சனி, 13 டிசம்பர், 2014

(1) தமிழில் தட்டச்சலாம் வாங்க - 2014

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.
                   கொங்குத் தமிழ் மன்றம் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப்பதிவில் தமிழில் தட்டச்சு முறைகளும்,பலவிசைகளின் ஒப்பீடும் அவற்றில் சிறந்த முறையான தமிழ்நெட்99 முறையின் சிறப்புகளும் பற்றிக் காண்போம்.இதற்காக இணையத்திலுள்ள அனைத்து வலைத்தளங்களையும் ஆராய்ந்து அதன்பின்னர் நமது அனுபவங்களையும் பதிவிட்டு வருங்கால இளையதலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதோடு நம்ம தாய்மொழியாம் செம்மொழித் தமிழை வளர்ப்போம்.

 தமிழ் விசைப் பலகைகளின் பலவகைகளும் அதன் வடிவமைப்புகளும்;-
 (1)பாமினி முறை விசைப்பலகை.
 (2)மயிலை விசைப்பலகை வடிவமைப்பு

 (3)தமிழ்நெட்'99 முறை விசைப்பலகை வடிவமைப்பு

 (4)தமிழ்நெட்'99முறை விசைப்பலகை வடிவமைப்பு  மற்றும்
                      ^ (கரட்)  குறியீடு  பயன்பாட்டுடன்

 (5)தமிழ்நெட்'99முறை விசைப்பலகை வடிவமைப்பு  மற்றும்
      ^  (கரட்) குறியீடு &  # (ஆஏஷ்) குறியீடு பயன்பாட்டுடன்.

 (6)தமிழ் தட்டச்சு இயந்திர முறை வடிவமைப்பு


 (7)தமிழ் தட்டச்சு இயந்திரமுறை வடிவமைப்பு 
               CAPITAL பெரிய எழுத்து பயன்படுத்தியபோது
 (8)தமிழ் தட்டச்சு இயந்திரமுறை வடிவமைப்பு
                        # குறியீடு பயன்படுத்தியபோது


 (9) தமிழ் ஒலிப்புமுறை


(10) தமிழ் அச்சுப்பதிவு முறை (INSCRIPT)
    தமிழில் தட்டச்ச இன்னும் பல வகைகள் உள்ளன.அவைகளனைத்தும் அந்தந்த தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்பவும்,தம் விசைப்பலகையை பயன்படுத்துபவர்கள் மற்றவிசைப்பலகையினைப்பயன்படுத்தக்கூடாது என்ற வணிகநோக்குடனும் எழுத்துக்கள் அமைவிடங்களை சற்று மாற்றியும்,வேறு விசைக்குறியீடுகளைப்பயன்படுத்தியும் எழுத்துப் பதிவிடும் வகையில் விசைப்பலகைகளை வடிவமைத்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.வணிக நோக்கில் காரணம் அந்த முறையினை பழகியவர்கள் வேறு முறைகளுக்கு மாற சிரமப்படுவார்கள்.அப்போது பழகிய முறையையை பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் அதையே பழகுமாறு விளம்பரம் செய்வார்கள்...எளிதான மிதிவண்டியே இன்னொருவரின் பயன்பாட்டிலுள்ளதை ஒருநாள் பயனுக்கு எடுத்துப்பயணிக்கும்போது நமக்கு எத்தனை சிரமத்தைக்கொடுக்கிறது.அப்படியென்றால் கணினி சம்பந்தப்பட்ட விசைகளை பயன்படுத்த சிரமம் வரத்தானே செய்யும்....தற்போது தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்த பதிவில்  ஆண்டிராய்டு போனில் தமிழ்த்தட்டச்சு முறை பற்றிக் காண்போம்.
   உங்கள் அன்பன் 
 பரமேஸ்வரன்.C
 சத்தியமங்கலம் - ஈரோடு மாவட்டம்.

கொங்குத் தமிழ் மன்றம்-2014

மரியாதைக்குரியவர்களே,
                               வணக்கம்.''கொங்குத் தமிழ் மன்றம்'' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம். 
                   இந்த வலைப்பூவில் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ்மொழியின் தலை சிறந்த இலக்கியங்களை தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கும்,தமிழார்வம் மிக்க மற்றவர்களுக்கும் இணையத்தின் மூலம் எளிதாகவும் இலவசமாகவும் கிடைக்க ஏற்பாடு செய்துவரும் மதுரைத்திட்டம் போன்ற தமிழ்த்தொண்டு புரியும் தமிழ்ச் சமூக ஆர்வலர்களை இங்கே பகிர்ந்து வாழ்த்துவோம்.
       உலகளவிலுள்ள தமிழார்வலர்களோடு ஒன்றிணைவோம்.
         தமிழ் வலைத்தளங்களையும்,வலைப்பூக்களையும் இங்கே பகிர்ந்து தமிழார்வலர்களின் தேடுதலுக்கான  நேர விரயத்தை தவிர்த்து பயன்பெற உதவிடுவோம்.
 இணையமும் தமிழும் & கணினியும் தமிழும் &நகர்பேசியும் தமிழும் - என பல்வேறு தளங்களில்  -கருத்தரங்கம் நடத்துவது மற்றும் தமிழ் இணையம் தொழில் நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடத்தும் நிகழ்வில் தமிழ்நெட்99 முறையில்  தமிழில்  தட்டச்சு செய்வது,மின்னஞ்சல் உருவாக்குவது,ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தனித்தளம் துவக்குவது, பிளாக்கர் போன்று தமிழில் வலைப்பக்கம் உருவாக்குவது,நகர்பேசியில் தமிழைப்பயன்படுத்துவது,ஆண்டிராய்டு போன்ற ஸ்மார்ட்போன்களில் தமிழ் விசைப்பலகையை நிறுவல் செய்து தமிழ்த்தட்டச்சு செய்யும் பயிற்சி,கணினியிலும் நகர்பேசியிலும் தமிழில் இணையத்தில் தகவல்களைத்தேடுவது,காணொளிகளை உள்ளீடு செய்வது,என பல பயன்பாடுகளை அறிந்துகொள்ளச்செய்து தமிழால் இணையத்தை வெல்வோம் என உறுதி ஏற்போம். மேலும் திருக்குறள் போன்ற நூல்களின் சிறப்பினை பகிர்ந்திடுவோம்....
                   என அன்பன் 
உங்கள் பரமேஸ் டிரைவர்-
சத்தியமங்கலம்-
ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு     paramesdriver@gmail.com 
அழைக்க         +91 9585600733