சனி, 26 ஜூலை, 2014

எண்ணும்மை, உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
எண்ணும்மை, உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
*********************************************

உம்மைத்தொகை, எண்ணும்மை, உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது?

எண்ணும்மை
*************
கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா)

அல்லும் பகலும்
காதலும் கற்பும்
அவனும் இவனும்

சிறப்பு எண்ணும்மை

சொற்கள் “உடனும்” என முடியும்.

(எ.கா) வானுடனும், கடவுளுடனும்

உயர்வு சிறப்பும்மை

சொற்கள் “னினும்” என்று முடியும்.

(எ.கா) வானினும், ஊனினும், தேனினும

உம்மைத்தொகை
***************

கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(எ.கா)

அவன் இவன்
இரவு பகல்
இராப் பகல்

எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும். அதுவே மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்
****************
ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

(எ.கா)

மாநகரம்

அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம். இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்.
1.சால
2.உறு
3.தவ
4.நனி
5.கூர்
6.கழி
7.கடி
8.மா
9.தட

மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக் கூடிய சொற்கள். எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் தான் ஆரம்பிக்கும்..

(எ.கா)

தடக்கை
தவப்பயன்
உறுபடை

அன்மொழித் தொகை
*******************
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை ஆகிய ஐந்து தொகைகளும் தொடருக்கு புறத்தே அமையாமல் மறைந்திருந்து பொருள் தருமாயின் அது அன்மொழித்தொகை யாகும்.

(எ.கா) பொற்றொடி வந்தாள். பூங்குழலி வந்தாள், சேயிழைக் கணவன் தேன்மொழி நகைத்தாள், இன்மொழி சொன்னான் சுடுகதிர் எழுந்தான்.

வேற்றுமைத் தொகை - இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வேற்றுமைத்தொகை
*******************
இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வர சொற்கள் நிற்பது வேற்றுமைத்தொகை ஆகும். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

வேற்றுமை உருபுகள் 8 வகைப்படும்

1 -உருபுஇல்லை
2 -ஐ
3 -ஆல்
4 -கு
5 -இன்
6 -அது
7 -கண்
8 -உருபுஇல்லை

மேற்கண்ட உருபுகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

1.முதலாம் வேற்றுமைத்தொகை
*****************************
பொருளின் இயல்பான பெயரே முதல்வேற்றுமைதொகை. இதற்கு உருபு இல்லை.

இதன் வேறு பெயர்கள்

அ. எழுவாய் வேற்றுமை
ஆ. பெயர் வேற்றுமை

(எ.கா) கந்தன் வந்தான்
ராமன் வந்தான்

2.இரண்டாம் வேற்றுமைத்தொகை (ஐ)
**********************************
பால் குடித்தான் - பாலைக் குடித்தான்

( மறைந்த உருபு “ஐ” )

மொழி கற்றான் - மொழி + ஐ + கற்றான்
சிலை செய்தான் - சிலை + ஐ + செய்தான்.
காளை போன்றவன் - காளை + ஐ + போன்றவன்
இல்லறம் துறந்தான் - இல்லறம் + ஐ + துறந்தான்
கோயில்கட்டினான் - கோயில் + ஐ + கட்டினான்.

இவ்வாறாக “ஐ” என்ற உருபு மறைந்து காணப்படும்.

3.மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்) - (ஓடு)
*****************************************

(எ.கா)

பேனா எழுதினான்
(ஆல்) - பேனாவால் எழுதினான்

தலையால் வணங்கினான்
மரம்வாளால் அறுபட்டது
புலவரால் பாடப்பட்டபாட்டு

(ஓடு) கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது
தாய் தந்தை வந்தார் - தாயோடு தந்தை வந்தார்

4.நான்காம் வேற்றுமைத்தொகை (கு)
********************************
(எ.கா)

நோய் மருந்து - நோய்க்கு மருந்து
மயில் போர்வை கொடுத்தான் - மயிலுக்கு போர்வை கொடுத்தான்
மான் பகை புலி - மானுக்கு பகை புலி

5.ஐந்தாம் வேற்றுமைத்தொகை (இன்) - (இல்)
***************************************
(எ.கா)

பழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை
தமிழ்நாடு வடவெல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வட வெல்லை திருவேங்கடம்
கொடை சிறந்தவன் குமரன் - கொடையில் சிறந்தவன் குமரன்

6.ஆறாம் வேற்றுமைதொகை (அது)
*******************************
(எ.கா)

கபிலர் பாட்டு - கபிலரது பாட்டு
கண் பார்வை - கண்ணினது பார்வை
வினைப் பயன் - வினையினது பயன்
மலையுச்சி - மலையினது உச்சி
என் கை - எனது கை
கந்தன் வீடு - கந்தனது வீடு
மலர் நீட்டம் - மலரினது நீட்டம்
மலை உச்சி - மலையினது உச்சி

7.ஏழாம் வேற்றுமைத்தொகை (கண்)
*******************************
(எ.கா)

பால் சுவை - பாலின்கண் சுவை
மலை மூலிகை - மலையின்கண் மூலிகை
கிளை பறவை - கிளையின்கண் பறவை

8.எட்டாம் வேற்றுமைத்தொகை
***************************
இதன் வேறு பெயர் விளிவேற்றுமை. இதற்கு உருபு இல்லை. பெயர்ச்சொல்லின் ஈடுகெடுதல், மிகுதல், திரிதல் போன்றவை எட்டாம் வேற்றுமைத்தொகை ஆகும்.

(எ.கா) ராமன் - ராமனே
கந்தன் - கந்தனே

வேர்ச் சொல் - தமிழ் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று, வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல் எப்படி ?

வேர்ச் சொல்லைக் காண் என வினாக்களைக் கேட்பது போல வேர்ச் சொல்லைக் கொடுத்து இதன் வினைமுற்றை கண்டுபிடி அல்லது வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி என்பதைப் போல வினாக்கள் அமையும்.

(எ.கா)

'படி' என்ற சொல்லின் தொழிற் பெயரைக் கண்டுபிடி

அ) படித்த ஆ) படித்து இ) படித்தவன் ஈ) படித்தல்

விடை: ஈ. படித்தல்

'தல்' எனும் விகுதி வந்தால் தொழிற்பெயர்.

படித்த என்ற சொல்லின் விகுதி 'அ' என்பதால் அதுபெயரெச்சம்.

படித்து என்ற சொல்லின் விகுதி 'உ' என்பதால் அது வினையெச்சம்.

படித்தவன் என்றசொல் வினையாலணையும் பெயர்.

கீழே அட்டவணை பாருங்கள். அதைப்போல நீங்களும் அட்டவணை தயாரித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்ச்சொல் - பெயரெச்சம் - வினையெச்சம் - வினையாலணையும் பெயர் - வினைமுற்று - தொழிற்பெயர்

தா - தந்த - தந்து - தந்தவன் - தந்தான் - தருதல்

செல் - சென்ற - சென்று - சென்றவன் - சென்றான் - செல்தல்

உண் - உண்ட - உண்டு - உண்டவன் - உண்டான் - உண்ணல்

காண் - கண்ட - கண்டு - கண்டவன் - கண்டான் - காணுதல்

கூறு- கூறிய - கூறி - கூறியவன் - கூறினான் - கூறுதல்

அளபெடை -இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

  அளபெடை

ஓர் செய்யுளில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை

1.உயிரளபெடை
**************
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது உயிரளபெடை யாகும்.

செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)

என இது 3 வகைப்படும்.

செய்யுளிசையளபெடை (அ)
------------------------------------------
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறுபெயர் இசை நிறையளபெடை.

(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்லபடாஅ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்

சொல்லிசையளபெடை (இ)
-------------------------------------
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச் சொல்லை வினையெச்சசொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை என்பதாகும்.

(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ

இன்னிசையளபெடை (உ)
-----------------------------------
செய்யுளில் ஓசை குறையாத போதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்

(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்

2.ஒற்றளபெடை
**************
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும். இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.

(எ.கா) கண்ண்கருவினை
கலங்ங்குநெஞ்சமில்லை
இலஃஃகுமுத்தின்
மடங்ங்கலந்த.

தமிழ் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் அறிவு - அறிந்து வைத்துக் கொள்வோம்...
--------------------------------------------------------------------------------------------------------------
மூவண்ணம்- காவி, வெண்மை, பச்சை
--------------------------------------------------------------------------------------------------------------
மூவேந்தர்கள்- சேரன், சோழன், பாண்டியன்
-------------------------------------------------------------------------------------------------------------
முக்கனி- மா, பலா, வாழை
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தமிழ்- இயல், இசை, நாடகம்
-------------------------------------------------------------------------------------------------------------
முப்பால்- அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலம்- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
------------------------------------------------------------------------------------------------------------
முந்நீர்- ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
-------------------------------------------------------------------------------------------------------------
மூன்றுமுரசு - கொடைமுரசு, படைமுரசு, மங்களமுரசு
------------------------------------------------------------------------------------------------------------
முச்சங்கம்- முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
------------------------------------------------------------------------------------------------------------
மூவிடம்- தன்மை, முன்னிலை, படர்க்கை
-------------------------------------------------------------------------------------------------------------
நாற்திசை- கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
--------------------------------------------------------------------------------------------------------------
நாற்பால்- அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
------------------------------------------------------------------------------------------------------------
நால்வகைஉணவு - உண்ணல், தின்னல், பருகல், நக்கல்
-------------------------------------------------------------------------------------------------------------
நால்வகைசொல்- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
----------------------------------------------------------------------------------------------------------------
நான்மறை- ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
--------------------------------------------------------------------------------------------------------------
நான்குகுணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------
நாற்படை- தேர், யானை, குதிரை, காலாட்படை.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவகை- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
---------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.
---------------------------------------------------------------------------------------------------------------
ஐஞ்சிறுங்காப்பியங்கள்- சூளாமணி, நீலகேசி, யசோதரகாவியம்,
நாககுமாரகாவியம், உதயணகுமாரகாவியம்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திலக்கணம்- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தொகை- முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
-----------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பால்- ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெரும்பொருள்- நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பொறி- மெய், வாய், கண், மூக்கு, செவி
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்புலன்- ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
---------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திணை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
--------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்குழு- சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
----------------------------------------------------------------------------------------------------------------
அறுசுவை- இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
பெரும்பொழுது- கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பணி,
இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
---------------------------------------------------------------------------------------------------------------
சிறுபொழுது- காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
---------------------------------------------------------------------------------------------------------------
ஏழிசை- குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
பெண்களின்ஏழுபருவங்கள்- பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண்
---------------------------------------------------------------------------------------------------------------
எட்டுத்தொகை- நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
--------------------------------------------------------------------------------------------------------------
நவரத்தினங்கள்- மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்,
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்
---------------------------------------------------------------------------------------------------------------
நவதானியங்கள்- நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை,
கடலை, கொள்ளு, கோதுமை
-------------------------------------------------------------------------------------------------------------
ஆண்பால்பிள்ளைத்தமிழ்பருவங்கள் 10
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண்பால்பிள்ளைத்தமிழ்பருவங்கள் 10
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
--------------------------------------------------------------------------------------------------------------
பத்துப்பாட்டு- திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
கூத்தராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை.
--------------------------------------------------------------------------------------------------------------
பதிணென்கீழ்க்கணக்குநூல்கள்-
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது,
இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை,
பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள்,
முதுமொழிக்காஞ்சி, ஐந்தினைஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலை
நூற்றைம்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, கைந்நிலை.
--------------------------------------------------------------------------------------------------------------
புறத்திணை- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை

மரபுப்பிழைச்சொற்கள், வழூஉச்சொற்களும்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
மரபுப்பிழைச்சொற்கள், வழூஉச்சொற்களும் மற்றும் வேற்றுமொழிச்சொல்

1. மரபுப்பிழைச்சொற்கள்
**********************

பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்

பறவைகள் ------ விலங்குகள்

ஆந்தை - அலறும் ------ நாய் - குரைக்கும்
கோழி - கொக்கரிக்கும் ------ நரி - ஊளையிடும்
குயில் - கூவும் ------ குதிரைகனைக்கும்
காகம் - கரையும் ------ கழுதை - கத்தும்
கிளி - கொஞ்சும் ------ பன்றி - உறுமும்
மயில் - அகவும் ------ சிங்கம் - முழங்கும்
கோட்டான் - குழலும் ------ பசு - கதறும்
வாத்து - கத்தும் ------ எருது - எக்காளமிடும்
வானம்பாடி - பாடும் ------ எலி - கீச்சிடும்
குருவி - கீச்சிடும் ------ தவளை - கத்தும்
வண்டு - முரலும் ------ குரங்கு - அலம்பும்
சேவல் - கூவும் ------ பாம்பு - சீறிடும்
கூகை - குழலும் ------ யானை - பிளிரும்
புறா - குனுகும் ------ பல்லி - சொல்லும்
------------------------------------------------------------------------------------------------------------
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்

புலிப்பரள் ------ சிங்கக்குருளை
பூனைக்குட்டி ------ எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி ------ கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி ------ கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி ------ மான்கன்று
ஆட்டுக்குட்டி ------ யானைக்கன்று
பன்றிக்குட்டி
----------------------------------------------------------------------------------------------------------
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

சோளத்தட்டு ------ முருங்கைக்கீரை
தாழைமடல் ------ தென்னங்கீற்று
வாழையிலை ------ பனையோலை
வேப்பந்தழை ------ மாவிலை
மூங்கில்இலை ------ நெல்தாள்
-------------------------------------------------------------------------------------------------------------
செடி, கொடி மரங்களின் தொகுப்பு

பூந்தோட்டம் ------ மாந்தோப்பு ------ வாழைத்தோட்டம் ------ தேயிலைத்தோட்டம் சோளக்கொல்லை ------ சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு ------ பனங்காடு வேலங்காடு
---------------------------------------------------------------------------------------------------------------
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்

ஆடு - மந்தை ------ மாடு - மந்தை
எறும்பு - சாரை ------ கல் - குவியல்
சாவி - கொத்து ------ திராட்சை - குலை
பசு - நிரை ------ யானை - கூட்டம்
வீரர் - படை ------ வைக்கோல்- போர்
விறகு - கட்டு ------ மக்கள் - தொகுப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
2. வழுஉச்சொற்கள்
*******************
வழுஉச்சொல் ------ தமிழ்சொல்
உசிர் ------- உயிர் ஊரளி ------- ஊருளி
ஒருத்தன் ------- ஒருவன் கடகால் ------- கடைக்கால்
குடக்கூலி ------- குடிக்கூலி முயற்சித்தார் ------- முயன்றார்
வண்ணத்திப்பூச்சி ------- வண்ணத்துப்பூச்சி வென்னீர் ------- வெந்நீர்
எண்ணை ------- எணணெய் சிகப்பு ------- சிவப்பு
தாவாரம் ------- தாழ்வாரம் புண்ணாக்கு ------- பிண்ணாக்கு
கோர்வை ------- கோவை வலதுபக்கம் ------- வலப்பக்கம்
பேரன் ------- பெயரன் பேத்தி ------- பெயர்த்தி
தலகாணி ------- தலையணை வேர்வை ------- வியர்வை
சீயக்காய் ------- சிகைக்காய்
சுவற்றில் ------- சுவரில்
இருபல் ------- இருமல் அருவாமனை ------- அரிவாள்மனை
அண்ணாக்கவுரு ------- அரைநாண்கயிறு புஞ்சை ------- புன்செய்
புண்ணாக்கு ------- பிண்ணாக்கு
நாத்தம் ------- நாற்றம்
பதனி ------- பதிநீர் அருகாமை ------- அருகில்
வெங்கலம் ------- வெண்கலம் பேட்டி ------- நேர்காணல்
வெண்ணை ------- வெண்ணெய் ஒத்தடம் ------- ஒற்றடம்
தேனீர் ------- தேநீர்
கவுறு ------- கயிறு
பயிறு ------- பயறு பாவக்காய் ------- பாகற்காய்
ரொம்ப ------- நிரம்ப கோடாலி ------- கோடாரி
கடப்பாறை ------- கடப்பாரை ஆம்பளை ------- ஆண்பிள்ளை
ஈர்கோலி ------- ஈர்கொல்லி அவரக்கா ------- அவரைக்காய்
---------------------------------------------------------------------------------------------------------------
3. வேற்றுமொழிச்சொற்கள்
************************

வேற்றுமொழிச்சொல் -------- தமிழ்ச்சொல்
பஜனை -------- கூட்டுவழிபாடு
வைத்தியர் -------- மருத்துவர்
ஜனம் -------- மக்கள்
கர்வம் -------- செருக்கு
வாபாஸ் -------- திரும்பபெறுதல்
தபால் -------- அஞ்சல்
கிஸ்தி -------- வரி
அலமாரி -------- நெடும்பேழை
முண்டாசு -------- தலைப்பாகை
சிம்மாசனம் -------- அரியணை
அகங்காரம் -------- ஆணவம்
பஜார் -------- கடைத்தெரு
சாதம் -------- சோறு
சபை -------- அவை
நாஷ்டா -------- சிற்றுண்டி
ஆசீர்வாதம் -------- வாழ்த்து
நமஸ்காரம் -------- வணக்கம்
லாபம் -------- ஈவு
இஷ்டம் -------- விருப்பம்
வக்கீல் -------- வழக்குரைஞர்
தராசு -------- துலாக்கோல்
ஹாஸ்டல் -------- விடுதி
சர்க்கார் -------- அரசு
கேப்பை -------- கேழ்வரகு
ஐதீகம் -------- சடங்கு
வேதம் -------- மறை
ஜானவாசம் -------- மாப்பிளைஅழைப்பு
அபிஷேகம் -------- திருமுழுக்கு
யாத்திரை -------- புனிதப்பயணம்
ஆயுள் -------- வாழ்நாள்
தீர்த்தம் -------- புனிதநீர்
ஜனநாயகம் -------- குடியாட்சி
நதி -------- ஆறு
சந்தா -------- கட்டணம்
பிரதிநிதி -------- சார்பாளர்
பத்திரம் -------- ஆவணம்
மத்தியாணம் -------- நண்பகல்
சிபாரிசு -------- பரிந்துரை
பரீட்சை -------- தேர்வு
பிரார்த்தனை -------- தொழுகை
சென்ட்ரல்கவர்ன்மெண்ட் -------- நடுவண்அரசு
தாலுகாஆபிஸ் -------- வட்டாட்சியர்அலுவலகம்

வாக்கிய வகைகள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீராமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வாக்கிய வகை அறிதல்
********************

சில வாக்கிய வகைகளும் அவற்றின் விளக்கமும்.

1. தனி வாக்கியம்

ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால்அது தனி வாக்கியம்.

(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்
சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்

2. தொடர் வாக்கியம்

தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும். தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால், அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும். பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான்.
நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.

3. கலவை வாக்கியம் :

ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்

‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.

(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.
யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.
நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

4.கட்டளை வாக்கியம்

பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருமாயின் அது கட்டளை வாக்கியம். இதில் இறுதிச் சொல் வேர்ச் சொல்லாக
வரும்.

(எ.கா) அறம் செய்.
தண்ணீர் கொண்டு வா.
இளமையில் கல்.

5. வினா வாக்கியம்

வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.

வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யாஆகும்.

(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?
நீ மனிதனா? - ஆ
நீதானே? - ஏ
உளரோ? - ஓ

6.உணர்ச்சி வாக்கியம்

மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்

(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!
ஐயகோ! நேருஜி மறைந்தாரே!

7. செய்தி வாக்கியம்

ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி வாக்கியம்

(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது
மாணவர்கள் சீருடையில் வரவேண்டும்

8. வியங்கோள் வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள்வாக்கியம்

(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை
நீடுழிவாழ் - வாழ்த்துதல்
தீயெனஒழி - வைதல்
நல்ல கருத்தினை நாளும்கேள் - வேண்டுகோள்

9.எதிர்மறை வாக்கியம்

ஒருசெயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை வாக்கியம் ஆகும்.

(எ.கா) அவன் கல்வி கற்றிலன் உடன்பாடு ----- எதிர்மறை அவன் சென்றான் ----- அவன் சென்றிலன்
ஆமைகள் வேகமாக ஓடும் ----- ஆமைகள் வேகமாக ஓடா
புலி புல்லைத் தின்னும் ----- புலி புல்லைத் தின்னா
மொழி இலக்கிய வளம் உடையது ----- மொழி இலக்கிய வளம் அற்றது

10. உடன்பாட்டு வாக்கியம்

ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.

(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன
வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

11.நேர்க்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.

(எ.கா) வளவன், "நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.

12.அயற்கூற்று வாக்கியம்

ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற் கூற்று வாக்கியம் ஆகும்.

(எ.கா) வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.