புதன், 3 செப்டம்பர், 2014

இயற்கை உணவுகள்-பழங்கள்

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 
இயற்கை உணவுகளின் பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க......
 பழவகைகள்..

இலஆங்கிலம்தமிழ்
1Appleகுமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2Ambarella அம்பிரலங்காய்
3Annona சீத்தாப்பழம்
4Annona muricata முற்சீத்தாப்பழம்
5Apricot சர்க்கரைப்பாதாமி
6Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7Banana வாழைப்பழம்
8Batoko Plum லொவிப்பழம்
9Bell fruit பஞ்சலிப்பழம், ஜம்பு
10Bilberry அவுரிநெல்லி
11Blackberry மேற்கத்திய நாவற்பழம்
12Black currant கறுந்திராட்சை
13Blueberry ஒரு வகை நெல்லி
14Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா
15Butter fruitஆனைக்கொய்யா
16Cantaloupe மஞ்சள் நிற முலாம்பழம்
17Cashew fruitமுந்திரிப்பழம், கஜு
18Cherimoya சீத்தாப்பழம்
19Cherry சேலாப்பழம்
20Chickoo சீமையிலுப்பை
21Citron கடார நாரந்தை
22Citrus aurantium கிச்சலிப்பழம்
23Citrus reticulata கமலாப்பழம்
24Citrus sinensis சாத்துக்கொடி
25Clementine நாரந்தை
26Cocoa fruit கொகோப்பழம்
27Cranberry குருதிநெல்லி
28Cucumber வெள்ளரிப்பழம்
29Custard apple சீத்தாப்பழம்
30Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
31Date fruit பேரீச்சம் பழம்
32Devilfig பேயத்தி
33Dragon fruit ட்றொகன் பழம்
34Duku டுக்கு
35Durian முள்நாரிப்பழம், தூரியன்
36Emblica நெல்லி
37Eugenia rubicunda சிறு நாவற்பழம்
38Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
39Fig அத்திப்பழம்
40Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
41Gooseberry கூஸ்பெறி
42Grapefruitபம்பரமாசு
43Grapes கொடி முந்திரி, திராட்சை
44Guava கொய்யாப்பழம்
45Honeydew melon தேன் முழாம்பழம்
46Huckle berry(ஒரு வித) நெல்லி
47Jack fruit பலாப்பழம்
48Jumbu fruit ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49Jamun fruit நாகப்பழம்
50Kiwi fruit பசலிப்பழம்
51Kumquat (பாலைப்பழம் போன்ற ஒரு  பழம்)
52Kundang மஞ்சள் நிற சிறிய பழம்
53Lansium லன்சியம்
54Lemon வர்க்கப்பழம்
55Lime எழுமிச்சை
56Loganberry லோகன் பெறி
57Longan கடுகுடாப் பழம்
58Louvi fruit லொவிப்பழம்
59Lychee லைச்சி
60Mandarin மண்டரின் நாரந்தை
61Mango மாம்பழம்
62Mangosteenமெங்கூஸ் பழம்
63Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64Morus macroura மசுக்குட்டிப்பழம்
65Mulberry முசுக்கட்டைப் பழம்
66Muscat grape திராட்சை
67Orange தோடம்பழம்
68Palm fruitபனம் பழம்

69Papaya பப்பாளி பழம்
70Passion fruit கொடித்தோடை
71Peach குழிப்பேரி
72Pear பேரி, பெயார்ஸ்
73Pine apple அன்னாசிப் பழம்
74Plum ஆல்பக்கோடா
75Pomegranateமாதுளம் பழம், மாதுளை
76Pomelo பம்பரமாசு
77Pulasan (ஒரு வகை)றம்புட்டான்
78Quinceசீமை மாதுளம்பழம்
79Rambutan றம்புட்டான்
80Rasberry புற்றுப்பழம்
81Red banana செவ்வாழைப் பழம்
82Red Currant ஒரு வித லொவி
83Sapodilla சீமையிலுப்பை
84Satsuma நாரத்தை
85Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
86Strawberry செம்புற்றுப்பழம்
87Syzygium ஜம்புப்பழம்
88Tamarillo குறுந்தக்காளி
89Tamarind புளியம்பழம்
90Tangerine தேன் நாரந்தை
91Tomato தக்காளிப்பழம்
92Ugli fruit முரட்டுத் தோடை
93Water melon வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94Wax jumbu நீர்குமளிப்பழம்
95Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
96Woodappleவிளாம்பழம்

குறிப்பு:

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை . காரணம் உலகின் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

திங்கள், 1 செப்டம்பர், 2014

ஆண்டு விழாக்களின் பெயர்கள் விவரம்.

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் நடத்தப்படும் ஆண்டுவிழாவின் பெயர்கள் பின்வருமாறு.

ஆண்டு விழா பெயர்கள்
வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா

Wednesday, 16 March 2011

ஆண்டு நிறைவு விழாக்களின் பெயர்கள்

ஆண்டு
தமிழில்
IN ENGLISH
1
காகித விழா ஆண்டு
PAPER JUBILEE
2
பருத்தி விழா ஆண்டு
COTTON JUBILEE
3
தோல் விழா ஆண்டு
LEATHER JUBILEE
4
புத்தகங்கள் விழா ஆண்டு
BOOKS JUBILEE
5
இரும்பு விழா ஆண்டு
IRON JUBILEE
6
மரம் விழா ஆண்டு
WOOD JUBILEE
7
வெண்கல விழா ஆண்டு
BRONZE JUBILEE
8
மின் உபரகரண விழா ஆண்டு
ELECTRICAL APPLIANCES JUBILEE
9
மின்கல விழா ஆண்டு
BATTERY JUBILEE
10
தகர விழா ஆண்டு
TIN JUBILEE
11
உருக்கு விழா ஆண்டு
STEEL JUBILEE
12
பட்டு விழா ஆண்டு
SILK JUBILEE
13
ஜரிகை விழா ஆண்டு
LACE JUBILEE
14
தந்தம் விழா ஆண்டு
IVORY JUBILEE
15
படிகம் விழா ஆண்டு
CRYSTAL JUBILEE
20
சீனக் களிமண் விழா ஆண்டு
PLASTER OF PARRIES JUBILEE
25
வெள்ளி விழா ஆண்டு
SILVER JUBILEE
30
முத்து விழா ஆண்டு
PEARLS JUBILEE
35
பவள விழா ஆண்டு
CORAL JUBILEE
40
மாணிக்க விழா ஆண்டு
RUBY JUBILEE
45
இந்திர நீல விழா ஆண்டு
SAPPHIRE JUBILEE
50
தங்க விழா ஆண்டு
GOLDEN JUBILEE
55
மரகத விழா ஆண்டு
EMERALD JUBILEE
60
வைர விழா ஆண்டு
DIAMOND JUBILEE
75
கருப்புத் தங்க விழா ஆண்டு
PLATINUM JUBILEE

COURTESY: JOURNAL OF P.T.A.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014



தமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் !
இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை, இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம். ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதின் காரணத்தினாலேயே இக்கட்டுரை எழுதுகிறேன்.
வீட்டு வாடகைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் :
• குடித்தனக்காரர்களின் உரிமைகள்
• வீட்டுக்காரர்களின் கடமைகள்
• குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்
• நியாய வாடகை
• வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்
• காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்
• வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்
• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.
மேற்குறிப்பிட்ட கூறுகளை விளக்கி இதன்மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரர்களின் உறவை மேம்படுத்துவோம். குறிப்பாக “வீட்டு உரிமையாளர்”, “குடித்தனக்காரர்”, ”குடியிருப்பு பகுதி”, ”கட்டிடப்பகுதி” இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரருக்கு இடையிலான வாடகை ஒப்பந்தம் :
வீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.
குடித்தனக்காரர்களின் உரிமைகள் :
குடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.
வீட்டுக்காரர்களின் கடமைகள் :
வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.
வாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
வாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.
குடித்தனக்காரர்களின் பொறுப்புகள் :
குடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ அந்தத்தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.
குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.
நியாய வாடகை :
1).இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.
2).குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.
3).குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.
குறிப்பு :
ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.
வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்:
குடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,
1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,
அ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். அல்லது,
ஆ).அவ்வீடு எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ, அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,
2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார். அல்லது
3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,
4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,
5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.
6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.
என்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளிவிடலாம்.
காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள் :
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை(SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.
வாடகையை கொடுக்கும் மற்றும் பெறும் முறை :
வீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும். வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பாவாடை தாவணி!

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். பாவாடை தாவணியில் பார்த்த உருவங்களை காணீர்............



எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட காணவில்லை உன் பெயரை.
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட தாவணியே...

கிராமபுறங்களில் விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும் தொலைந்து போய்விட்டாயே?

வயல்வெளிகளையும்,உன்னையும் இனிவரும்
தலைமுறை இன்டர்நெட்டில்தான் காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ் என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும் எடுத்துவிட்டது நைட்டி.

இன்று கொஞ்சமாவது
தன் படங்களில் உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...

காதில் நுழைந்த பூச்சி



காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

தங்க நகை வாங்கும் போது கே.டி.எம் முத்திரை பார்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

தங்க நகை வாங்கும் போது கே.டி.எம் முத்திரை பார்ப்பது அவசியமா?
#########################################################‪#‎ 

                      தங்க‬ நகை வாங்கும்போது தரமான தங்கமா என்று பார்த்து நாம் வாங்குவோம். 916 ஹால் மார்க் முத்திரை என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு நகையை வாங்குவோம். அதே கே.டி.எம். முத்திரை இருந்தால் அது சுத்தத் தங்கம் என்று நினைத்து, வாங்கித்தள்ளுகிறார்கள் நம் மக்கள். ஆனால், கே.டி.எம். என்பது தங்க நகைகளின் தரத்தைக் குறிப்பதல்ல என்கிறார் பதிவுபெற்ற நகை மதிப்பீட்டாளர் கே.சுவாமிநாதன்.
'பொடி’ பயன்பாடு!
தங்க ஆபரணங்கள் செய்கிறபோது இரு பாகங்களை இணைக்க இணைப்பான்கள் (Soldering) பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த இணைப்பான்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மூன்றும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து செய்யப்பட்ட கலப்பு உலோகமாகும். இதற்கு 'பொடி’ என்று வழக்குச் சொல் உண்டு.
இந்த 'பொடி’ பயன்படுத்திச் செய்யும் நகையின் தரத்திற்கேற்ப விகிதாசாரங்கள் மாறுபடும். இந்த 'பொடி’யை ஆபரணத்தில் இணைக்கும்போது இணைப்பை ஏற்படுத்திவிட்டு (வெல்டிங் போல) இதுவும் ஆபரணத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், இந்த 'பொடி’யால் செய்த நகையை மறுபடியும் உருக்கும்போது அதன் தரம் குறையும். ஏனென்றால் நகையில் இருக்கக்கூடிய 'பொடி’-யும் (தங்கம், வெள்ளி, செம்பு) சேர்ந்து உருகுவதால் நகையின் தரம் குறையும். இந்த பொடியை பயன்படுத்திச் செய்யப்பட்ட தங்க நகை ஆபரணங்களில் 22 கேரட் / 20 கேரட் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, 22 கேரட் நகையை உருக்கினால் 20 கேரட்டாக தரம் குறையும் என்பதுதான் இதன் அர்த்தம்.
கேட்மியம்!
இந்த பிரச்னையைப் போக்க சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு 'கேட்மியம்’ என்ற வெள்ளை நிறத்திலான உலோகத்தைப் 'பொடி’யாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதன் விலை ஒரு கிராமிற்கு பத்து ரூபாய். கேட்மியம் என்பதன் சுருக்கம்தான் கே.டி.எம். பொடியில் எப்படி தங்கம், வெள்ளி, செம்பு கலந்த கலவையை இணைப்பானாக பயன்படுத்துகிறார்களோ, அதுபோல தங்கம், கேட்மியம் இரண்டையும் கலந்து உலோகமாக்கி இணைப்பானாக ஆபரணத்தின் இணைப்பு பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இணைப்பின்போது கேட்மியம் ஆபரணத்தை இணைத்துவிட்டு ஆவியாகிவிடும். ஆகவே, கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களை உருக்கும்போது தரம் குறையாது. காரணம், தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகமும் அந்த நகையில் இருக்காது. ஆகவேதான், கே.டி.எம். ஆபரணங்களுக்கு சேதாரம் அதிகமாக இருக்காது.
தரமல்ல!
தற்போது 'ஹால்மார்க்’ முத்திரை நகைகள் வந்துள்ளது. மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த முத்திரையை அளிக்கிறது. கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களுக்கு 'ஹால்மார்க்’ முத்திரை தருவது கிடையாது. சில மிகப் பெரிய நிறுவனங்கள் '916 கே.டி.எம். ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகள் கிடைக்கும்’ என்று விளம்பரம் செய்கின்றன. இது மிகவும் தவறானது. கே.டி.எம். இணைப்பு இருந்தாலே 'ஹால்மார்க்’ முத்திரை அளிக்கும் நிறுவனங்கள் முத்திரை தராமல் நிராகரித்துவிடும். ஹால்மார்க் நகை வாங்கும்போது எவ்வளவு சிறிய நகையாக இருந்தாலும் ஐந்து விதமான லேசர் முத்திரை குறித்திருப்பார்கள்.
தடா உலோகம்!
ஆபரணத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இந்த கேட்மியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆபரணத்தைச் செய்யும்போது கேட்மியம் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. காரணம், ஆபரண இணைப்பில் கேட்மியம் இணைப்பிற்கு 'ஊக்கியாக’ செயல்பட்டு, ஆவியாகும்போது அது நகை செய்பவரின் சுவாசம் மூலம் உடலுக்குள் சென்று கேன்சர் நோய் வந்துவிடும். ஆனால், தடை செய்யப்பட்ட கேட்மியம் உலோகத்தை இன்று வரை இந்தியாவில் நகைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.''
'அப்படியானால் கே.டி.எம். நகையை அணிந்தால் ஆபத்தா?’ என்று அவரிடம் கேட்டோம். ''கிடையவே கிடையாது. ஏனெனில் நகை செய்யும்போது கேட்மியம் ஆவியாகி போய்விடுகிறது. இதனால் கே.டி.எம். நகை அணிபவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. தற்போது துத்தநாகம் (ஞீமிழிசி) இணைப்பானால் இணைக்கப்பட்ட ஆபரணங்கள் விற்பனைக்கு வருகிறது. இதற்கான 'முத்திரை'க்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, நகையில் உள்ள எந்த முத்திரையையும் நம்பாமல் கடைக்காரரின் நம்பிக்கையைப் பொறுத்து நகையை வாங்கலாம்'' என்று முடித்தார் சுவாமிநாதன்.
தங்க நகை பற்றி எவ்வளவு விழிப்போடு இருக்கிறோமோ, அந்தளவுக்கு ஏமாறாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.
நன்றி: ஈகரை. www.sindinga.com

காவல்துறை குறியீடுகள்


                        தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
 
இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  
 
 
Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]
 
Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia