தேனொக்கும் செந்தமிழே!!!... நீ கனி! நான் கிளி!! வேறென்ன வேண்டும் இனி? என அன்னைத் தமிழாம் கொங்குத் தமிழில் அகிலமும் கற்போம்,,,,,,,
வியாழன், 18 டிசம்பர், 2014
சனி, 13 டிசம்பர், 2014
(1) தமிழில் தட்டச்சலாம் வாங்க - 2014
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கொங்குத் தமிழ் மன்றம் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப்பதிவில் தமிழில் தட்டச்சு முறைகளும்,பலவிசைகளின் ஒப்பீடும் அவற்றில் சிறந்த முறையான தமிழ்நெட்99 முறையின் சிறப்புகளும் பற்றிக் காண்போம்.இதற்காக இணையத்திலுள்ள அனைத்து வலைத்தளங்களையும் ஆராய்ந்து அதன்பின்னர் நமது அனுபவங்களையும் பதிவிட்டு வருங்கால இளையதலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதோடு நம்ம தாய்மொழியாம் செம்மொழித் தமிழை வளர்ப்போம்.
தமிழ் விசைப் பலகைகளின் பலவகைகளும் அதன் வடிவமைப்புகளும்;-
(1)பாமினி முறை விசைப்பலகை.
(2)மயிலை விசைப்பலகை வடிவமைப்பு
(3)தமிழ்நெட்'99 முறை விசைப்பலகை வடிவமைப்பு
(4)தமிழ்நெட்'99முறை விசைப்பலகை வடிவமைப்பு மற்றும்
^ (கரட்) குறியீடு பயன்பாட்டுடன்
(5)தமிழ்நெட்'99முறை விசைப்பலகை வடிவமைப்பு மற்றும்
^ (கரட்) குறியீடு & # (ஆஏஷ்) குறியீடு பயன்பாட்டுடன்.
(6)தமிழ் தட்டச்சு இயந்திர முறை வடிவமைப்பு
(7)தமிழ் தட்டச்சு இயந்திரமுறை வடிவமைப்பு
CAPITAL பெரிய எழுத்து பயன்படுத்தியபோது
(8)தமிழ் தட்டச்சு இயந்திரமுறை வடிவமைப்பு
# குறியீடு பயன்படுத்தியபோது
(9) தமிழ் ஒலிப்புமுறை
(10) தமிழ் அச்சுப்பதிவு முறை (INSCRIPT)
தமிழில் தட்டச்ச இன்னும் பல வகைகள் உள்ளன.அவைகளனைத்தும் அந்தந்த தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்பவும்,தம் விசைப்பலகையை பயன்படுத்துபவர்கள் மற்றவிசைப்பலகையினைப்பயன்படுத்தக்கூடாது என்ற வணிகநோக்குடனும் எழுத்துக்கள் அமைவிடங்களை சற்று மாற்றியும்,வேறு விசைக்குறியீடுகளைப்பயன்படுத்தியும் எழுத்துப் பதிவிடும் வகையில் விசைப்பலகைகளை வடிவமைத்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.வணிக நோக்கில் காரணம் அந்த முறையினை பழகியவர்கள் வேறு முறைகளுக்கு மாற சிரமப்படுவார்கள்.அப்போது பழகிய முறையையை பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் அதையே பழகுமாறு விளம்பரம் செய்வார்கள்...எளிதான மிதிவண்டியே இன்னொருவரின் பயன்பாட்டிலுள்ளதை ஒருநாள் பயனுக்கு எடுத்துப்பயணிக்கும்போது நமக்கு எத்தனை சிரமத்தைக்கொடுக்கிறது.அப்படியென்றால் கணினி சம்பந்தப்பட்ட விசைகளை பயன்படுத்த சிரமம் வரத்தானே செய்யும்....தற்போது தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்த பதிவில் ஆண்டிராய்டு போனில் தமிழ்த்தட்டச்சு முறை பற்றிக் காண்போம்.
உங்கள் அன்பன்
பரமேஸ்வரன்.C
சத்தியமங்கலம் - ஈரோடு மாவட்டம்.

கொங்குத் தமிழ் மன்றம்-2014
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.''கொங்குத் தமிழ் மன்றம்'' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.
இந்த வலைப்பூவில் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ்மொழியின் தலை சிறந்த இலக்கியங்களை தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கும்,தமிழார்வம் மிக்க மற்றவர்களுக்கும் இணையத்தின் மூலம் எளிதாகவும் இலவசமாகவும் கிடைக்க ஏற்பாடு செய்துவரும் மதுரைத்திட்டம் போன்ற தமிழ்த்தொண்டு புரியும் தமிழ்ச் சமூக ஆர்வலர்களை இங்கே பகிர்ந்து வாழ்த்துவோம்.
உலகளவிலுள்ள தமிழார்வலர்களோடு ஒன்றிணைவோம்.
தமிழ் வலைத்தளங்களையும்,வலைப்பூக்களையும் இங்கே பகிர்ந்து தமிழார்வலர்களின் தேடுதலுக்கான நேர விரயத்தை தவிர்த்து பயன்பெற உதவிடுவோம்.
இணையமும் தமிழும் & கணினியும் தமிழும் &நகர்பேசியும் தமிழும் - என பல்வேறு தளங்களில் -கருத்தரங்கம் நடத்துவது மற்றும் தமிழ் இணையம் தொழில் நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடத்தும் நிகழ்வில் தமிழ்நெட்99 முறையில் தமிழில் தட்டச்சு செய்வது,மின்னஞ்சல் உருவாக்குவது,ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தனித்தளம் துவக்குவது, பிளாக்கர் போன்று தமிழில் வலைப்பக்கம் உருவாக்குவது,நகர்பேசியில் தமிழைப்பயன்படுத்துவது,ஆண்டிராய்டு போன்ற ஸ்மார்ட்போன்களில் தமிழ் விசைப்பலகையை நிறுவல் செய்து தமிழ்த்தட்டச்சு செய்யும் பயிற்சி,கணினியிலும் நகர்பேசியிலும் தமிழில் இணையத்தில் தகவல்களைத்தேடுவது,காணொளிகளை உள்ளீடு செய்வது,என பல பயன்பாடுகளை அறிந்துகொள்ளச்செய்து தமிழால் இணையத்தை வெல்வோம் என உறுதி ஏற்போம். மேலும் திருக்குறள் போன்ற நூல்களின் சிறப்பினை பகிர்ந்திடுவோம்....
என அன்பன்
உங்கள் பரமேஸ் டிரைவர்-
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு paramesdriver@gmail.com
அழைக்க +91 9585600733

புதன், 3 செப்டம்பர், 2014
இயற்கை உணவுகள்-பழங்கள்
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இயற்கை உணவுகளின் பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க......
பழவகைகள்..
குறிப்பு:
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை . காரணம் உலகின் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

| இல | ஆங்கிலம் | தமிழ் | |
| 1 | Apple | குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் | |
| 2 | Ambarella | அம்பிரலங்காய் | |
| 3 | Annona | சீத்தாப்பழம் | |
| 4 | Annona muricata | முற்சீத்தாப்பழம் | |
| 5 | Apricot | சர்க்கரைப்பாதாமி | |
| 6 | Avocado | வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா | |
| 7 | Banana | வாழைப்பழம் | |
| 8 | Batoko Plum | லொவிப்பழம் | |
| 9 | Bell fruit | பஞ்சலிப்பழம், ஜம்பு | |
| 10 | Bilberry | அவுரிநெல்லி | |
| 11 | Blackberry | மேற்கத்திய நாவற்பழம் | |
| 12 | Black currant | கறுந்திராட்சை | |
| 13 | Blueberry | ஒரு வகை நெல்லி | |
| 14 | Bread fruit | கொட்டைப்பலா, சீமைப்பலா | |
| 15 | Butter fruit | ஆனைக்கொய்யா | |
| 16 | Cantaloupe | மஞ்சள் நிற முலாம்பழம் | |
| 17 | Cashew fruit | முந்திரிப்பழம், கஜு | |
| 18 | Cherimoya | சீத்தாப்பழம் | |
| 19 | Cherry | சேலாப்பழம் | |
| 20 | Chickoo | சீமையிலுப்பை | |
| 21 | Citron | கடார நாரந்தை | |
| 22 | Citrus aurantium | கிச்சலிப்பழம் | |
| 23 | Citrus reticulata | கமலாப்பழம் | |
| 24 | Citrus sinensis | சாத்துக்கொடி | |
| 25 | Clementine | நாரந்தை | |
| 26 | Cocoa fruit | கொகோப்பழம் | |
| 27 | Cranberry | குருதிநெல்லி | |
| 28 | Cucumber | வெள்ளரிப்பழம் | |
| 29 | Custard apple | சீத்தாப்பழம் | |
| 30 | Damson | ஒரு வித நாவல் நிறப்பழம் | |
| 31 | Date fruit | பேரீச்சம் பழம் | |
| 32 | Devilfig | பேயத்தி | |
| 33 | Dragon fruit | ட்றொகன் பழம் | |
| 34 | Duku | டுக்கு | |
| 35 | Durian | முள்நாரிப்பழம், தூரியன் | |
| 36 | Emblica | நெல்லி | |
| 37 | Eugenia rubicunda | சிறு நாவற்பழம் | |
| 38 | Feijoi/Pinealle guava | புளிக்கொய்யா | |
| 39 | Fig | அத்திப்பழம் | |
| 40 | Persimmon fruit | சீமை பனிச்சம்பழம் | |
| 41 | Gooseberry | கூஸ்பெறி | |
| 42 | Grapefruit | பம்பரமாசு | |
| 43 | Grapes | கொடி முந்திரி, திராட்சை | |
| 44 | Guava | கொய்யாப்பழம் | |
| 45 | Honeydew melon | தேன் முழாம்பழம் | |
| 46 | Huckle berry | (ஒரு வித) நெல்லி | |
| 47 | Jack fruit | பலாப்பழம் | |
| 48 | Jumbu fruit | ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம் | |
| 49 | Jamun fruit | நாகப்பழம் | |
| 50 | Kiwi fruit | பசலிப்பழம் | |
| 51 | Kumquat | (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) | |
| 52 | Kundang | மஞ்சள் நிற சிறிய பழம் | |
| 53 | Lansium | லன்சியம் | |
| 54 | Lemon | வர்க்கப்பழம் | |
| 55 | Lime | எழுமிச்சை | |
| 56 | Loganberry | லோகன் பெறி | |
| 57 | Longan | கடுகுடாப் பழம் | |
| 58 | Louvi fruit | லொவிப்பழம் | |
| 59 | Lychee | லைச்சி | |
| 60 | Mandarin | மண்டரின் நாரந்தை | |
| 61 | Mango | மாம்பழம் | |
| 62 | Mangosteen | மெங்கூஸ் பழம் | |
| 63 | Melon | இன்னீர்ப் பழம், முழாம்பழம் | |
| 64 | Morus macroura | மசுக்குட்டிப்பழம் | |
| 65 | Mulberry | முசுக்கட்டைப் பழம் | |
| 66 | Muscat grape | திராட்சை | |
| 67 | Orange | தோடம்பழம் | |
| 68 | Palm fruit | பனம் பழம் | |
| 69 | Papaya | பப்பாளி பழம் | |
| 70 | Passion fruit | கொடித்தோடை | |
| 71 | Peach | குழிப்பேரி | |
| 72 | Pear | பேரி, பெயார்ஸ் | |
| 73 | Pine apple | அன்னாசிப் பழம் | |
| 74 | Plum | ஆல்பக்கோடா | |
| 75 | Pomegranate | மாதுளம் பழம், மாதுளை | |
| 76 | Pomelo | பம்பரமாசு | |
| 77 | Pulasan | (ஒரு வகை)றம்புட்டான் | |
| 78 | Quince | சீமை மாதுளம்பழம் | |
| 79 | Rambutan | றம்புட்டான் | |
| 80 | Rasberry | புற்றுப்பழம் | |
| 81 | Red banana | செவ்வாழைப் பழம் | |
| 82 | Red Currant | ஒரு வித லொவி | |
| 83 | Sapodilla | சீமையிலுப்பை | |
| 84 | Satsuma | நாரத்தை | |
| 85 | Sour sop/ Guanabana | அன்னமுன்னா பழம் | |
| 86 | Strawberry | செம்புற்றுப்பழம் | |
| 87 | Syzygium | ஜம்புப்பழம் | |
| 88 | Tamarillo | குறுந்தக்காளி | |
| 89 | Tamarind | புளியம்பழம் | |
| 90 | Tangerine | தேன் நாரந்தை | |
| 91 | Tomato | தக்காளிப்பழம் | |
| 92 | Ugli fruit | முரட்டுத் தோடை | |
| 93 | Water melon | வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி | |
| 94 | Wax jumbu | நீர்குமளிப்பழம் | |
| 95 | Resberry | இளஞ்செம்புற்றுப் பழம் | |
| 96 | Woodapple | விளாம்பழம் | |
குறிப்பு:
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை . காரணம் உலகின் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.
திங்கள், 1 செப்டம்பர், 2014
ஆண்டு விழாக்களின் பெயர்கள் விவரம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் நடத்தப்படும் ஆண்டுவிழாவின் பெயர்கள் பின்வருமாறு.
ஆண்டு விழா பெயர்கள்
வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா

Wednesday, 16 March 2011
ஆண்டு நிறைவு விழாக்களின் பெயர்கள்
ஆண்டு
|
தமிழில்
|
IN ENGLISH
|
1
|
காகித விழா ஆண்டு
|
PAPER JUBILEE
|
2
|
பருத்தி விழா ஆண்டு
|
COTTON JUBILEE
|
3
|
தோல் விழா ஆண்டு
|
LEATHER JUBILEE
|
4
|
புத்தகங்கள் விழா ஆண்டு
|
BOOKS JUBILEE
|
5
|
இரும்பு விழா ஆண்டு
|
IRON JUBILEE
|
6
|
மரம் விழா ஆண்டு
|
WOOD JUBILEE
|
7
|
வெண்கல விழா ஆண்டு
|
BRONZE JUBILEE
|
8
|
மின் உபரகரண விழா ஆண்டு
|
ELECTRICAL APPLIANCES JUBILEE
|
9
|
மின்கல விழா ஆண்டு
|
BATTERY JUBILEE
|
10
|
தகர விழா ஆண்டு
|
TIN JUBILEE
|
11
|
உருக்கு விழா ஆண்டு
|
STEEL JUBILEE
|
12
|
பட்டு விழா ஆண்டு
|
SILK JUBILEE
|
13
|
ஜரிகை விழா ஆண்டு
|
LACE JUBILEE
|
14
|
தந்தம் விழா ஆண்டு
|
IVORY JUBILEE
|
15
|
படிகம் விழா ஆண்டு
|
CRYSTAL JUBILEE
|
20
|
சீனக் களிமண் விழா ஆண்டு
|
PLASTER OF PARRIES JUBILEE
|
25
|
வெள்ளி விழா ஆண்டு
|
SILVER JUBILEE
|
30
|
முத்து விழா ஆண்டு
|
PEARLS JUBILEE
|
35
|
பவள விழா ஆண்டு
|
CORAL JUBILEE
|
40
|
மாணிக்க விழா ஆண்டு
|
RUBY JUBILEE
|
45
|
இந்திர நீல விழா ஆண்டு
|
SAPPHIRE JUBILEE
|
50
|
தங்க விழா ஆண்டு
|
GOLDEN JUBILEE
|
55
|
மரகத விழா ஆண்டு
|
EMERALD JUBILEE
|
60
|
வைர விழா ஆண்டு
|
DIAMOND JUBILEE
|
75
|
கருப்புத் தங்க விழா ஆண்டு
|
PLATINUM JUBILEE
|
COURTESY: JOURNAL OF P.T.A.
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
தமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் !
இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை, இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம். ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதின் காரணத்தினாலேயே இக்கட்டுரை எழுதுகிறேன்.
வீட்டு வாடகைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் :
• குடித்தனக்காரர்களின் உரிமைகள்
• வீட்டுக்காரர்களின் கடமைகள்
• குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்
• நியாய வாடகை
• வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்
• காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்
• வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.
மேற்குறிப்பிட்ட கூறுகளை விளக்கி இதன்மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரர்களின் உறவை மேம்படுத்துவோம். குறிப்பாக “வீட்டு உரிமையாளர்”, “குடித்தனக்காரர்”, ”குடியிருப்பு பகுதி”, ”கட்டிடப்பகுதி” இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரருக்கு இடையிலான வாடகை ஒப்பந்தம் :
வீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.
குடித்தனக்காரர்களின் உரிமைகள் :
குடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.
வீட்டுக்காரர்களின் கடமைகள் :
வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.
வாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
வாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.
குடித்தனக்காரர்களின் பொறுப்புகள் :
குடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ அந்தத்தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.
குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.
நியாய வாடகை :
1).இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.
2).குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.
3).குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.
குறிப்பு :
ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.
வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்:
குடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,
1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,
அ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். அல்லது,
ஆ).அவ்வீடு எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ, அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,
2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார். அல்லது
3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,
4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,
5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.
6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.
என்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளிவிடலாம்.
காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள் :
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை(SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.
வாடகையை கொடுக்கும் மற்றும் பெறும் முறை :
வீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும். வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014
பாவாடை தாவணி!
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். பாவாடை தாவணியில் பார்த்த உருவங்களை காணீர்............
எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்
கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட காணவில்லை உன் பெயரை.
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட தாவணியே...
கிராமபுறங்களில் விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும் தொலைந்து போய்விட்டாயே?
வயல்வெளிகளையும்,உன்னையும் இனிவரும்
தலைமுறை இன்டர்நெட்டில்தான் காணமுடியும்.
சுடிதார்,மிடி,ஜீன்ஸ் என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும் எடுத்துவிட்டது நைட்டி.
இன்று கொஞ்சமாவது
தன் படங்களில் உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)