திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றுதான் இன்றும் பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இன்றும் நிறைந்திருக்கும். பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால் களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசி முறையும், உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக் கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.
பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.
பொதுவாகவே இந்த சமூகம் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும் பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது, வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப் பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும் சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.
இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும்.
ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான் இல்லையென்றும் சொல்லவில்லை.
ஆனால் நாடே இமாலய உயரம் ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.
இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது.
அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?
இன்றைய சமுதாயத்தின் பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் மற்றவர்களைத் தேடுகிறீர்கள். ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம் அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக கழித்துப்போட்டுவிடுகிறது.
உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள் எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் ''மாலை''களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.
உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில் இருக்கும் அனைத்தையும் எப்பொழுது
கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
பதிவு
- நவீன் கிருஷ்ணன்
( மனிதன் )
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”

எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும் குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :
7. ஓம் நவநிதி பதயே நமோ நம :
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :
9. ஓம் நரபதி பதயே நமோ நம :
10. ஓம் சுரபதி பதயே நமோ நம :
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :
12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :
14. ஓம் தபராஜ பதயே நமோ நம :
15. ஓம் இகபர பதயே நமோ நம :
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :
18. ஓம் நயநய பதயே நமோ நம :
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :
20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :
21. ஓம் வல்லீ பதயே நமோ நம :
22. ஓம் மல்ல பதயே நமோ நம :
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :
27. ஓம் அபேத பதயே நமோ நம :
28. ஓம் சுபோத பதயே நமோ நம :
29. ஓம் வியூஹ பதயே நமோ நம :
30. ஓம் மயூர பதயே நமோ நம :
31. ஓம் பூத பதயே நமோ நம :
32. ஓம் வேத பதயே நமோ நம :
33. ஓம் புராண பதயே நமோ நம :
34. ஓம் ப்ராண பதயே நமோ நம :
35. ஓம் பக்த பதயே நமோ நம :
36. ஓம் முக்த பதயே நமோ நம :
37. ஓம் அகார பதயே நமோ நம :
38. ஓம் உகார பதயே நமோ நம :
39. ஓம் மகார பதயே நமோ நம :
40. ஓம் விகாச பதயே நமோ நம :
41. ஓம் ஆதி பதயே நமோ நம :
42. ஓம் பூதி பதயே நமோ நம :
43. ஓம் அமார பதயே நமோ நம :
44. ஓம் குமார பதயே நமோ நம :
நீங்கள் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதாகும். இது கந்தபுராணத்தின் சுருக்கம் ஆகும். மொத்தம் 44 வரிகளை உடையது. இதனை படிக்கும் போது “நம :” என்ற சொல்லை ”நமஹ்” என்று உச்சரிக்கவும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும். இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வேன்றோது வார்முன்.

சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும். மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும். மனதில் “முருகா” என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்

#‎சிதம்பர‬ ‪#‎ரகசியம்‬ - நம் முன்னோர்களின் அதிசயம்#
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....
இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..
பல வற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...
அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

தூங்கும்போது தலை வைத்து படுக்கும் திசை?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 
எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.
வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.
தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.
இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,
தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.
கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.
காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.
இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

பல்லவர்கள் ஈழத்தவர்களா ?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
       
Arun Kumar அவர்களுக்கு நன்றிங்க.

           பல்லவர்கள் ஈழத்தவர்களா ?திட்டம் இட்டு மறைக்கப்பட்ட பல்லவர்கள் வரலாற்றை வெளிக்கொண்டுவர ஒரு முயற்சி !
புத்தர் இலங்கைக்கு வந்த கி மு 6 ம் நூற்றாண்டு காலத்தில் ஈழத்தில் 3 கோடி நாகர்கள் இருந்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.அதன் பின்னர் கி மு 200/300 இல் ஈழத்தை தாக்கிய 4காவது மிக பெரிய கடல் அழிவு ஈழத்தின் வட பகுதியையும் வட மேற்கு பகுதியையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது என கருதப்படுகின்றது. இந்த காலத்தில் கடல் அழிவில் தப்பி பிழைத்த மக்கள் தொண்டை மண்டலத்தில் சென்று வாழ்ந்தார்கள்.
இவர்கள் தொண்டை மண்டலத்துக்கு சென்று வாழ்ந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது.அந்த காலத்தில் அந்த பகுதியை ஆண்ட சோழ அரசன் கிள்ளி வளவன் (சிலர் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் சிலர் இவன் மகன் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் )ஈழத்து மணிபல்லவ நாக இளவரசி பீலியவளையை திருமணம் செய்து இருந்தான்.அவர்களுக்கு பிறந்த மகன் பிற்காலத்தின் தொண்டமான் இளம்திரையன் என அழைக்கபட்டவனும் இந்த கடல் அழிவில் குழந்தையாக தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தவன். இளமையில் (குழந்தையில்) திரையில்(அலையில்)அகப்பட்டு வந்ததால் காரண பெயர் இளம்திரையன்.எனவே அவனுடன் திரையில் பாதிக்க பட்டு வந்த மக்களும் தொண்டை மண்டலத்தில் வந்து வாழ்ந்தார்கள்.இவன் வந்த பின்னரே இந்த இடத்துக்கு தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.அதற்கு ஈழத்தின் தொண்டைமானாறு பற்றி குறிப்பிட்டும் கடல் அழிவால் இலங்கையின் தொண்டை போன்ற வடிவில் அமைந்த பகுதியில் இருந்து வந்தவன் என்பதாலும் தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.
ஒரு காலத்தில் இலங்கை பூராக மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்றும் யாழ் குடாநாடுதான் மணிபல்லவம் என்றும் அதில் ஒரு தீவு தான் மணி பல்லவம் என்றும் பல கருத்துக்கள் இருந்தாலும் மணிபல்லவம் என்பது ஈழம் சார்ந்தது என்பது உறுதி.
மணி பல்லவத்தில் இருந்து தொண்டை மண்டலத்துக்கு வந்தகாலத்தில் இவர்கள் சோழர்களுக்கு போர்களில் உதவியாக இருந்தார்கள்.அதனால் சோழராச்சியம் மிகவும் விரிவடைந்தது. சோழ ராச்சியம் விரிவடைந்து சில காலத்துக்கு பின் தொண்டை மண்டலத்துக்கு இளம்திரையன் அரசன் ஆனான். பின்னர் சோழர்களுக்கு வம்ச குழப்பம் ஏற்பட்டு சோழ ராச்சியம் இரண்டாக பிரிக்கபட்டு காஞ்சி புரத்திலும்,உறையூரிலும் இரு அரசாக இயங்க தொடங்கியது காலபோக்கில் இவர்கள் மோதி நிற்க ஈழத்தில் இருந்துவந்தவர்கள் இளம்திரையனுக்கு பின்னர் பல்லவர்களாக உருவெடுத்தார்கள்.
தமிழக மற்றும் ஆந்திர ஆய்வாளர்கள் பல்லவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்ற உண்மையை மறைக்க பல தரப்பட்ட பொய்களை கொண்டுவந்தார்கள்.சிலர் பல்லவர்கள் தமிழர்களே இல்லை என்ற கருத்தை கூட முன்வைத்தார்கள்.சிலர் பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூட பொய் சொன்னார்கள்.பக்கத்தில் இருந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்கள் தென்னிந்தியாவை அண்ணளவாக 700 வரிடம் ,(கி பி 225 /கி பி 912)சிற்ரரசாகவும்(225/575 தொண்டை மண்டலம் )(575/846 தென்னிந்தியா முழுவதும் பேரரசாகவும் பின்னர் 846 /912 சிற்ரரசாகவும் ஆண்டார்கள் என்பதை சொல்ல ஏற்றுகொள்ள மனம் இல்லை.அதனால் இன்றுவரை வரலாற்று குழப்பம் தொடர்கின்றது.
தென்னிந்தியா என்றால் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் தான் என்ற மூவேந்தர் மாயை 700 வரிடம் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவர்களான ஈழத்தமிழர்களை ஏற்றுகொள்ள மறுக்கின்றது.
பல்லவர்கள் ஒருபோதும் சோழர்களை ஏமாற்றி அரசை பறித்தவர்கள் அல்ல.உதவியவர்களுக்கு துரோகம் செய்தவர்களும் அல்ல. சோழர்கள் இரண்டு பட்டு நின்ற வேளையில் பாண்டியர்களும் அவர்களோடு மோதி நின்றார்கள். இவர்கள் தொண்டை மண்டலத்தில் சிற்றரசாக தனித்து செயற்பட தொடங்கியகாலம். அண்ணளவாக இளம்திரையனுக்கு 400 வருடங்களுக்கு பின்னர் ஆகும்.(இளம்திரையன் காலம் கி மு 225) (பல்லவர்கள் தனித்து செயற்பட தொடங்கியது கி பி 225 )அதுவரை இளம் திரையன் வம்சத்துக்கு உதவியாக இருந்து இருக்கின்றார்கள்.கி பி 225 அளவில் இந்திய வடக்கில் இருந்து வந்த களப்பிரர்கள் தமிழகத்தின் பகுதிகளை கைப்பற்ற சில பத்து ஆண்டுகளாக போராடி 250/300 அளவில் தொண்டை மண்டலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை கைப்பற்றினார்கள்.இவர்களுக்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களுக்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தும் போர் நடந்தது கி பி 575 இல் களப்பிரர்களை முழுமையாக அழித்து முழு தமிழகத்தையும் பல்லவர்கள் கைப்பற்றினார்கள்.
களப்பிரர்கள் ஆண்டகாலத்தை தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (கி பி 250/575)என்று அழைக்கின்றார்கள்.இந்த காலத்தில் தான் கடை சங்கம் முடிவுக்கு வந்தது.தமிழ் மொழி வளர்சி முழுமையாக தடைபட்டது. சைவ கோவில்கள் இடிக்கப்பட்டது.சைவ சமயத்தவர்கள் தாக்க பட்டார்கள்.காளாமுகர்கள், கபாலிகர்கள் என புதிய பல்வேறு சமயங்கள் உருவாகியது. மொத்தம் 72 சமயங்கள் என்று சில குறிப்புக்களில் வருகின்றது.இவர்களிடம் இருந்து தமிழகத்தை கி பி 575 இல் முழுமையாக மீட்டு தமிழக தமிழர்களின் வாழ்வை உறுதிப்படுத்தி கட்டிட கலைகள் சிற்ப கலைகள் ஓவிய கலைகள் என கலைகளை வளர்த்து, நாயன்மார்களை ஆதரித்து பக்தி இலக்கியங்களை தோற்றுவித்தவர்கள் பல்லவர்கள்.பல்லவர்களின் காலத்தில் தான் பல சக்தி இலக்கியங்களை இயற்றிய ஆதி சங்கரரும் வாழ்ந்தார்.(சங்கரர்காலம் கி பி 788/820) இவர் தமிழ் உலகிற்கு செய்தது மகத்துவமான சேவை சமய போட்டியால் நலிவுற்று சண்டை இட்டு கொண்டு இருந்த சமயங்களில் மாற்று கருத்து கொண்டவர்களை வாதத்தில் வென்று ஒத்துழைத்து நின்ற 6 சமயங்களை ஒன்றாக இணைத்து இந்துமதம் என்பதை தோற்றிவித்தார்.
எனவே தமிழக வரலாற்றில் பல்லவர்கள் வரலாறு ஒரு முக்கியமான வரலாறு அவர்கள் இல்லாது இருந்தால் இன்றைக்கு தமிழ் மொழியும் எமது கலைகளும் தலைகீழாக மாறி இருக்கும். தொடர்ந்தும் மூவேந்தர்கள் என்று சேர சோழ பாண்டியர்களை மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்காமல் அண்ணளவாக 700 ஆண்டுகள் தனித்தும் அதற்கு முதல் 400 ஆண்டுகளாக சோழர்களுடன் இணைந்து பல்லவர்கள் என்ற பெயரை பாவிக்காமல் சோழர்களுக்கு உதவியாக தென் இந்தியாவை ஆண்ட பல்லவர்களை வரலாற்றில் சிறப்பிக்க வேண்டும்.இவர்கள் கடல் அழிவால் தொண்டை மண்டலம் வந்த பின்னரே (கி மு 200/300)இன்று தமிழ் கூறும் நல்லுலகம் வைத்திருக்கும் அநேகமான நூல்கள் உருவாகின இதை யாரும் மறுக்க முடியாது.தொல்காப்பியம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி மகாபாரதம் ,இராமாயண இதிகாசம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி சங்க இலக்கியங்கள் அகநானூறு புறநானூறு தொடங்கி ஐம் பெரும் காப்பியங்கள் வரை அனைத்தும் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி எல்லாம் சிந்தித்து பார்த்தால் இவர்கள் வருகைக்கு பின்னரே ஏற்பட்டது.அதுவரை எழுத்துவடிவம் பெறாமல் செவிவழியாகவே சொல்லப்பட்டு வந்தது.எனவே இலக்கியங்கள் எழுத்துவடிவ தோற்றத்துக்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு மிகவும் இருந்து இருக்கிறது என்பது வெளிப்படை.
இதிகாசங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் மூல பிரதிகள் வட மொழியில் இருக்கின்றது என்பதால் இவற்றை எழுதியவர்கள் வடவர்கள் என்று கூறுகின்றார்கள். வட மொழியான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை சொந்த எழுத்துவடிவம் இல்லை.இது தெளிவான ஒன்று அவர்களிடமே சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.அவர்கள் எழுதும் எழுத்து வடிவம் நாகலோகத்து நாகர்கள் உருவாக்கிய நாகரி எழுத்துவடிவம் இந்த நாகரி எழுத்துவடிவத்தை கொண்டுதான் இதை கண்டு பிடித்த தமிழர்கள் (பண்டைய நாகர்கள் எந்த கலப்பும் இன்றி முழுமையாக தமிழர்கள்)பண்டைய காலத்தில் தமிழை எழுதினார்கள்.பின்னர் பிற்காலத்தில் இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துவடிவத்தை கண்டு பிடித்ததும் தமது மூதாதையர் கண்டு பிடித்த எழுத்து வடிவத்தை சமஸ்கிரிததுக்கு கடன் கொடுத்துவிட்டு ,இன்று வட மொழி என்று வேறு கூறுகின்றார்கள்.(ஒரு எழுத்துவடிவத்தை கொண்டு பல மொழிகளை எழுதலாம்.உதரணத்துக்கு நாகரி யை இப்ப தேவநாகரி என்று மாற்றி அந்த எழுத்துவடிவத்தை கொண்டு இந்தியாவிலேயே பல மொழிகளை எழுதுகின்றார்கள்.மேற்கு உலக நாடுகளில் ஆங்கில எழுத்தை கொண்டு பல நாட்டு மொழிகளை எழுதுகின்றார்கள்)
முதல் தோன்றிய இலக்கியங்கள் நாகரி எழுத்தில் அதில் தேர்சி பெற்று இருந்த நாகர்கள் வாழ்ந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்களின் உதவியோடு எழுதியதை பிற்கால சோழர்காலத்தில் (கி.பி 846 பின்) இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துக்களில் எழுதினார்கள். இந்த மொழி மாற்றம் செய்த பொழுதுதான் வரலாறுகள் வடவர்களுக்கு சார்பாக அனேகமாக மாற்றம் பெற்றது. இதற்கு காரணம் பிற்கால சோழர் காலத்தில் நாம் இன்று வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று பார்பனர்கள் என்று சொல்பவர்களை கோவில் பூசைக்களுக்கும் அரச காரியங்களுக்கும் அழைத்துவரும் முறை தொடங்கியது.அந்த காலத்தில் தான் தேவதாசிகள் முறையும் தொடங்கியது.இதற்கு முற்பட்ட காலங்களில் பிராமணர்கள்(பட்டர்கள் ) என்ற பெயரில் கோவில்களுக்கு பூசை செய்தவர்கள் பண்டைய தமிழர்களில் தோன்றியவர்கள் வடவர் கலப்பு இல்லாதவர்கள்.
வடக்கில் இருந்து வந்த பார்பனர்கள் அரசர்களை புகழ்ந்து பாடும் மரபை ஏற்படுத்தி புகழ்மாலைகளை பாடி அவர்களை வர்ணனைகளால் மூளை சலவை செய்து தாங்கள் நினைத்ததை வரலாறுகளில் எழுதினார்கள். இந்தவகையில் எழுதப்பட்டதே புராண இதிகாசமாக இன்று நாம் வாசிக்கும் புத்தகங்கள்.மூலநூல்களை தாங்கள் எடுத்து கொண்டு போனார்கள்.அதை தழுவி எழுதுகின்றோம் என்று எம்மவர்களை ஏமாற்றினார்கள். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தமிழர்களை அரக்கர்கள் குரங்குகள் என்று கூறியது இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வீர மாமுனிவரின் தமிழ்ப் பணிகள்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.வீர மாமுனிவர் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீர மாமுனிவர் தமிழ் உரைநடையின் தந்தை