வியாழன், 12 மார்ச், 2015

மீன் குழம்பு செய்யுங்க..


மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்கு தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். அசைவ வகைகள் பற்றி காண்போம். முதலில் மீன் குழம்பு..

தேவையானவை 

  •  500 கிராம் விரால் மீன்                                   
  • 100 கிராம் சின்ன வெங்காயம்                     
  • 150 கிராம் தக்காளி                                           
  • 50   கிராம் பூண்டு                                              
  • 10  மிளகாய் 
  • 1    குழிக்  கரண்டி மல்லி 
  • 2  ஸ்பூன் வெந்தயம்
  • 1 /4  ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1  ஸ்பூன்  சோம்பு
  • 2 ஸ்பூன் சீரகம் 
  • 1/4 ஸ்பூன் மிளகு 
  • புளி எலுமிச்சை அளவு 
  • தேவையான அளவு நல்லெண்ணய்
  • தேவையான அளவு உப்பு 
  • கறிவேப்பிலை  சிறிது 
  • கடுகு சிறிது 

செய்முறை :

                       வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டை மைய தட்டி வைக்கவும். வாணலியில்  எண்ணய்  விட்டு சீரகம்,மிளகு,மல்லி, மிளகாய்,பூண்டு,சோம்பு ஆகியவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.
 புளியை கரைத்து  வடிகட்டி வைக்கவும்.
                           கனமான பாத்திரத்தில் 100 மில்லி நல்லெண்ணயை விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலையை  போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை கொட்டி சிறிது உப்பு சேர்த்து வதக்கி , அரைத்த மசாலாவை கலந்து வதக்கி , புளி நீரை  விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு கழுவிய மீன் துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வையுங்க....பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாதத்துடன் கலந்து  சாப்பிடுங்க.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக