வியாழன், 28 ஆகஸ்ட், 2014

காவல்துறை குறியீடுகள்

                        தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
 
இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  
 
Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]
 
Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia

தகவல் உரிமைசட்டம்.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எப்படி பயன்பெற்றது? இதனை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மக்கள் படும் இன்னல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.
மேலும் எந்த பிரச்சனைகளுக்கு எந்த அரசு அதிகாரிகளை அணுகுவது, எப்படி தகல்வல்கள் பெறுவது என்பது பற்றி இங்கு விவரிக்கபடும்.
இங்கு கிராம சம்பந்தமாக சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அவற்றின் முடிவுகள் என்ன என்பது பற்றியும் அறியலாம்.
தகவல் பெறும் உரிமை - இந்தியா முன்னற்ற நுழைவாயிலில்

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.
அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.
யார் இந்த தகவல்களைத் தருவது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.
ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்:
http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.
தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய தளம் http://www.tn.gov.in/rti/
தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின் இணையத்தளம்
http://rti.gov.in/
தகவல் அறியும் உரிமை
http://www.keetru.com/puthiyathendral/jul07/jayakumar.php
ஐந்தாம் தூண்
http://india.5thpillar.org/
மேலும் தகவல் உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
http://persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
முறையாக தகவல் கேட்பது எப்படி?
http://www.rtiindia.org/
நடைமுறை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள
http://www.makkal-sattam.org/
கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம் பற்றி அரசாங்கத்தின் கோப்பு
http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf நன்றி : ஆசிரியர் குரல்

புற்று நோயை முற்றிலும் அழிக்க

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
வெறும் நூறு ரூபாயில் (Rs.100)
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,
சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த
புற்று நோய்க்கு உண்டு.

இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில
மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த
நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள்
மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம்
உயிரை விட்டு விடுவதே மேல்
என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில்
மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும்,
உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின்
வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக
முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்
பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய
Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக
கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட
உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில்
பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக
கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும்
பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள
முட்களை நீக்கி கொள்ள
வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்
கொள்ளவேண்டும் அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன்
சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.

இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும்
மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்
போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .

சிலருக்கு மிக
குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.

யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக
இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..

கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான
அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப்
போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை ,
இதுக்கு மேலே தொடுவீங்க !?

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வரலாற்று சிறப்புமிக்க சத்தியமங்கலம் காவல் நிலையம் .
இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ,மொத்த பரப்பளவு 87 சென்ட், கட்டப்பட்ட ஆண்டு 1905, காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1907, தற்பொழுது காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் 56 பேர் , ஆய்வாளர் முத்துசாமி மற்றும் உதவி ஆய்வாளர்கள் 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உதவி ஆய்வாளர்கள் உள்ளனர் , தலைமை காவலாளர்கள் 22 பேர், காவலாளர்கள் 20 பேர் ,
தொலைபேசி எண் : 04295 - 220228

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றுதான் இன்றும் பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இன்றும் நிறைந்திருக்கும். பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால் களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசி முறையும், உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக் கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.
பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.
பொதுவாகவே இந்த சமூகம் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும் பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது, வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப் பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும் சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.
இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும்.
ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான் இல்லையென்றும் சொல்லவில்லை.
ஆனால் நாடே இமாலய உயரம் ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.
இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது.
அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?
இன்றைய சமுதாயத்தின் பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் மற்றவர்களைத் தேடுகிறீர்கள். ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம் அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக கழித்துப்போட்டுவிடுகிறது.
உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள் எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் ''மாலை''களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.
உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில் இருக்கும் அனைத்தையும் எப்பொழுது
கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
பதிவு
- நவீன் கிருஷ்ணன்
( மனிதன் )
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”

எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும் குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :
7. ஓம் நவநிதி பதயே நமோ நம :
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :
9. ஓம் நரபதி பதயே நமோ நம :
10. ஓம் சுரபதி பதயே நமோ நம :
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :
12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :
14. ஓம் தபராஜ பதயே நமோ நம :
15. ஓம் இகபர பதயே நமோ நம :
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :
18. ஓம் நயநய பதயே நமோ நம :
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :
20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :
21. ஓம் வல்லீ பதயே நமோ நம :
22. ஓம் மல்ல பதயே நமோ நம :
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :
27. ஓம் அபேத பதயே நமோ நம :
28. ஓம் சுபோத பதயே நமோ நம :
29. ஓம் வியூஹ பதயே நமோ நம :
30. ஓம் மயூர பதயே நமோ நம :
31. ஓம் பூத பதயே நமோ நம :
32. ஓம் வேத பதயே நமோ நம :
33. ஓம் புராண பதயே நமோ நம :
34. ஓம் ப்ராண பதயே நமோ நம :
35. ஓம் பக்த பதயே நமோ நம :
36. ஓம் முக்த பதயே நமோ நம :
37. ஓம் அகார பதயே நமோ நம :
38. ஓம் உகார பதயே நமோ நம :
39. ஓம் மகார பதயே நமோ நம :
40. ஓம் விகாச பதயே நமோ நம :
41. ஓம் ஆதி பதயே நமோ நம :
42. ஓம் பூதி பதயே நமோ நம :
43. ஓம் அமார பதயே நமோ நம :
44. ஓம் குமார பதயே நமோ நம :
நீங்கள் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதாகும். இது கந்தபுராணத்தின் சுருக்கம் ஆகும். மொத்தம் 44 வரிகளை உடையது. இதனை படிக்கும் போது “நம :” என்ற சொல்லை ”நமஹ்” என்று உச்சரிக்கவும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும். இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வேன்றோது வார்முன்.

சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும். மனதில் “முருகா” என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்

#‎சிதம்பர‬ ‪#‎ரகசியம்‬ - நம் முன்னோர்களின் அதிசயம்#
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....
இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..
பல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.