன்வளம் உள்ளது. ஆனால், அவை வெளிநாட்டு ஆலைக் கப்பல்கள் மூலமாகப் பிடிக்கப்பட்டு கடலில் இருந்தவாறே ஏற்றுமதி செய்யப்படுகின்றன'' என்கிறார் கடல்வள அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின்.
நன்றிங்க விகடன் இதழுக்கு.............

நண்டு மசாலா....உங்களுக்குப்பிடிக்குமா...

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.நண்டு மசாலா  செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள் ;
சுத்தம் செய்து உடைத்த நண்டு-8
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை ,மல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு.
இனி வறுத்து அரைக்க தேவையானவை:
சீரகம் – அரைடீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 4
நறுக்கிய வெங்காயம் – 150 -250 கிராம்
நறுக்கிய தக்காளி – 250 கிராம்
மல்லி இலை – அரை கப்
செய்முறை;
கடாயில் எண்ணெய் விட்டு மல்லி, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். அத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் தக்காளி, மல்லி இலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். சுத்தம் செய்த நண்டுகளை அதில் சேர்த்து பிரட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து முடி வைத்து வேக விடவும். வெந்ததும் உப்பு போதுமானதாக உள்ளதா என சரி பார்க்கவும். நறுக்கிய மல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும். சுவையான நண்டு மசாலா ரெடி.

நாட்டுக் கோழி வளர்ப்பு

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
   கொங்குத்தமிழ்மன்றத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நாட்டுக் கோழி வளர்ப்பு! அரசு மான்யத்துடன்!!
   கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத்துறைக்கு நன்றிங்க..
   பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் 15 வருடங்களுக்கு முன்பு கோழி வளர்ப்பது வழக்கம் அப்போது கோழி என்றால் அது நாட்டுக்கோழி மட்டுமே காலப்போக்கில் பிராய்லர் கோழி வந்த பிறகு நாட்டுக்கோழியுன் தாக்கம் குறைந்தது அதற்கு காரணம் வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகள் மக்கள் சாப்பிடுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக அதிகமாக பிராய்லர் கோழியின் விற்பனை அதிகரித்தது.
             பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் சிறந்தது என்பதால் கடந்த சிலவருடங்களாக நாட்டுக்கோழிக்கு மதிப்பு அதிகரித்தது. அது கிடைப்பது சுலபமல்ல என்பதால் ஆட்டிறைச்சிக்கு ஈடான விலையில் தற்போது நாட்டுக்கோழி விற்பனை ஆகிறது..பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.
           முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.பராமரிப்பு முறைகள்
       பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரதசத்து அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.
வளர்ப்பது எப்படி?
              அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.
           அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.
        குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
கட்டமைப்பு
            ஆயிரம் கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின் ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம். முதலீடு
ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம். தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 பேருக்கு நாட்டுகோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைய பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. உடனடியாக தொடர்பு கொள்ளலாம் .
வருமானம் ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.
         சந்தை வாய்ப்புஇறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.
 கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில்!
கோழி வளர்க்கும் திட்டம்
   கோழி பண்ணை வளர்ப்பில் முன்னோடியாக விளங்கும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் போல பிற மாவட்டங்களிலும் கோழி வளர்ப்பினை ஊக்கு விக்கும் பொருட்டு தமிழக அரசால் 2013-2014ம் ஆண்டு இத்திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது.
          திருவண்ணாமலை மாவட்டத்தில் இத் திட்டம் 240 நபர்களுக்கு ரூ.70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப் பட்டது. மேலும் இத்திட்டம் தமிழகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் செயல் படுத்தப் பட உள்ளது.25 சதவீதம் மானியம்
இத்திட்டத்தின் கீழ் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு சார்பில் 25 சதவீத மானியமும், நபார்டு வங்கி மூலம் கோழிக்கான முதலீட்டு நிதியில் இருந்து 25 சதவீத மானியமும் ஆக மொத்தம் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 50 சதவீதத்தை பயனாளிகள் தங்கள் சொந்த செலவிலோ அல்லது வங்கியிலிருந்து கடனாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
நபார்டு வங்கியின் 25 சதவீத மானியத்தை பெறு வதற்கு பயனாளிகள் வங்கியில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பினை ஆண்டு முழுவதும் ஊக்குவிக்கும் பொருட்டு, இரண்டாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீத மானியமும் (ரூ.3,125), மூன்றாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீத மானியமும் (ரூ.1,875) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
போதிய நிலம்
மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானர்கள் இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனா ளிகள் புதிய கொட்டகை அமைத்து பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வ முள்ளவர்களும் இத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
3 நாள் பயிற்சி
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தின் மூலம் 5 நாட்களுக்கு கோழி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் கறிக்கோழி வளர்ப்பிற்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி மேலாளரிட மிருந்து பெற்று, அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாட்டுக்கோழிக் கொழம்பு
நாட்டுக்கோழி வறுவல் அல்லது குழம்பு வைக்கலாம் வாங்க.......தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி- 1 கிலோ
சிறிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய் 1/2 மூடி
கறிவேப்பிலை - 6 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
         பட்டை, கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்பபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
  தக்காளி தோல் உறியும் வரை வதக்க வேண்டும்.
அதிலேயே தேங்காய், மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற வைத்து அம்மியில் அரைக்கவும் ( மிக்சியை விட அம்மி சுவை நன்றாக இருக்கும்)
         ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
          பின்னர் இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.
         அரைச்சமசாலா சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும் குழம்பு கொஞ்சம் தண்ணியாக வைக்கவும்.
           கொத்தமல்லி தூவி இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு தயார்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அதில் கோழிகறியை மட்டும் தனியாக எடுத்துபோட்டு வதக்கவும்.
          வதக்கும் போது கொஞ்சம் கோழி கொழம்பை ஒரு 5 கரண்டி ஊற்றி வதக்கி பெப்பர் போட்டு நன்கு கிளறவும்.இப்போது நாட்டுக்கோழிவறுவல் தயார்
சூடான இட்லியை இலையில் போட்டு நாட்டுக்கோழி கொழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிடவும் அன்று முழுவதும் அந்த மனமே இருக்கும்.உடனடி நாட்டுக்கோழி வறுவல்
           ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்று வெங்காயம், தக்காளி, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.இத்துடன் கோழித்துண்டுகள், தேங்காய் துண்டுகள் போட்டு கிளறவும். பின் கடையில் விற்கும் சிக்கன் மசலா பாக்கெட்டை கொட்டி நன்கு வேக விடவும் இப்பொழுது உங்களுக்கு உடனடி நாட்டுக்கோழி வறுவல் ரெடி.

http://rjdahtvm.blogspot.in வலைப்பக்கம் செல்லுங்க...மேலும்விவரம் அறியலாம்.

மூலிகைபொடிகளும் அவற்றின் பயன்களும்...

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்..மூலிகைப்பொடிகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் பற்றி அறிந்துகொள்வோம்.
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும்,
        சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஜிங்க் சத்துக்கள் நம்ம உடலுக்குத்தேவைங்க...

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை பார்ப்போம்.

              அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும்.

ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல், ஜிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக நடைபெற வைப்பதோடு, பொடுகுத் தொல்லை மற்றும் சரும நோய்களை தடுக்கும்.

இந்த ஜிங்க் சத்துக்கள் ஆண்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை ஆண்களின் டெஸ்ட்ரோஜென்னின் அளவை சரியாக வைக்க உதவும். சொல்லப்போனால், இந்த சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவு சத்துக்களை பெற முடியாது. ஆனால் ஒரு சில சைவ உணவுகளிலஇந்த சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால், நிச்சயம் ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம்.

இப்போது ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதை உணவில் சேர்த்து, பயன் பெறுங்கள்.

முட்டை மஞ்சள் கரு:

முட்டையின் மஞ்சள் கருவில் அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. இதனால் பலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் அதிகமான அளவில் ஜிங்க் சத்து இருப்பது.

எள் நிறைய:

விதைகளில் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. அத்தகைய விதைகளில் ஒன்றான எள்ளிலும் அதிகமாக ஜிங்க் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன

கடல் சிப்பி:

ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகளில் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக கடல் சிப்பியில் ஜிங்க் என்னும் சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் பல சத்துக்களையும் உடலுக்கு தருகிறது.

வேர்க்கடலை:

வேர்க்கடலையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. மேலும் ஜிங்க் சத்தும் அதிகம் இருக்கிறது. எனவே வறுத்த மற்றும் உப்பு உள்ள வேர்க்கடலையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பூண்டு:

வாசனைப் பொருட்களில் ஒன்றான பூண்டில் அதிக சத்துக்கள் உள்ளன. அந்த சத்துக்களில் ஜிங்க் சத்தும் ஒன்று.

இறைச்சி:

இறைச்சியில் செம்மறி ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிகமான அளவில் ஜிங்க் சத்தானது உள்ளது. இந்த உணவை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், ஜிங்க் சத்தோடு, புரோட்டீனும் கிடைக்கும்.

காளான்:

சூப்பர் உணவுகளில் ஒன்றான காளானிலும் ஜிங்க் சத்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆளி விதை:
விதைகளில் ஒன்றான ஆளி விதையிலும் ஜிங்க் உள்ளது. இந்த விதைகளில் ஜிங்க் மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

காராமணி:

பருப்பு வகைகளில் ஒன்றான காராமணியில் நிறைய புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து உள்ளது. ஆனால் அதே சமயம், அதிக் கொழுப்புக்களும் அதிகமாக உள்ளன. எனவே இந்த உணவை எப்போதாவது சாப்பிடுவது நல்லது.

நண்டு கடல் உணவுகள்:

அனைத்திலுமே ஜிங்க் சத்துக்களை பார்க்கலாம். ஆனால் அதில் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கலாம்.

ப்ரௌன் அரிசி:

பொதுவாக முழு தானியங்களில் ஜிங்க் சத்துக்கள் இருக்கும். அதிலும் சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் ப்ரௌன் அரிசியில் ஜிங்க் சத்து உள்ளது.

பசலைக் கீரை:

பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இதில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பதோடு, ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.

டார்க் சாக்லெட்:

சாக்லெட்களில், ஜிங்க் சத்து அதிகம் உள்ள இனிப்பு இல்லாத கொக்கோ உள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டால், மனம் அமைதியடைவதோடு, உணர்ச்சியும் பெருக்கெடுக்கும்.

பூசணிக்காய் விதைகள்:

பூசணிக்காய் விதைகளை வைத்து நிறைய ஸ்நாக்ஸ்கள் உள்ளன. எனவே இந்த வகையான ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட்டால், உடலுக்கு ஜிங்க் சத்துக்கள் கிடைப்பதோடு, குறைவான கலோரியும், 0% கொழுப்பும் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்

How to shell