ஞாயிறு, 4 மே, 2014

கனக சுப்ரமணி

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

...எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும். அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. 

அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார். இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துவோம் அவரை.. 
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை.. 

[நன்றி : The Hindu]

தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 திரு குணசீலன் அவர்களுக்கு நன்றி.

          தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர்.
பலரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்து
********************
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!

சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வாங்க..பேசலாம்..! ரவி தங்கதுரை

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.நம்ம மரியாதைக்குரிய  ரவி தங்கதுரை ஐயா  அவர்கள் முகநூலில் ''வாங்க. பேசலாம் ....'' என்னும் தலைப்பில் விவாதமேடை அமைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.நீங்களும் ஒருமுறை விவாதத்தில் கலந்துகொள்ளலாமே!
பேசலாம்..  வாங்க..!

கடந்த இரு வாரங்களின்  விவாத மேடையைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக  நாளையும் நாம் மற்றொரு தலைப்பின் கீழ் விவாதிக்க இருக்கிறோம்.

விவாதங்கள் தொடங்குவதற்கு முன் நமது விவாத மேடைப் பற்றி, ஏற்கனவே நெறிமுறைப் படுத்தப்பட்ட  சில விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

1. தங்கள் கருத்துக்கள் தமிழில் அல்லது தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
2. விவாதங்கள் அனைத்தும்  பொதுவில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு நமது எழுத்துக்களில் நாகரீகம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்..
3. பதிவின் நோக்கம் திசை மாறும் வகையில் மாற்றுக் கருத்துக்களை விவாதிப்பதும், தலைப்பைப் பற்றி ஆலோசிப்பதும் மறுக்கப் படுகிறது.
4. விவாதங்களின் நடுவே அரட்டை அடிப்பதையும், நலம் விசாரிப்பதையும், காலை, மதிய மற்றும் இரவு வணக்கங்கள் சொல்வதையும் கண்டிப்பாக தவிர்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
5. விவாதங்களில் கலந்துக் கொள்ளும் தோழர்கள் மற்றும் தோழிகளின் மனம் வருத்தப்படாதவாறு வார்த்தைகளையும், எழுத்துக்களையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
6. விவாதங்களில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் நண்பர்கள் விரும்பினால்,  Tag செய்யப்படும்.
7. நமது விவாதங்களில் மதம், சாதியைக் குறிப்பிட்டுவதை அறவேத் தவிர்த்து விடுங்கள்.
8. விவாதங்கள் நாளைக் காலைத் தொடங்கி, கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடிக்கும்.  
9. நண்பர்கள் அனைவரும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளலாம்.
10. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பைப் பற்றி கருத்துத் தெரிவிக்கலாமேத் தவிர, விவாதிப்பதைத் தவிர்த்து விடலாம்..  

- ரவிதங்கதுரை
  
வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தமிழெழுத்துக்கள்-247

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். தமிழெழுத்துக்களின் சிறப்பு காண்க.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
-Vinod Kamaraj / Chennai, Tamil Nadu
04.february.2012
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

திங்கள், 17 மார்ச், 2014

திருக்குறள்-கடவுள் வாழ்த்து- In Praise Of God.

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
                              டிரைவர் திருக்குறள் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
         திருக்குறளின் முதல் பாடல்.

          கடவுள் வாழ்த்து.  In Praise Of God.

 (1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
     பகவன் முதற்றே உலகு.
            A begins the alphabet
            And God,primordial,the world.

(2)கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
   நற்றாள் தொழாஅர் எனின்.
          What use is that learning which does not lead
             To the blessed feet of pure intelligence.

(3) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
           Long life on earth is theirs who clasp
         The glorious flower- embedded feet. 

(4)வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல.
               Never harmed are those who clasp the feet
                 Of the one beyond  likes and hates.

(5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
                   The delusions  caused by good deeds and bad
                 Shall never be theirs who seek God's praises.
தொடரும்..........
   
திருக்குறள்-முப்பால் நூல்.

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம். டிரைவர் திருக்குறள் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.திருக்குறளானது அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என முப்பால் கொண்ட நூலாகும்.அறத்துப்பால் 1முதல் 38 வரையும்,பொருட்பால் 39 முதல் 108வரயும்,இன்பத்துப்பால் 109 முதல் 133 வரையும் அதிகாரங்களைக்கொண்ட நூலாகும். ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைக் கொண்டது ஆகும்.அதன் விவரங்களை இனி காண்போம்.
           
        அறத்துப்பால் (1-38)
  • பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
  •  இல்லறவியல் 
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
  • துறவறவியல்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
  • ஊழியல்
38. ஊழ்
 
 பொருட்பால் (39-108)
  • அரசியல்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
  • அமைச்சியல்
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
  • அரணியல்
74. நாடு
75. அரண்
  • கூழியல்
76. பொருள் செயல்வகை
  • படையியல்
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
  • நட்பியல்
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
  • குடியியல்
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை
 
 இன்பத்துப்பால் (109-133)
  • களவியல்
109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
  • கற்பியல்
116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை