மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை போன்றவை அறிதல்.
1. தன்வினை வாக்கியம்
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.
முருகன் திருந்தினான்
2.பிறவினை வாக்கியம்
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்
தன்வினை ------- பிறவினை
திருந்தினான் ------- திருத்தினான்
உருண்டான் ------- உருட்டினான்
பயின்றான் ------- பயிற்றுவித்தான்
பெருகு ------- பெருக்கு
செய் ------- செய்வி
வாடு ------- வாட்டு
நடந்தான் ------- நடத்தினான்
சேர்கிறேன் ------- சேர்க்கிறேன்
ஆடினாள் ------- ஆட்டுவித்தாள்
பாடினான் ------- பாடுவித்தான்
கற்றார் ------- கற்பித்தார்
தேடினான் ------- தேடுவித்தான்
உண்டாள் ------- உண்பித்தாள்
அடங்குவது ------- அடக்குவது
3.செய்வினை வாக்கியம்
ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
(எ.கா) பாரதியார் குயில் பாட்டைப் பாடினார்.
தச்சன் நாற்காலியைச் செய்தான்
அவள் மாலையைத் தொடுத்தாள்
ராதா பொம்மையைச் செய்தாள்
4.செயப்பாட்டு வினை வாக்கியம்
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
(செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)
தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை போன்றவை அறிதல்.
1. தன்வினை வாக்கியம்
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.
முருகன் திருந்தினான்
2.பிறவினை வாக்கியம்
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்
தன்வினை ------- பிறவினை
திருந்தினான் ------- திருத்தினான்
உருண்டான் ------- உருட்டினான்
பயின்றான் ------- பயிற்றுவித்தான்
பெருகு ------- பெருக்கு
செய் ------- செய்வி
வாடு ------- வாட்டு
நடந்தான் ------- நடத்தினான்
சேர்கிறேன் ------- சேர்க்கிறேன்
ஆடினாள் ------- ஆட்டுவித்தாள்
பாடினான் ------- பாடுவித்தான்
கற்றார் ------- கற்பித்தார்
தேடினான் ------- தேடுவித்தான்
உண்டாள் ------- உண்பித்தாள்
அடங்குவது ------- அடக்குவது
3.செய்வினை வாக்கியம்
ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
(எ.கா) பாரதியார் குயில் பாட்டைப் பாடினார்.
தச்சன் நாற்காலியைச் செய்தான்
அவள் மாலையைத் தொடுத்தாள்
ராதா பொம்மையைச் செய்தாள்
4.செயப்பாட்டு வினை வாக்கியம்
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
(செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)
தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
![பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
...எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும். அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது..
அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....
பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார். இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துவோம் அவரை..
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை..
[நன்றி : The Hindu]](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash2/t1.0-9/420279_344207812284380_466836821_n.jpg)


